Tasmac: டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.20 ஆயிரம் முன்பணம் - யார் யாருக்கு கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்

Tasmac: டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.20 ஆயிரம் முன்பணம் - யார் யாருக்கு கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்
News Image

Tasmac Advance: டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு எந்தெந்த பண்டிகைகளுக்கு எல்லாம் முன்பணம் கிடைக்கும்? என்பது போன்ற விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

டாஸ்மாக் ஊழியர்களுக்கு முன்பணம்:

டாஸ்மாக் ஊழியர்களுக்கு விழாக்காலங்களில் முன்பணம் அளிக்கப்படும் என அரசு தரப்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், “ டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளில் பணிபுரியும் பணியாளர்களின் பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர் சங்கங்கள், அப்பணியாளர்களுக்குப் பண்டிகைக் கால முன்பணம் மற்றும் பிற நலத்திட்ட உதவிகளை வழங்குமாறு அவ்வப்போது கோரிக்கைகளை முன்வைத்து வந்துள்ளன. இவற்றை பரிசீலித்த டாஸ்மாக் நிர்வாகக் குழு, சில்லறை விற்பனைக் கடைகளில் பணிபுரியும் தகுதியுள்ள பணியாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.20,000 வீதம் பண்டிகைக் கால முன்பணம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

முன்பண அளவு:

சில்லறை விற்பனைக் கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் விஷயத்தில், மூத்த மண்டல மேலாளர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்கள் இவற்றைச் சரியாகச் செயல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். தகுதியுள்ள ஒவ்வொருவருக்கும், ஆண்டுக்கு ஒருமுறை ரூ.20,000பண்டிகை முன்பணமாக அனுமதிக்கப்படும். இந்த முன்பணம் வட்டி இல்லாததாக இருக்கும். பணியாளரின் மாதாந்திர ஊதியம் வரவு வைக்கப்படும் வங்கி கணக்கு மூலமாகவே முன்பணம் வழங்கப்படும். எந்தச் சூழ்நிலையிலும் பணம் ரொக்கமாக வழங்கப்படாது.

முன்பணத்திற்கு விண்ணபிக்கும் முறை:

முன்பணத்தைப் பெற விரும்பும் தகுதியுள்ள ஒவ்வொரு பணியாளரும், எந்தப் பண்டிகைக்காக முன்பணம் கோரப்படுகிறது என்பதைக் குறிப்பிட்டு எழுத்துப்பூர்வமாகத் தங்கள் விருப்பத்தைத் தெரிவிக்க வேண்டும். அப்பண்டிகை வரும் மாதத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே அதனை மாவட்ட மேலாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும். பணியாளர் தேர்ந்தெடுத்த பண்டிகை வரும் மாதத்திற்கு முந்தைய மாதத்திற்கான ஊதியத்துடன் இந்த முன்பணம் வழங்கப்படும். அதாவது நவம்பர் மாதத்தில் தீபாவளி பண்டிகைக்காக முன்பணம் கோரினால், அக்டோபர் மாத ஊதியத்துடனே வரவு வைக்கப்படும். இதன் மூலம் பண்டிகைக்குத் தேவையான நேரத்தில் அந்தத் தொகை பணியாளருக்குக் கிடைக்கும். பணியாளர் மேற்கூறியவாறு விருப்பத்தைத் தெரிவிக்காத பட்சத்தில், பொங்கல் பண்டிகைக்காக டிசம்பர் மாத ஊதியத்துடன் அவருக்கு முன்பணம் வழங்கப்படும்.

முன்பணத்தை திரும்பப் பெறும் நடைமுறை:

முன்பணம் வழங்கப்பட்ட மாதத்தைத் தொடர்ந்து, அதற்கடுத்த மாதத்திலிருந்து தொடங்கி, தலா ரூ.2,000 வீதம் பத்து சமமான மாதாந்திரத் தவணைகளில் பணியாளரின் ஊதியத்திலிருந்து இந்த முன்பணம் திரும்பப் பெறப்படும். அதன்படி, டிசம்பர் மாத ஊதியத்துடன் முன்பணம் வழங்கப்படும் சூழலில், ஜனவரி மாதத்தில் தொடங்கி அக்டோபர் மாதத்திற்குள் பணம் முழுமையாக திரும்பப் பெறப்பட வேண்டும். எந்தவொரு தவணைத் தொகையும் ஒத்திவைக்கப்படவோ அல்லது தள்ளுபடி செய்யப்படவோ கூடாது. முன்பணம் முழுமையாக வசூலிக்கப்படும் வரை, வசூல் நடவடிக்கை தொடங்கியதும் அது எவ்விதத் தடையுமின்றித் தொடரப்பட வேண்டும்.

முன்பணம் வசூலிப்பு - பணியிலிருந்து விலகினால்?

முன்பணம் முழுமையாக வசூலிக்கப்படுவதற்கு முன்பே ஒரு பணியாளர் கழகத்தின் பணியிலிருந்து விலக நேரிட்டால், அவருக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியம் மற்றும் பிற நிலுவைத் தொகைகளிலிருந்து, அத்தொகைகள் இறுதி செய்யப்பட்டு வழங்கப்படுவதற்கு முன்னதாகவே, மீதமுள்ள நிலுவைத் தொகை ஒரே தவணையாக வசூலிக்கப்பட வேண்டும்.

இதையும் படியுங்கள்:Chennai Metro: கோடம்பாக்கம் டூ பனகல் பார்க் ரூட்டில் பிரச்னை ஓவர்.. டபுள் டனல், 5KM நீளம் - மெட்ரோ சேவை எப்போது?

ஆவணங்கள் கண்காணிப்பு:

பண்டிகைக்கால முன்பணம் அனுமதித்தல், வழங்குதல் மற்றும் வசூலித்தல் ஆகியவை தொடர்பாக, மாவட்ட மேலாளர்கள் பணியாளர் வாரியான பதிவேடு ஒன்றை பராமரிக்கச் செய்ய வேண்டும். இப்பதிவேட்டில், எந்தப் பண்டிகைக்காக முன்பணம் அனுமதிக்கப்பட்டது, வழங்கப்பட்ட தேதி மற்றும் தொகை, வசூலிக்கப்பட்ட தவணைகள் மற்றும் மீதமுள்ள நிலுவைத் தொகை ஆகியவை குறிப்பிடப்பட வேண்டும்.

முன்பணம் அனுமதிக்கப்படும் பண்டிகைகள்

அனைத்துச் சமூகத்தைச் சேர்ந்த பணியாளர்களும் இதன் பலனைப் பெறும் வகையில், பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான், பக்ரீத் அல்லது தமிழ்நாடு அரசால் அனுமதிக்கப்பட்ட அல்லது அறிவிக்கப்பட்ட பிற ஏதேனும் ஒரு மதப் பண்டிகை என, பணியாளர் விரும்பும் ஏதேனும் ஒரு மதப் பண்டிகைக்காக இந்த முன்பணம் அனுமதிக்கப்படும். ஒரு ஆண்டில் ஒன்றுக்கு மேற்பட்ட பண்டிகைகள் வந்தாலும், ஒரு பணியாளருக்கு அந்த ஆண்டில் ஒரு முன்பணம் மட்டுமே அனுமதிக்கப்படும். ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட முன்பணம் முழுமையாக வசூலிக்கப்பட்ட பின்னரே, ஒரு பணியாளருக்குப் புதிய முன்பணம் அனுமதிக்கப்படும்” என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks