TN Chief Secretary: தலைமை செயலாளர் சாய்குமாரை தனது நிர்வாக ஆலோசகராக நியமிக்க, முதலமைச்சர் விஜய் பரிசீலிப்பதாக பல காலமாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதிய தலைமை செயலாளர்?

முதலமைச்சராக இருப்பவர் மாநிலத்தின் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து கட்டுப்படுத்துவதோடு, அதுசார்ந்த முக்கிய திட்டங்களையும், அறிவிப்புகளையும் வெளியிடும் அதிகாரத்தை கொண்டுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக அரசின் திட்டங்களை செயல்படுத்துவது, கடைக்கோடி மக்கள் வரை கொண்டு சேர்ப்பதற்கான ஒட்டுமொத்த நிர்வாக பணிகளையும் தலைமை செயலாளர் தான் மேற்கொள்கிறார். அத்தகைய முக்கிய பதவியில் தான் தமிழ்நாட்டில் விரைவில் மாற்றம் நிகழப்பட உள்ளதாம். சட்டமன்ற பொதுத்தேர்தலின் போது தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்ட சாய்குமார் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட உள்ளதாகவும், அந்த இடத்திற்கு தனது சொந்த பெயரை கொண்டுள்ள ஒரு IAS அதிகாரியை நியமிக்க முதலமைச்சர் விஜய் பரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

தலைமை செயலாளர் சாய்குமார் மாற்றம்?

தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட சாய்குமாரின் பதவிக்காலம் முடிவடைந்த பிறகும், சாய்குமாருக்கு 6 மாதங்களுக்கு பதவி நீட்டிப்பு வழங்கபட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட ஒருவரையே மாநிலத்தின் உயரதிகாரி பதவியில் தொடரச் செயவதன் மூலம், பாஜகவின் கட்டுப்பாட்டில் விஜய் அரசு உள்ளதா? என எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றன. சொந்தமாக ஒரு தலைமை செயலாளர் பதவியை கூடவா தவெக அரசால் நிரப்ப முடியாது எனவும் குறை சொல்லி வருகின்றனர். இந்நிலையில் தான் தலைமை செயலாளர் பதவியில் இருந்து சாய்குமாரை நீக்கி, வேறொரு நபரை அந்த பதவிக்கு கொண்டு வர முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளாராம்.

சாய்குமாருக்கு புதிய பொறுப்பு?

ஆட்சி நிர்வாகத்தில் முதலமைச்சர் விஜய் உட்பட தவெக அரசை சேர்ந்த பெரும்பாலானோருக்கு எந்தவித அனுபவமும் இல்லாத நிலையில், தலைமை செயலாளர் சாய்குமார் தான் சிறந்த வழிகாட்டியாக செயல்பட்டு வருகிறார். அவருடைய 30 வருட அனுபவத்தை கொண்டு விஜய் பல்வேறு விஷயங்களை கேட்டறிந்து, தன்னை மேம்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால் முதலமைச்சர் மற்றும் தலைமை செயலாளர் இடையேயான பிணைப்பு வலுவாக உள்ளதாம். இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர்களின் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதோடு, சாய்குமாரை தனக்கு நெருக்கமாக வைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளாராம். அதன்படி தனது நிர்வாக ஆலோசகராக அவரை நியமிக்க முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளாராம்.

புதிய தலைமை செயலாளர் யார்?

சாய்குமாரை நிர்வாக ஆலோசகராக நியமிப்பதை தொடர்ந்து காலியாகும் தலைமை செயலாளர் பதவிக்கு, தனது பெயரை கொண்ட ஐஏஎஸ் அதிகாரியை ஒருவரை நியமிக்க முதலமைச்சர் விஜய் பரிசீலித்துள்ளாராம். வெளியாகியுள்ள தகவலின்படி 1993ம் ஆண்டு பேட்ச் தமிழ்நாடு கேடரைச் சேர்ந்த எஸ். விஜயகுமார் ஐஏஎஸ் பெயர் தான் உள்ளதாம். 30 ஆண்டு கால பணி அனுபவத்தில் ஆட்சி நிர்வாகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி பெரும் அனுபவம் கொண்ட இவரை, தலைமை செயலாளராக நியமிப்பது அரசு இயந்திரத்தை மேலும் செம்மைப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த சில வாரங்களில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகக் கூடும் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்: Fishermen Alert: தமிழக மீனவர்கள் இன்று கடலில் செல்லக்கூடாத பகுதிகள், புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி - வானிலை மையம் வார்னிங்

யார் இந்த விஜயகுமார் IAS?

தற்போது தொழில்துறை சார்ந்த முக்கிய அரசு நிறுவனப் பொறுப்புகளிலும், நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி நிறுவனத்தின் (TNUIIFL) கூடுதல் தலைமைச் செயலாளராகவும் விஜயகுமார் பணியாற்றி வருகிறார். தொழில் முதலீடுகள், பொருளாதார மேம்பாடு, அரசுத் திட்டங்களை விரைந்து முடிப்பது போன்றவற்றில் இவருக்கு இருக்கும் நேரடி நிர்வாகத் திறமை இவரை இப்பதவிக்கான முதன்மைத் தேர்வாக கொண்டுவந்துள்ளது. முன்னதாக எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில், அவரது முதன்மைச் செயலாளராகப் பணியாற்றி அரசு நிர்வாகத்தை மிக நெருக்கமாகக் கையாண்டுள்ளார். முதல்வரின் அலுவலகப் பணிகளையும், மாவட்ட ஆட்சியர்களின் செயல்பாடுகளையும் ஒருங்கிணைத்த நல்ல அனுபவம் இவருக்கு உண்டு. எனவே விஜயின் தவெக அரசின் எதிர்காலத்தில் இவர் முக்கிய பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Read Full Article