அரை நூற்றாண்டுக்கும் பின் சென்று எல்லாவற்றையும் தோண்டி எடுத்து திமுகவின் போலி பிம்பத்தை உடைப்போம் என முதலமைச்சர் விஜய் விமர்சித்துள்ளார்.

திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் பேசும்போது சட்டமன்றத்தில் எலும்பை உடைப்பேன் என பேசினார். இதுதான் அரசியலா?.. இந்த மாதிரி பேச்செல்லாம் எதற்கு என கேட்கிறேன். திமுக மூத்த நிர்வாகி ஆர்.எஸ்.பாரதி திமுகவுக்கு ஓட்டு போடாதவர்களுக்கு நல்ல சாவு வராது என கூறுகிறார். இத்தனை ஆண்டுகளாக அவர்களுக்கு தானே மக்கள் ஓட்டுப்போட்டார்கள். அந்த மக்களைப் பார்த்து அந்த வார்த்தை சொல்ல மனது வருகிறது என தெரியவில்லை. மக்கள் தீர்ப்பை ஏற்க முடியாத மனசு இருக்காத நீங்கள் அரசியலில் இருக்கிறீர்கள் என்ற கேள்வி தான் வருகிறது.

இதையெல்லாம் விட கொடுமை ஆபாச நதி, வன்ம நிதி பேசுவதை பற்றி பல வருடமாக அரசியலில் இருக்கும் பெரியவர்கள் நாங்கள் அந்த காலத்தில் பேசிய பேச்சா என நியாயப்படுத்துகிறார்கள். அவர்களுக்கு தாங்கள் செய்தது தப்பு என தெரியவில்லை. நாங்க மிசாவை பார்த்தவர்கள் என என்ன கேட்டாலும் சொல்கிறார்கள். எல்லாருக்கும் அந்த மிசாவைப் பற்றிய வரலாறு நன்றாகவே தெரியும். கவிஞர் கண்ணாதாசன் திமுக பற்றி ஒன்று சொன்னார்கள்.

பேசி பழகிய பொய்.. வாங்கிப் பழகிய கை.. போட்டு பழகிய பை என எளிமையாக சொல்லியிருக்கிறார். இதுதான்.. இவ்வளவு தான் திமுக. நம்முடைய அரசு யாருக்கு தனிப்பட்ட அடையாளமாக இருக்காது. தவெகவின் அரசின் அடையாளம் தமிழ்,தமிழர், தமிழ்நாடு தான். தமிழ்நாடு தான் என் வீடு.. 8 கோடி மக்களும் என் சொந்தங்கள். மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்வோம். தமிழக மக்கள் நலம் ஒன்றே தான் கருத்தில் கொள்வோம். இப்படி நாம் இருக்கும்போது மக்கள் பணத்தில் ஒரு பைசா கூட தொட மாட்டோம். தொட்டவர்களையும் விட மாட்டோம் என சொன்னோம் என கூறினார்.

கடந்த திமுக ஆட்சியில் அமலாக்கத்துறை அனுப்பிய ஆவணங்களை எடுத்துக் காட்டி பேசிய விஜய் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் நடந்த ஊழல் பற்றிய சர்க்காரியா கமிஷன் ஊழல் அறிக்கை தொடங்கி டாஸ்மாக் துறை ஊழல் வரை பல விஷயங்களை குறிப்பிட்டு பேசி இதுவல்லவோ மிகப்பெரிய சாதனை என கடுமையாக விமர்சித்தார். திமுக இடத்தில் இருக்கும் தான் தப்பு இருக்கும். ஊழல் செய்யாதவர்கள் அதைப் பற்றிக் கண்டுக்கொள்ளவே மாட்டார்கள். ஊழல் செய்தவர்கள் தான் ஆதாரம் இருந்தால் காட்டுங்கள் என என சொல்வார்கள். அதுதான் திமுக. தவெகவைப் பற்றி அவதூறாக பேசினாலும், அரை நூற்றாண்டுக்கும் பின் சென்று எல்லாவற்றையும் தோண்டி எடுத்து திமுகவின் போலி பிம்பத்தை உடைப்போம் என்பதை சொல்லிக் கொள்கிறேன். இறைவனும், இயற்கையும், மக்களும் நம் பக்கம் தான் இருப்பார்கள். அந்த அன்புக்கு முன் திமுகவினர் தோற்பது உறுதி என விஜய் தெரிவித்தார்.

Source: Read Full Article