Semiconductor: 1 லட்சம் இளைஞர்களுக்கு ஜாக்பாட்! ரூ.1.27 லட்சம் கோடி முதலீட்டில் உருவெடுக்கும் செமிகான் 2.0 திட்டம்!

Semiconductor: 1 லட்சம் இளைஞர்களுக்கு ஜாக்பாட்! ரூ.1.27 லட்சம் கோடி முதலீட்டில் உருவெடுக்கும் செமிகான் 2.0 திட்டம்!
News Image

இந்தியாவில் செமிகண்டக்டர் உற்பத்தித் துறையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், 1.27 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் ‘செமிகான் 2.0’ திட்டத்தை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சிப் வடிவமைப்பு, செமி கண்டக்டர் உபகரணங்கள் மற்றும் மூலப்பொருட்கள், உற்பத்தி, பேக்கேஜிங், ஆராய்ச்சி மற்றும் திறன் மேம்பாடு ஆகிய ஆறு முக்கியப் பிரிவுகளில் இத்திட்டம் முழுமையாகச் செயல்படுத்தப்பட உள்ளது.

நீண்ட கால வளர்ச்சிக்கான வழிவகை

இத்திட்டம் குறித்து மத்திய மின்னணு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், செமிகான் 2.0 திட்டம் இந்தியாவின் செமிகண்டக்டர் துறையை நீண்ட கால அடிப்படையில் சீரான வளர்ச்சியை நோக்கி அழைத்துச் செல்லும் என்று குறிப்பிட்டுள்ளார். உலகளாவிய செமிகண்டக்டர் விநியோகத் தொடரில் இந்தியா ஒரு தவிர்க்க முடியாத முக்கிய அங்கமாக மாறுவதையே இத்திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது.

மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் எஸ். கிருஷ்ணன் இதுபற்றித் தெரிவிக்கையில், அடுத்த கட்ட செமி கண்டக்டர் சூழலை உருவாக்க சரியான நேரம் வந்துவிட்டதாகவும், தற்சார்பு மற்றும் உலகளவில் போட்டியிடக் கூடிய தொழில்முறையை உருவாக்குவதே இதன் முதன்மை நோக்கம் என்றும் சுட்டிக்காட்டினார்.

நிதி உதவியும் நிபந்தனைகளும்

புதிய திட்டத்தின் விதிகளின்படி, சிலிக்கான் சிப் உற்பத்தி ஆலைகளை அமைப்பதற்குத் தகுதியான மூலதனச் செலவில் 40 சதவீதம் வரை நிதியுதவி வழங்கப்படும். மேலும், கூட்டு செமிகண்டக்டர் மற்றும் டிஸ்பிளே ஆலைகளுக்கு 35 சதவீதமும், மேம்பட்ட பேக்கேஜிங் திட்டங்களுக்கு 35 சதவீதமும், வழக்கமான பேக்கேஜிங் திட்டங்களுக்கு 25 சதவீதமும் நிதி ஆதரவு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திறன் மேம்பாடும் வணிக உற்பத்தியும்

தொழில்நுட்பத் திறனை மேம்படுத்தும் வகையில், அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் செமி கண்டக்டர் வடிவமைப்பு பொறியாளர்களுக்குச் சிறப்புப் பயிற்சி அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, முதல்கட்ட ‘செமிகான் 1.0’ திட்டத்தின்கீழ் அங்கீகரிக்கப்பட்ட 12 திட்டங்களில், மைக்ரான், கேன்ஸ் செமி கான் மற்றும் சி.ஜி. செமி ஆகிய நிறுவனங்களின் 3 ஆலைகள் நடப்பு ஆண்டிலேயே தங்களது வணிக உற்பத்தியைத் தொடங்கியுள்ளன.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks