Railway On Tasmac: சென்னையில் 43 டாஸ்மாக் கடைகளின் இருப்பிடத்தைமாற்ற வேண்டும் என, ரயில்வே கோரிக்கை வைப்பது ஏன்? என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

43 டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரிக்கை:

அத்துமீறி ரயில் வழித்தடங்களை கடப்பதால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் விபத்துகள், ரயில்கள் மீது கல் எறிதல் மற்றும் பெண் பயணிகளைத் துன்புறுத்துதல் போன்ற தொடர்ச்சியான சம்பவங்கள் காரணமாக, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் உள்ள ரயில் நிலையங்கள் மற்றும் தண்டவாளங்களுக்கு அருகிலுள்ள 43 டாஸ்மாக் விற்பனை நிலையங்களை இடமாற்றம் செய்யுமாறு தெற்கு ரயில்வேயிற்கு மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஜூலை மாதம் தலைமைச் செயலாளரிடம் இதுதொடர்பாக கடிதன் அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக சென்னை ரயில்வே கோட்டம் சார்பில், 2024 செப்டம்பர் மற்றும் 2025 மே மாதங்களில் டாஸ்மாக் நிர்வாக இயக்குநருக்கு இதுதொடர்பாக கடிதம் எழுதப்பட்டுள்ளது.

கடைகளை அகற்ற கோருவது ஏன்?

ரயில்வே நிர்வாகம் ஏற்கனவே எழுதிய கடிதங்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் இருந்து எந்த பதிலும் கிடைக்காத நிலையில் தான் தலைமை செயலாளருக்கே கடிதம் எழுதப்பட்டுள்ளதாம். மதுபோதையில் அடிக்கடி தண்டவாளங்களில் அத்துமீறி நுழைவது, லெவல்-க்ராசிங் கேட்கள் மற்றும் பிற ஆபத்தான இடங்களில் கடந்து செல்வது, ரயில்களில் அபாயகரமாகப் பயணம் செய்வது, நடைமேடைகளிலும் பெட்டிகளுக்கு உள்ளேயும் உறங்குவது போன்ற சம்பவங்களை குறிப்பிட்டு இந்த கடைகளை அகற்ற வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாம். மேலும், பெண் பயணிகள் துன்புறுத்தப்படுவது மற்றும் ரயில்வே ஊழியர்கள் தொந்தரவுக்கு உள்ளாக்கப்படுவது, செப்பு சமிக்ஞைக் கம்பிகள் உள்ளிட்ட சொத்துக்களின் திருட்டு மற்றும் சேதப்படுத்துதல், நிலையங்களுக்குள் அனுமதியின்றி நுழைதல் மற்றும் ரயில்வே வளாகத்தைச் சுற்றி குப்பைகளைக் கொட்டுதல் தொடர்பான புகார்கள் காரணமாகவும் அந்த 43 டாஸ்மாக் கடைகளை அகற்ற வலியுறுத்தப்பட்டுள்ளதாம்.

எந்தெந்த பகுதிகளில் கடைகளை மூட வேண்டும்?

வெளியாகியுள்ள தகவல்களின்படி, சென்னை, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அமைந்துள்ள சில கடைகளை அகற்ற வேண்டும் என ரயில்வே தரப்பு அடையாளம் கண்டுள்ளதாம். குறிப்பாக ராயபுரம், கொருக்குப்பேட்டை, பெரம்பூர், ஜோலார்பேட்டை, வில்லிவாக்கம், ஆவடி, எண்ணூர், திருவாலங்காடு மற்றும் நந்தியம்பாக்கம் ஆகிய இடங்கள் பாதிப்புக்குள்ளாகும் இடங்களாகக் கண்டறியப்பட்டுள்ளன. பட்டியலில் பெரம்பூரில் மூன்று விற்பனை நிலையங்களும், கொருக்குப்பேட்டை மற்றும் ஆவடியில் தலா இரண்டும், மற்ற இடங்களில் தலா ஒரு டாஸ்மாக் கடையும் அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: நாயால் தமிழ் இளைஞருக்கு மரண தண்டனை..! சமூக வலைதள கமெண்டிற்கு பாய்ந்த சட்டம் - மத வெறுப்பா?

டாஸ்மாக் தரப்பு சொல்வது என்ன?

பொதுமக்களின் எதிர்ப்பு மற்றும் பொருத்தமான மாற்று இடங்கள் இல்லாததால் விற்பனை நிலையங்களை இடமாற்றம் செய்வது கடினமாக இருப்பதாக டாஸ்மாக் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதுள்ள விற்பனை நிலையங்களை மாற்றுவதற்காக மாநிலம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட இடங்களை நிறுவனம் அடையாளம் காணப்பட்டு இருந்ததாம். ஆனால் குடியிருப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாலோ அல்லது அந்த இடங்கள் பொருத்தமற்றவை எனக் கண்டறியப்பட்டதாலோ பல திட்டங்கள் கைவிடப்பட்டனவாம். அதேநேரம் ரயில் நிலையங்கள் மற்றும் தண்டவாளங்களுக்கு அருகிலிருந்த குறைந்தது ஏழு விற்பனை நிலையங்கள் அண்மையில் மூடப்பட்டுள்ளன அல்லது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனவாம். கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலிருந்து 500 மீட்டர் தொலைவிற்குள் இயங்கி வந்த 717 டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தவெக அரசு அண்மையில் மூடியது. இதேபாணியில் ரயில் நிலையங்கள் அல்லது தண்டவாளங்களுக்கு அருகில் உள்ள கடைகளையும் மூட வலியுறுத்தப்பட்டுள்ளது.

Source: Read Full Article