TMC: ரைட்ரா..! 15 ஆண்டுகள் ஆண்ட கட்சியின் பெயர், சின்னத்தை முடக்கிய தேர்தல் ஆணையம் - மம்தா பானர்ஜி ஷாக்

TMC: ரைட்ரா..! 15 ஆண்டுகள் ஆண்ட கட்சியின் பெயர், சின்னத்தை முடக்கிய தேர்தல் ஆணையம் - மம்தா பானர்ஜி ஷாக்
News Image

EC On TMC: மேற்குவங்க இடைத்தேர்தலில் ஏற்பட்ட குழப்பத்தை தொடர்ந்து தேர்தல் ஆணையம் தடை  உத்தரவை பிறப்பித்துள்ளது.

த்ரிணாமுல் காங்கிரஸ் பெயருக்கு தடை:

மேற்குவங்க இடைத்தேர்தலில் த்ரிணாமுல் காங்கிரஸின் பெயர் மற்றும் அதன் தேர்தல் சின்னத்தை பயன்படுத்த தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கட்சியின் நிறுவனர் மம்தா பானர்ஜி மற்றும் ரிதப்ரதா தலைமையிலான அதிருப்தியாளர்கள் குழு ஆகிய இரண்டு பேருக்குமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெள்ளிக்கிழமை (இன்று) காலை 11 மணிக்குள் 3 மாற்று பெயர்கள் மற்றும் தேர்தல் சின்னங்களை பரிந்துரையுங்கள் எனவும் இரண்டு தரப்புக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நந்திகிராம் மற்றும் ரெஜிநகரில் வரும் அக்டோபர் 6ம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலில், த்ரிணாமுல் காங்கிரஸின் பெயர் மற்றும் அதன் தேர்தல் சின்னத்தை பயன்படுத்துவது யார் என்பதில் இரண்டு தரப்புக்கும் இடையே எழுந்த கடும் மோதலால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கட்சியின் பெயர், சின்னம் முடக்கம்:

இரண்டு தரப்புகளும் தங்களுக்கான 3 மாற்று பெயர் மற்றும் தேர்தல் சின்னங்களை இன்று காலை 11 மணிக்குள் சமர்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவற்றை பரிசீலித்து வேறு எந்தவொரு தரப்பிற்கும் ஒதுக்காமல் தங்களிடம் காலியாக உள்ள சின்னத்தை இரண்டு தரப்புக்கும் தேர்தல் ஆணையம். செப்டம்பர் 17ம் தேதி அன்று தேர்தல் ஆணையம் நடத்திய விசாரணையின் போது, ​​கட்சியின் பெயர், அமைப்பு மற்றும் தேர்தல் சின்னம் ஆகியவற்றை விட்டுக்கொடுக்க மாட்டோம் என இரண்டு தரப்பு பிரதிநிதிகளும் திட்டவட்டமான நிலைப்பாடுகளை  முன்வைத்த நிலையில் இந்த முடிவை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மம்தா Vs ரிதப்ரதா பிரிவு

ரிதாப்ரதா பானர்ஜி, சந்திரமா பட்டாச்சார்யா, அக்ருல் ஜமான், அருப் ராய் ஆகியோர் அடங்கிய குழு தேர்த ஆணையத்தின் முன் ஆஜராகி, தங்கள் தரப்பின் வாதத்தை முன்வைத்தனர். இரண்டு தரப்பும் ஒரே சின்னம் மற்றும் கட்சியின் பெயரில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதால் தேர்தல் ஆணையம் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். மம்தா பானர்ஜி தரப்பின் சார்பிலான குழுவில் டெரெக் ஓ'பிரையன், கல்யாண் பானர்ஜி, மஹுவா மொய்த்ரா மற்றும் சாகரிகா கோஸ் ஆகியோர் இடம்பெற்று இருந்தனர். தேர்தல் ஆணையத்துடனான சந்திப்பின்போது, எந்தவொரு இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது, கட்சியின் சின்னமும், பெயரும் எங்களுக்கே சொந்தம் என்று வாதிட்டது. இதனை நிராகரித்த தேர்தல் ஆணையம், இரண்டு தரப்பும் த்ரிணாமுல் காங்கிரஸின் பெயர் மற்றும் சின்னத்தை பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

இதையும் படியுங்கள்: TN Weather News: புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி..! 27 மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை

உடைந்துபோன த்ரிணாமுல் காங்கிரஸ்

மேற்குவங்கத்தில் தொடர்ந்து 15 ஆண்டுகளாக ஆளுங்கட்சியாக இருந்த மம்தா பானர்ஜி தலைமையிலான த்ரிணாமுல் காங்கிரஸ் கடந்த ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் படுதோல்வி கண்டது. அதன் பிறகு பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்கள் பாஜகவின் ஆதரவு நிலைப்பட்டை எட்டினர். மேலும், கட்சியையே கைப்பற்றும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர். பெரும்பாலான கட்சி நிர்வாகிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தங்களது பிரிவிலேயே இருப்பதால், த்ரிணாமுல் காங்கிரஸ் எங்களையே சாரும் என ரிதாப்ரதா தரப்பு வாதிட்டு வருகிறது. ஆனால், நிறுவனர் என்ற அடிப்படையில் கட்சி தனக்கே சேரும் என மம்தா பானர்ஜி தரப்பில் களமாடப்பட்டு வருகிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks