<p style="text-align: justify;">இன்று சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பேசியபோது ஆவேசமாக திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து பேசினார். இதற்கு தொடக்கம் முதலே எதிர்கட்சித் தலைவர் உதயநிதி உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்தனர். முதல்வர் விஜய் பேசி முடிக்கும் வரை தொடர்ந்து திமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். முதல்வர் விஜய் பேசி முடித்தபிறகு அந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க தங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும், பேச அனுமதி வேண்டும் என்று திமுகவினர் சபாநாயகரிடமும் வலியுறுத்தி வந்தனர். <br /><br />ஆனால், அதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்தார். இதற்கிடையில் அவை முன்னவரான செங்கோட்டையன் திமுகவினரை வெளியேற்ற வேண்டும் என்று சபாநாயகரிடம் தெரிவித்தார். இதை தொடர்ந்து முதல்வர் விஜய் எழுந்து திமுகவினர் பேச அனுமதி அளிக்கும்படி சபாநாயகரை கேட்டுக்கொண்டார். இதன் பின்னர் சபாநாயகர் திமுகவினருக்கு பேச அனுமதி அளித்திருக்கிறார். </p>
Source: Read Full Article