தமிழ்நாடு அரசின் அயலக கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயிலும் தனக்கு நிதியுதவி வழங்கப்படவில்லை என மாணவன் பாரதிதாசன் தெரிவித்த புகாருக்கு சமூக நீதித்துறை மறுத்து தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மலேசிய நாட்டில் முனைவர் பட்ட ஆய்வு (PLD) மேற்கொண்டுவரும் பாரதிதாசன் என்ற மாணவருக்கு அண்ணல் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின்கீழ் இரண்டாம் ஆண்டு படிப்பிற்கான கல்வி உதவித்தொகை வழங்கப்படவில்லை என எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வெளிநாடுகளில் சென்று உயர்கல்வி-ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்ளும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ ஆதிதிராவிடர் மாணாக்கர்களுக்கு தமிழக அரசு சமூக நீதி துறையால் அண்ணல் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஒரு மாணவருக்கு கல்வி நிறுவனத்திற்கு செலுத்தும் கட்டணம் மற்றும் அவர் வெளிநாட்டில் வாழ்க்கை செலவினம் மற்றும் இதர செலவினங்கள் ஆகியவை சேர்த்து அதிகபட்சமாக ஆண்டிற்கு ரூ.36 லட்சம் வரை வழங்கப்படுகிறது.

மாணவர் பாரதிதாசன் மலேசிய நாட்டில் உள்ள National University of Malesiyaல் PhD படிப்பதற்காக அண்ணல் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ் 2025-2026 ஆம் ஆண்டு முதல் மொத்தம் மூன்றாண்டுகளுக்கு கல்வி உதவித்தொகை ஆண்டிற்கு ரூ. 36 லட்சம் வரை வழங்கிட ஒப்புதல் அளித்து ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநரால் பரிந்துரை கடிதல் 2025 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது. இதனடிப்படையில் முதல் ஆண்டு கல்வி கட்டணம் வழங்கப்பட்டு விட்டது. கல்வி கட்ட்ணம் ரூ.5.01 லட்சம் நேரடியாக வங்கி கணக்கிற்கும், மீதம் தொகை பாரதி தாசன் வழங்கி கணக்கிற்கும் அனுப்பப்பட்டது. இதில் விசா-விமான கட்டணம் தவிர்த்து மீதமுள்ள தொகையான ரூ.27,40.140க்கான செலவு பட்டியலை சமர்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

ஆனால் அதனை சமர்பிக்க்காமல் 2ம் ஆண்டுக்கான உதவித்தொகையை தருமாறும் கோரினார். மாணவர் நலன் கருதி கல்லூரு கட்டணம் ரூ.5.57 லட்சம், வாழ்க்கை செலவினம் ரூ.6.65 லட்சம் வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பாரதிதாசன் இரண்டாம் ஆண்டு ஆராய்ச்சி செலவினங்களுக்காக ரூ.19.50 இலட்சம் விடுவிக்குமாறு கோரியுள்ளார். அதில் மாணவர் சமர்ப்பித்துள்ள உத்தேச செலவின பட்டியல்கள் சம்மந்தப்பட்ட பல்கலைக்கழக பதிவாளரால் பரிந்துரை செய்யப்படவில்லை.

இந்நிலையில் மாணவர் முதலாமாண்டு படிப்பிற்கான ஆராய்ச்சி மற்றும் வாழ்க்கை செலவினங்களுக்காக சமர்பித்த ஆவணங்களில், ரூ.8,17,962க்கான பட்டியல்கள் ஏற்புடையதாக இல்லை என்பது குறித்தும், மாணவரால் ஆராய்ச்சி செலவினங்களுக்காக வாங்கப்பட்ட பொருட்கள் மற்றும் அதற்கான தொகை செலுத்தப்பட்டதற்கான ஆவணங்கள் ஆகியவை தொடர்பாக 20.08.2026 அன்று ஏற்கனவே மாணவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. ஆனால் இதுவரையில் சரியான விளக்கம் மாணவரால் அளிக்கபடவில்லை. அதேசமயம் பாரதிதாசன் பயிலும் பல்கலைக்கழகத்துக்கும் மின்னஞ்சல் அனுப்பி விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அது கிடைத்தவுடன் மீதமுள்ள பணம் விடுவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் பாரதி தாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டு உண்மைக்கு மாறான தகவல்களை தெரிவித்துள்ளார். அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்துடன் உள்ளது. 2025-26 ஆம் ஆண்டு சமூக நீதி துறையால் கல்வித் தவித் தொகை பெற்று தற்போது பல்வேறு வெளிநாடுகளில் பயின்று வரும் 181 மாணாக்கர்களில் பாரதிதாசன் என்பவரை தவிர வேறு எந்தவொரு மாணவரிடமிருந்தும் கல்விஉதவித்தொகை உரிய நேரத்தில் வழங்கப்படுவது தொடர்பாக எவ்வித புகார்களும் பெறப்படவில்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கையிலெடுத்துள்ள நிலையில் சட்டசபையிலும், மாணவர் பாரதிதாசன் செலவு பட்டியலை தாக்கல் செய்யவில்லை என அமைச்சர் வன்னி அரசு விளக்கம் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article