தாராபுரம், மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இரு தொகுதிகளிலும் இரண்டு நாட்களிலும் முதலமைச்சர் விஜய் பரப்புரை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,

தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்

தமிழ்நாட்டில் 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அதிமுகவைச் சேர்ந்த 6 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு ஆளும் கட்சியான தவெகவில் இணைந்து விட்டனர். முதலமைச்சர் விஜய் இரு தொகுதிகளில் போட்டியிட்டு திருச்சி கிழக்கு தொகுதியில் ராஜினாமா செய்தார். இதனால் தமிழ்நாட்டில் 7 தொகுதிகள் காலியாக உள்ளது. இப்படியான நிலையில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளில் மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 6ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இருதொகுதிகளிலும் தேர்தல் திருவிழா களைகட்டியுள்ளது. இந்த தேர்தலில் மதுராந்தகத்தில் தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர், சிபிஎம், தாராபுரத்தில் சிபிஎம்க்கு பதிலாக சிபிஐ கட்சி என ஐந்து முனை போட்டியானது நிலவுகிறது.

தவெகவில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள்

இதனிடையே ஆளும் கட்சியான தமிழக வெற்றி கழகத்தில் சார்பில் அதிமுகவில் இருந்து பதவியை ராஜினாமா செய்த மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல், தாராபுரத்தில் சத்யபாமா ஆகிய இருவரும் மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். பொதுவாக இடைத்தேர்தலில் ஆளும் கட்சி தான் வெற்றி பெறும் என சொல்லப்பட்டாலும் இந்த முறை தமிழ்நாடு அரசியல் களம் சவால் நிறைந்த ஒன்றாக மாறி விட்டது. பெரும்பான்மை இல்லாமல் தவித்த தவெகவு பிற கட்சிகள் ஆதரவுடன் ஆட்சியமைத்தது. அப்படியான நிலையில் களத்தில் களமிறக்கப்பட்ட வேட்பாளர்களே தவெகவுக்கு கடும் சிக்கலை ஏற்படுத்துபவர்களாக உள்ளதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

2 நாட்கள் பரப்புரை மேற்கொள்ளும் விஜய்

இதனிடையே மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் முதலமைச்சர் விஜய் ஒவ்வொரு நாள் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளவிருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அதிமுகவில் இருந்து ராஜினாமா செய்தவர்கள் கட்சி மாறி மீண்டும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டிருப்பதால் சற்று பின்னடைவாக பார்க்கப்படுவதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவித்ததால் விஜய் தன் பிளானை மாற்றியிருப்பதாக சொல்லப்படுகிறது. அதன்படி இந்த இரண்டு தொகுதிகளிலும் 2 நாட்கள் பரப்புரை மேற்கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகள் தவெகவுக்கு கட்டம் கட்டி வரும் நிலையில் அதனை எதிர்க்க களத்தில் விஜய் அதிகமாக களமாட வேண்டியுள்ளது. பொதுக்கூட்டம் மற்றும் ரோட் ஷோ ஆகியவை திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் மே 4 முதல் மே 10 வரை தவெக ஆட்சியமைப்பதில் ஏற்பட்ட சிரமம், ஏன் அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு சீட் கொடுத்தது, திமுகவினரின் ஊழல்கள் என முதல் ரவுண்டிலும், மற்றொரு நாளில் எதிர்க்கட்சிகள் வைக்கும் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் திமுகவினரின் பரப்புரை வியூகம் வகுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

Source: Read Full Article