Social Media: போடு வெடிய..! 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடை, சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடு - மத்திய அரசு திட்டம்

Social Media: போடு வெடிய..! 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடை, சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடு - மத்திய அரசு திட்டம்
News Image

IND Govt On Social Media: 18 வயதுக்குட்பட்டவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதை தடுக்கும் வகையில், தகவல் மற்றும் தொழில்நுட்ப விதியில் மாற்றம் செய்ய உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

18 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடை?

உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்று, 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சொந்தமாக சமூக ஊடக கணக்குகள் தொடங்குவதை தடுக்கும் வகையில், தகவல் மற்றும் தொழில்நுட்ப விதிகளில் விரைவில் ஒரு புதிய விதியை சேர்க்க இருப்பதாக மத்திய அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு மற்றும் மனுதாரரான 'ஜஸ்ட் ரைட்ஸ் ஃபார் சில்ட்ரன் அலையன்ஸ்' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் வழக்கறிஞர் எச்.எஸ். பூல்கா ஆகியோரின் வாதத்தை ஏற்றுக்கொண்ட சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, கணக்குகளை தொடங்க சிறார்களிடம் சமூக வலைதள நிறுவனங்கள் பெறும் உறுதி மொழி செல்லாது என்றும் , அவை  தடுக்கப்பட வேண்டும் என்றும் விளக்கமளித்துள்ளார்.

சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடுகள்:

வழக்கு விசாரணையின் போது, “பெற்றோரின் ஒப்புதலுடன் கல்வி தொடர்பான வலைத்தளங்களில் உறுப்பினர் சேர்க்கை பெறலாம் எனவும், சிறார்களை சமூக ஊடகக் கணக்குகளை வைத்திருக்க அனுமதிக்கக் கூடாது என்பதை ஒரு சட்டப்பூர்வக் கடமையாக மாற்ற முடிவெடுக்கப்படும்” என்றும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது. அப்போது “ சமூக வலைதள நிறுவனங்கள் கட்டுப்பாடுகளை அமெரிக்கச் சட்டங்களின் கீழ் பதிவுசெய்து, அவற்றை இந்திய சந்தைக்கு கொண்டுவந்துள்ளனர். இது இந்தியச் சட்டத்தின் கீழ் அனுமதிக்க முடியாத ஒன்று" என நீதிபதி பாக்சி வலியுறுத்தினார்.

மேலும், “சமூக வலைதள நிறுவனங்கள் இந்தியச் சட்டங்களுக்கு இணங்க வடிவமைக்க மத்திய அரசு சில வழிகாட்டுதல்களை வழங்குமா?" என்று நீதிபதிகள் அமர்வு கேள்வி எழுப்பியது. அதற்கு பதிலளித்த சொலிசிட்டர் ஜெனரல், "அந்த நிறுவனங்கள் இந்தியச் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டே ஆக வேண்டும். அதில் எவ்வித சந்தேகமும் இல்லை" என்று குறிப்பிட்டார்.

இதையும் படியுங்கள்: TN Weather News: இன்று கனமழை இருக்கு..! 16 மாவட்டங்களுக்கு வார்னிங் - சென்னை? தமிழக வானிலை அறிக்கை

18 வயது ஆக நிர்ணயிக்கப்பட வேண்டும்?

இதையடுத்து, "குறைந்தபட்சம் உறுப்பினர் பதிவிலாவது, வயது வரம்பை 18 ஆகக் கட்டுப்படுத்த வேண்டும்" என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதை ஏற்ற சொலிசிட்டர் ஜெனரல் நிறுவனங்கள் இந்தியச் சட்டங்களுக்கு இணங்குவதை உறுதிசெய்ய, இதை இப்போது ஏதேனும் சட்டம் அல்லது விதிகளில் சேர்க்க வேண்டும் என்று கூறினார். அப்போது குறுக்கிட்ட மூத்த வழக்கறிஞர் பூல்கா, இந்த விவகாரம் தொடர்பாக அரசிடம் சில வழிகாட்டுதல்கள் இருக்கிறது, அவற்றை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.  சொலிசிட்டர் ஜெனரல், இதை இப்போது ஒரு சட்டத்தின் மூலம் அமல்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார். அப்போது பேசிய தலைமை நீதிபதி காந்த், “சொலிசிட்டர் ஜெனரல் கூறியது போல் இது ஒரு சட்டப்பூர்வமான வழிமுறையின் மூலமே இருக்க வேண்டும் என்றும், இது குறித்து பரிசீலித்து பதிலளிக்குமாறும்” அரசைக் கேட்டுக்கொண்டார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks