தஞ்சை சுற்றுலா தலங்களில் அலைமோதிய கூட்டம். ராஜாளி பூங்காவிற்கு சென்று மகிழ்ந்த மக்கள்

தஞ்சை சுற்றுலா தலங்களில் அலைமோதிய கூட்டம். ராஜாளி பூங்காவிற்கு சென்று மகிழ்ந்த மக்கள்
News Image

தஞ்சாவூர்: பள்ளி காலாண்டு விடுமுறையை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவில், ராஜாளி பூங்கா, அருங்காட்சியகம்  உள்ளிட்ட சுற்றுலா பகுதியில் பொதுமக்கள் கூட்டம் நேற்று அலைமோதியது. இன்று ஞாயிறு என்பதால் நேற்றைய தினத்தை விட இன்று காலையிலேயே அதிகளவில் சுற்றுலாப்பயணிகள் வருகை இருந்தது.

பள்ளி காலாண்டு விடுமுறையை முன்னிட்டு தஞ்சாவூர் ராஜாளி பூங்காவில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக விடுமுறை நாட்களில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பூங்காவிற்கு வருகை தந்து, கைகளில் கிளிக்கு உணவளித்து மகிழ்வதுடன், பூங்காவின் புதிய வசதிகளையும் கண்டு ரசித்து வருகின்றனர். பள்ளி காலாண்டு தேர்வு விடுமுறையை ஒட்டி, தஞ்சை பெரிய கோவில் மற்றும் அருங்காட்சியகத்துடன் சேர்த்து, ராஜாளி பூங்காவிலும் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.

பூங்காவின் சிறப்பு அம்சங்களில் ஒன்று, கையில் உணவு வைத்து காத்திருந்தால், கிளி பறந்து வந்து கைகளிலிருந்தே உணவை கொத்தி சாப்பிடும் அனுபவமாகும்.தஞ்சை பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு, அதன் பின்புறம் ராஜாளி பூங்கா உள்ளது. வெயில் காலங்களில் பறவைகளை பாதுகாக்க, தென்னங்கீற்றுகள் மற்றும் வாட்டர் ஸ்ப்ரே வசதிகள் போன்றவையும் அமைக்கப்பட்டுள்ளன. விடுமுறைகளில் தஞ்சை ராஜாளி பூங்கா குடும்பத்தினருடன் சென்று மகிழ ஒரு சிறந்த இடமாக உள்ளது, மேலும் பொதுமக்கள் கிளிக்கு உணவளித்து மகிழ்வதுடன், பூங்காவின் அழகையும் அனுபவிக்கின்றனர்.

அவ்வாறு ராஜாளி பூங்காவிற்கு வந்து கையில் உணவை வைத்து கிளிகள் பறந்து வந்து தோளிலும் கரங்களிலும் அமர்ந்து சாப்பிடுவதை மனம் மகிழ மகிழ்ச்சியுடன் அனுபவித்த புதுமணத்தம்பதி திருவையாறு ஸ்ரீ வெங்கடேஸ்வரன் – கலைமதி ஜோடி கூறுகையில், மனசுக்குள் படபடவென்று இருந்தாலும் இது எங்களுக்கு புதிய அனுபவம். சிறிய, பெரிய கிளிகள் சடசடவென்று இறக்கைகளை அடித்து தோளிலும், கைகளிலும் அமர்ந்து உணவை வாங்கி சாப்பிடுவதை கண்டு மனசு குளிர்ந்தது. இது ஒரு வித்தியாசமான அனுபவம். இங்கு நாங்கள் வருவது முதல்முறை. இனி இந்த ராஜாளி பூங்காவிற்கு அடிக்கடி வருவோம் என்றனர்.

பள்ளி காலாண்டு விடுமுறை என்பதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், சுற்றுலா பயணிகள் தஞ்சாவூர் பெரியகோயிலில் குவிந்தனர். இவர்கள் கார்கள், வேன்கள், பஸ்களில் வந்ததால் பெரியகோவில் முன்புள்ள வாகன நிறுத்துமிடம் நிரம்பியது. கோயிலுக்கு சென்ற சுற்றுலா பயணிகள், பக்தர்கள் பெரிய கோயிலை சுற்றி பார்த்து கட்டிடக் கலையையையும், சிற்பக்கலையையும் பார்த்து மெய்சிலிர்த்தனர். நுழைவு கோபுரம், ராஜராஜன்கோபுரம், மூலவர் கோபுரம், பெரிய நந்தி ஆகியவற்றை பார்த்து ரசித்தனர். பின்னர் சாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர் பெரியகோவில் அருகே ராஜாளி பறவைகள் பூங்கா உள்ளது. இங்கு 20 நாடுகளை சேர்ந்த 300க்கும் அதிகமான அரிய வகை பறவைகள், நெருப்பு கோழி, வாத்துக்கள், முயல்கள், முள் எலி, நாய் வகைகள்,  பாரசீக பூனை வகைகள், ஈம கோழி, புறா வகைகள், அர்ஜென்டினா கீரி பிக், ஃபிஷ் பா, மசாஜ் போன்றவை இடம் பெற்றுள்ளன. தஞ்சை பெரிய கோவிலுக்கு வந்த சுற்றுலா பயணிகள் ராஜாளி பூங்காவிற்கு குடும்பத்துடன் சென்று நேரத்தை கழித்தனர்.

அங்கு பறவைகளுக்கான உணவை நம் கைகளில் வைத்திருந்தால் அந்த பறவைகள் நம் கைகள் மீது உட்கார்ந்து தன் அலகுகளால் உணவை கொத்தி தின்றதை பார்த்து சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் முயல்களுக்கு கேரட், முட்டைகோஸ் போன்ற காய்கறிகளை கொடுத்து மகிழ்ந்தனர்.

சிறுவர்கள் முயல்களுடன் விளையாடி உற்சாகம் அடைந்தனர். மேலும் பூங்காவின் அருகே உள்ள அருங்காட்சியகத்தில் வேளாண் துறை சார்பில் பழமையான வேளாண் கருவிகள், தஞ்சை தலையாட்டி பொம்மை உள்ளிட்ட புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் மற்றும் தலைக்காவிரி முதல் பூம்புகார் வரை காவிரி ஆறும், அதன்கிளை ஆறுகளின் செயல்பாடுகள் குறித்த தத்ரூபமான காட்சிகளை சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்ந்தனர்.

தொடர்ந்து நவதானியங்கள், ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களை கொண்டு உருவாக்கப்பட்ட பெரிய கோவில் மாதிரி, மாவட்டங்களில் கண் டெடுக்கப்பட்ட பழங்கால உலோக சிற்பங்கள், கற்சிற்பங்கள், சரஸ்வதி மஹால் நூலக காட்சியகம், 7 டி திரையரங்கம் உள்ளிட்டவைகளையும் பார்த்து மகிழ்ந்தனர்.

தஞ்சாவூர் அரண்மனை, கலைக்கூடம், சரசுவதிமகால் நூலகத்திலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. கலைக்கூடத்தில் இருந்த கற்சிற்பங்கள், உலோக சிற்பங்களை சுற்றுலா பயணி, கள் பார்த்து மகிழ்ந்தனர். சரசுவதிமகால் நூலகத்திற்கு சென்ற சுற்றுலா பயணி கள் அங்குள்ள அரியவகை ஓலைச்சுவ டிகள், தமிழில் சங்ககால இலக்கிய உரைகள், மருத்துவ குறிப்புகளையும் பார்த்து மகிழ்ந்தனர்.

தஞ்சாவூர் மாநகரில் சிவகங்கை பூங்கா, ராஜராஜன் மணிமண்டபம் ஆகியவை மக்களின் பொழுதுபோக்கு இடமாக திகழ்ந்தன. தஞ்சாவூர் மாரியம்மன் கோயில் அருகே நீர்வளத்துறை சார்பில் ரூ.8 கோடியே 84 லட்சம் மதிப்பில் சமுத்திரம் ஏரியை சீர் செய்து அமைக்கப்பட்ட சிறுவர் பூங்காவில் நேற்று மக்கள் தங்களது குழந்தைகளுடன் குவிந்தனர். அங்குள்ள புல்வெளியிலும், இருக்கைகளிலும் பெரியவர்கள் அமர்ந்து சிறுவர்கள் விளையாடுவதை பார்த்து மகிழ்ந்தனர். ஊஞ்சல், சறுக்குகளில் சிறுவர்கள் உற்சாகமாக விளையாடினர். அதேபோல் தஞ்சை அருளானந்த நகரில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.11 கோடியே 50 லட்சம் செலவில் 2.5 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள அறிவியல் தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் பூங்காவிலும் (ஸ்டெம் பூங்கா) மக்கள் தங்கள் குழந்தைகளுடன் குவிந்தனர். அங்குள்ள அறிவிய தொழில்நுட்பங்களை பார்த்து மகிழ்ந்தனர். தஞ்சை பழைய பஸ் நிலைய அருகே உள்ள ராஜப்பா பூங்காவிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks