Seeman: ”துணை முதலமச்சர் பதவிக்கு என்னிடம் பேரம் பேசிய ஆதவ் அர்ஜுனா” - என்ன ஆஃபர் தெரியுமா? சீமான் பகீர்

Seeman: ”துணை முதலமச்சர் பதவிக்கு என்னிடம் பேரம் பேசிய ஆதவ் அர்ஜுனா” - என்ன ஆஃபர் தெரியுமா? சீமான் பகீர்
News Image

Seeman On Aadhav Arjuna: தாராபுரத்தில் நாம் தமிழர் வேட்பாளரை ஆதரித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரையில் ஈடுபட்டார்.

சீமான் தேர்தல் பரப்புரை:

தாராபுரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகாவை ஆதரித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசுகையில், தீய சக்தியை ஒழிக்கப்போகிறோம் என்ற தூயசக்தியால் நம் மீது திணிக்கப்பட்ட தேர்தல் இது. இதில் ஆளுங்கட்சியை வீழ்ச்சியை தக்க பாடம் புகட்ட வேண்டும். சட்டமன்றத்தில் மக்கள் பிரச்னைகளை பேசாமல் சினிமா வசனங்களை பேசிக்கொண்டு இருக்கிறார்கள். மின்வெட்டு, சட்ட-ஒழுங்கு பிரச்னைகள் ஆகியவை தலைவிரித்தாடுகின்றன. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கிற்கான நுழைவுச்சீட்டையே ப்ளாக்கில் விற்றுள்ளார்கள். முதலமைச்சர் விஜய் ஊழலை ஒழிக்க வேண்டும் என விரும்புகிறார். அதற்கு முதலில் தமிழக வெற்றிக் கழகத்தை ஒழிக்க வேண்டும். நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்து ஆட்சிக் கட்டிலில் அமரவைத்தால், அடிப்படை கட்டமைப்பை மாற்றிக் காட்டுவோம்” என ஆவேசமாக பேசினார்.

காங்கிரசுடன் கூட்டணி..!

மேலும், “நானும் விஜயும் ஒருமுறை காரில் பயணித்தோம். அவர் தான் வாகனத்தை ஓட்டினார். அப்போது திடீரென காங்கிரசை நம்முடன் சேர்த்துக்கொள்ளலாமா? என கேட்டார். நான் அதிர்ந்துவிட்டேன். இந்த யோசனை எல்லாம் உங்களுக்கு கொடுப்பது யார்? காங்கிரசை சேர்த்துக்கொண்டு என்ன அரசியல் செய்வாய்? அவர்களை சேர்த்துக்கொண்டால் கச்சத்தீவு, காவிரி நதிரீர் உரிமை, மொழிக்கொள்கை, ஈழ விடுதலை என எதையுமே பேசமுடியாது. இந்த நாட்டில் இருக்கும் மொத்த தீமைக்கும் காரணமே அந்த கட்சி தான். அதற்கு பிறகு அவர் என்னிடம் பேசியது ஊழல், லஞ்சத்தை எப்படி ஒழிக்க வேண்டும் என்று. அந்த விவகாரத்தில் எப்போதுமே அவரை நான் பாராட்டுவேன். ஆனால், அவரே 100 கோடி ரூபாய் வரி பாக்கிக்கு சிபிஐ வழக்கை எதிர்கொண்டு வருகிறார்” என சீமான் விமர்சித்துள்ளார்.

பேரம் பேசிய ஆதவ் அர்ஜுனா?

தொடர்ந்து பேசுகையில், “ஆதவ் அர்ஜுனா என்னை தொடர்பு கொண்டு பேசினார். எடப்பாடியுடன் கூட்டணி வைக்க வேண்டும். நான் (ஆதவ் அர்ஜுனா) துணை முதலமைச்சர் என்று தான் பேசினார். நான் அதற்கு ஒத்துழைக்கவில்லை என்றதும், எனது மனைவியை தொடர்புகொண்டு அண்ணனை வேளாண்துறை அமைச்சர் ஆகிவிடுகிறேன் என பேசியுள்ளார். ஆட்டுக்கு கூட மூளை இருக்கிறது. ஆனால், இந்த வெற்றிக் கழகத்தில் இருப்பவர்களுக்கு ஒன்றுமே இல்லை. நாங்கள் 15 ஆண்டுகளாக திராவிட கட்சிகளுக்கு எதிரான கட்டமைப்பை மேற்கொண்டோம். விஜய் வந்து அறுவடை செய்துவிட்டார்” என சீமான் குறிப்பிட்டார்.

இதையும் படியுங்கள்: Fishermen Alert: ஆழ்கடல் மீனவர்களுக்கான எச்சரிக்கை..! எந்தெந்த பகுதிகளுக்கு இன்று செல்லக்கூடாது - கடலோர மாவட்ட வானிலை

தேர்தல் முடிவில் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அதிமுக உடனும் கூட்டணி அமைக்க தவெக முயன்றதாக கூறப்பட்டது. ஆனால், அதற்கு இணைப்பு பாலமாக செயல்பட தன்னை ஆதவ் அர்ஜுனா தொடர்புகொண்டதாக சீமான் குறிப்பிடப்பட்டு இருப்பது இதுவரை வெளிவராத தகவலாகும். ஆனால், இதுகுறித்து வேறு எந்த ஆதாரங்களும் இதுவரை வெளிவரவில்லை.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks