Thirukkural Express: 2,917KM - குமரி டூ டெல்லி, பட்ஜெட்டில் தமிழகத்தையே இணைக்கும் திருக்குறள் விரைவு ரயில் பற்றி தெரியுமா?

Thirukkural Express: 2,917KM - குமரி டூ டெல்லி, பட்ஜெட்டில் தமிழகத்தையே இணைக்கும் திருக்குறள் விரைவு ரயில் பற்றி தெரியுமா?
News Image

Thirukkural Express Train: கன்னியாகுமரியில் தொடங்கி 2 ஆயிரத்து 917 கிலோ மீட்டர் தூரம் பயணித்து தலைநகர் டெல்லியை திருக்குறள் விரைவு ரயில் சென்றடைகிறது.

டெல்லி டூ குமரி - திருக்குறள் விரைவு ரயில்:

நாட்டின் மிக முக்கியமான பொதுத்துறை போக்குவரத்து சேவைகளில் ரயில்வே மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பட்ஜெட்டில், உடலுக்கும் மிகப்பெரிய அளவில் அலுப்பின்றி பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகளை ரயில் சேவை வழங்குகிறது. குறிப்பாக நாட்டின் பல்வேறு முனைகளில் உள்ள சுற்றுலா தளங்களை சென்றடையும், குறைந்த செலவில் பயண திட்டங்களை மேற்கொள்ளவும் ரயில் பயணம் சரியான தேர்வாக உள்ளது. அந்த வகையில் கன்னியாகுமரியில் தொடங்கி தமிழகத்தின்  முக்கிய பகுதிகள் அனைத்தையும் தலைநகர் டெல்லியுடன் இணைக்கும் திருக்குறள் விரைவு ரயில் சேவை பற்றி இந்த தொகுப்பில் அறியலாம். நாட்டின் தென்கோடியில் உள்ள குமரியில் தொடங்கி, வடக்கு முனையில் உள்ள டெல்லி வரை சுமார் 2 ஆயிரத்து 917 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த ரயில் பயணிப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகம் டூ தலைநகரம் பயணம்:

கடந்த 2002ம் ஆண்டு முதல் தெற்கு ரயில்வேயால் இயக்கப்படும் இந்த ரயிலானது கன்னியாகுமரியில் தொடங்கி டெல்லியின் ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையம் வரையிலான பகுதியை இணைக்கிறது. உலகக் புகழ்பெற்ற திருக்குறளுக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக இதற்கு திருக்குறள் விரைவு ரயில் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. குமரியிலிருந்து புதன் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களிலும், டெல்லியிலிருந்து திங்கள் மற்றும் சனிக்கிழமை ஆகிய நாட்களிலும் இந்த ரயில் இயக்கப்படுகிறது. இந்த ஒட்டுமொத்தபயணத்திற்கான நேரமானது சுமார் 46.5 முதல் 47.5 மணி நேரம் வரை ஆகுமாம். பயணிக்கும் வழி மற்றும் பயணத்திற்கான திட்டமிடல் ஆகியவற்றின் அடிப்படையில் இதுவேறுபடுமாம். அதவாது புதன்கிழமை இரவு 8.30-க்கு இந்த ரயில் குமரியில் இருந்து புறப்பட்டால் வெள்ளிக்கிழமை மாலை 6.35 மணிக்கு தான் டெல்லியை சென்றடைவோம்.

திருக்குறள் விரைவு ரயில் கட்டணம்..!

இந்த ரயிலின் முழு நீள பயணத்திற்கு ஸ்லீப்பர் பிரிவில் ஆயிரத்து 45 ரூபாயும், ஏசி 3 டயர் பிரிவில் 2 ஆயிரத்து 590 ரூபாயும், ஏசி 2 டயர் பிரிவில் 3 ஆயிரத்து 730 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பட்ஜெட்டில், எந்தவித அவசரமும் இன்றி பல்வேறு பகுதிகளை பார்த்தபடி செல்ல விரும்புவோருக்கு இந்த ரயில் நல்ல தேர்வாக இருக்கலாம். அதேநேரம், விரைந்து அல்லது அவசர கதியில் செல்ல விரும்புவோருக்கு விமான சேவையே சரியானதாக இருக்கும்.

இதையும் படியுங்கள்: Social Media: போடு வெடிய..! 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடை, சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடு - மத்திய அரசு திட்டம்

தமிழகத்தின் முக்கிய பகுதிகள் இணைப்பு:

தமிழகத்தின் முக்கிய பகுதிகளை நேரடியாக டெல்லியுடன் இணைப்பதற்காகவே இந்த ரயில் பிரத்யேகமாக இயக்கப்படுகிறது. அதனால் தான் மொத்தமுள்ள 23 ரயில் நிலையங்களில் சென்னையை தாண்டி விட்டால் இந்த ரயில் வெறும் 8 இடங்களில் தான் நிற்கும். இடையில் உள்ள சிறிய நிலையங்களில் எல்லாம் இந்த ரயில் நிற்காது. இதனால் பயண நேரம் வெகுவாக குறைகிறது. தமிழ்நாட்டில் மட்டும்,

நாகர்கோவில் சந்திப்பு

திருநெல்வேலி

கோவில்பட்டி

சாத்தூர்

விருதுநகர்

மதுரை

திண்டுக்கல்

திருச்சிராப்பள்ளி

விருத்தாசலம்

விழுப்புரம்

மேல்மருவத்தூர்

செங்கல்பட்டு

தாம்பரம்

சென்னை எழும்பூர்

என 14 இடங்களில் நின்று சென்றுகிறது.

மற்ற மாநிலங்களில் பயணம்:

சென்னையை தாண்டிய பிறகு திருக்குறள் விரைவு ரயிலானது,

விஜயவாடா

பல்ஹர்ஷா

நாக்பூர்

பேதுல்

இட்டார்சி

போபால்

ஜான்சி

ஆக்ரா கான்ட்

ஹஸ்ரத் நிஜாமுதீன் (வருகை)

ஆகிய வழித்தடங்களில் பயணிக்கிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks