பத்திரப் பதிவு செய்ய லஞ்சம்? லீக்கான ஆடியோவால் சிக்கிய பெண் சார்பதிவாளர்

பத்திரப் பதிவு செய்ய லஞ்சம்? லீக்கான ஆடியோவால் சிக்கிய பெண் சார்பதிவாளர்
News Image

ராமநாதபுரம் மாவட்டத்தில் பத்திரப் பதிவு செய்ய லஞ்சம் வாங்கியதாக பெண் சார்பதிவாளர் பணியிடைமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா, திருவாடானை சார்பதிவாளர் அலுவலகத்தில் மாலினி என்பவர் சார்பதிவாளராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பத்திரம் பதிவு செய்வதற்காகப் வந்த நபர் திருவாடனை ஆவண எழுத்தர் மூலம் பத்திரம் பதிவு செய்துள்ளார்.  திருவாடானை ஆவண எழுத்தர் பதிவு செய்ய ரூ.28,000 Gpay மூலம் பெற்றுள்ளார்.

​பத்திரப் பதிவிற்கு அரசுக்குச் செலுத்த வேண்டிய கட்டணத்தைக் காட்டிலும் கூடுதலாகப் பணம் வசூலிக்கப்பட்டது குறித்து, சம்பந்தப்பட்ட ஆவண எழுத்தரிடம் அந்த நபர் தொலைபேசியில் கேட்டுள்ளார். அதற்குப் பதிலளித்த பத்திர எழுத்தர்  பெண் ஊழியர், “பத்திரக் கட்டணம் போக, சார்பதிவாளர் அலுவலகத்திற்கு  கொடுக்க ரூ.5,000 வேண்டியுள்ளது. அதனால் அந்தப் பணம் கொடுக்கப்பட்டுவிட்டது; அதைத் திருப்பித் தர முடியாது” என்று கூறுகிறார். அதனையே பத்திர எழுதும் அலுவலகத்தில் உறுதி செய்து விட்டு இணைப்பைத் துண்டித்துள்ளனர். இதுதொடர்பான உரையாடல் அடங்கிய ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவியது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து, சார்பதிவாளர் மாலினி உடனடியாக தேவகோட்டைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
​இதுகுறித்து மாவட்ட பதிவாளர் சீனிவாசனிடம் கேட்டபோது, “வைரலான ஆடியோ குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணையின் முடிவில் தவறு உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது  உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

தவெக ஆட்சி வந்த பிறகு அரசு அலுவலகங்களில் லஞ்சம் ஒழிக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. கடமையை மீறும் அலுவலர்கள், அதிகாரிகள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், சிலர் லஞ்சம் வாங்குவதை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks