Free Bicycle Scheme : பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்.! ஸ்டைலான இலவச சைக்கிள் - என்னென்ன சிறப்பம்சங்கள்? எப்போது கிடைக்கும்?

Free Bicycle Scheme : பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்.! ஸ்டைலான இலவச சைக்கிள் - என்னென்ன சிறப்பம்சங்கள்? எப்போது கிடைக்கும்?
News Image

தமிழக அரசின் இலவச சைக்கிள் திட்டம்

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு சார்பில் இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் கல்வியை தடையின்றி தொடர செயும் வகையிலும், பள்ளிக்குச் செல்வதில் ஏற்படும் போக்குவரத்து சிரமங்களைக் குறைக்கவும் இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. குறிப்பாக, கிராமப்புற மாணவர்கள் தொலைதூரத்தில் உள்ள பள்ளிகளுக்குச் செல்வதற்கும், பொதுப் போக்குவரத்தைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கும் இந்தத் திட்டம் உதவுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் புதிதாக தவெக அரசு அமைந்துள்ள நிலையில், பள்ளி மாணவர்களுக்கு புதிய வசதிகளோடு இலவச சைக்கிள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

5.32 லட்சம் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

அந்த வகையில் 2026–27ஆம் கல்வியாண்டில் சுமார் 5.32 லட்சம் மாணவர்களுக்கு ரூ.277 கோடி மதிப்பில் நவீன இலவச சைக்கிள்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மாணவ, மாணவிகளுக்கு தனி, தனி நிறத்தில் சைக்கிள் உள்ளிட்ட பல சிறப்பம்சங்களோடு வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக வெளியான தகவலில்,  மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள சைக்கிள் நவீன வடிவமைப்புகளோடு வழங்க, அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி, கடந்த ஆட்சியில் வழங்கப்பட்டதை விட எடை குறைவாகவும், ஸ்டாரங்காகவும்  சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன.

ஸ்டைலான சைக்கிள்- சிறப்பம்சம் என்ன.?

மேலும் பள்ளி மாணவர்கள் மாலை மற்றும் இரவு நேரத்திலும் பயன்படுத்தும் வகையில்,ஒளிரும் வகையில், முன்பகுதி மற்றும் பின்பகுதியில் பிரதிபலிப்பு 'ஸ்டிக்கர்' ஒட்டப்பட உள்ளது. இது மட்டுமில்லாமல் மேம்படுத்தப்பட்ட 'பிரேக் சிஸ்டம்' மற்றும் பைகளை எளிதாக எடுத்து செல்லும் வகை யில், பெரிய கேரியரும் பொருத்தப்பட உள்ளது. மேலும் தண்ணீர் பாட்டில், புத்தகம் வைப்பதற்கான வசதிகளும் சைக்கிளிலும் கூடுதலாக செய்யப்பட உள்ளன. அதோடு ஏற்கனவே மாணவர்கள், மாணவியருக்கு ஒரே நிறத்தில் சைக்கிள் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மாணவர்களுக்கு ராணுவ பச்சை நிறத்திலும், மாணவியருக்கு வெளிர் ஊதா நிறத்திலும் சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டிசம்பரில் இலவச சைக்கிள்- முதலமைச்சர் விஜய் முடிவு

எனவே மாணவர்களுக்கு நவீன சைக்கிள் வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதம் தொடங்க, அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தர விட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நவீன சைக்கிள் வழங்கும் திட்டத்திற்கான டெண்டர் கோரப்பட்ட நிலையில், நேற்றுடன் முடிந்த நிலையில் அக்டோபர் 13ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks