விவசாயத்திற்கான திட்டங்கள்

விவசாயம் தான் நாட்டின் முதுகெலும்பாகும், அந்த வகையில் விவசாயத்திற்காக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் புதிதாக பதவியேற்றுள்ள தவெக அரசு, விவசாயிகளின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தது. இதற்கு ஏற்ப தமிழ்நாட்டில் சிறு, குறு மற்றும் இதர விவசாயிகளுக்கு ரூ. 75,000 வரை முழுமையான பயிர் கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.75,000 வரை முழுத் தள்ளுபடியும், சிறு, குறு, இதர விவசாயிகளுக்கு ரூ. 75,000 முதல் ரூ. 1,00,000 வரையும், அதிகபட்சம் ரூ. 75,000 தள்ளுபடியும்,ரூ. 1 லட்சத்துக்கு மேல் அதிகபட்சம் ரூ. 35,000 தள்ளுபடி செய்யப்படும் என உத்தரவிடப்பட்டது. ஆனால் பயிர்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பயிர் கடன் தள்ளுபடி

இந்த நிலையில் விவசாயிகளிடம் இருந்து பயிர்கடன் வசூலிப்பது தொடர்பாக முக்கிய உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அனைத்து மண்டல இணைப்பதிவாளர்கள்,அனைத்து மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளின் மேலாண்மை இயக்குநர்களுக்கு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், 2026-27ஆம் நிதியாண்டில் தகுதி உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க் கடன் வழங்குவது தொடர்பாக அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பயிர்க் கடன் தள்ளுபடித் திட்டம் 2026-இன் கீழ் பகுதி தள்ளுபடித் தொகை பெற்ற விவசாயிகள், எஞ்சியத் தொகையினை முழுமையாக செலுத்தி கடனை முடிவு கட்டாமல் தவணை தவறியுள்ள நேர்வில், அக்கடனை வசூல் செய்ய கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அறியப்படுகிறது.

பயிர்க் கடன் நிலுவை தொடர்பான அனைத்து வசூல் நடவடிக்கைகளையும் மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும்.

பயிர்க் கடனை முழுமையாக நிலுவையின்றி திருப்பி செலுத்திய விவசாயிகளுக்கு 30.09.2026-க்குள் புதிய பயிர்க் கடன் வழங்கிட வேண்டும்.
மேற்காணும் அறிவுரைகளை அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கும் தொடர்புறுத்தி, அவை வழுவாது பின்பற்றப்படுவதை உறுதி செய்திடவும், தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளவும் மண்டல இணைப்பதிவாளர்கள் மற்றும் மத்தியக் கூட்டுறவு வங்கிகளின் மேலாண்மை இயக்குநர்கள் அறிவுறுத்தப்படுவதாக அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article