Schools Leave: கோலாம்பஸ்.. கோலாம்பஸ்.. விட்டாச்சு லீவு! நாளை முதல் பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை!

Schools Leave: கோலாம்பஸ்.. கோலாம்பஸ்.. விட்டாச்சு லீவு! நாளை முதல் பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை!
News Image

தமிழ்நாட்டில் பள்ளிகளில் பொதுத்தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் நடத்தப்படுவது வழக்கம்.

இன்றுடன் காலாண்டுத் தேர்வுகள் முடிவு:

நடப்பாண்டிற்கான காலாண்டுத் தேர்வுகள் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்த நிலையில், இன்றுடன் தேர்வு நிறைவு பெறுகிறது. காலாண்டுத் தேர்வுகள் இன்றுடன் நிறைவு பெற உள்ள நிலையில், நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது.

நாளை முதல் அடுத்த 9 நாட்களுக்கு பள்ளிகளுக்கு காலண்டு விடுமுறை அளிக்கப்படுகிறது. நாளை முதல் அடுத்த மாதம் 4ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. 9 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் மாணவ, மாணவிகள் குஷியடைந்துள்ளனர்.

டூருக்கு ரெடி:

பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை முதல் சுற்றுலா தளங்கள், முக்கிய கோயில்களில் மக்கள் கூட்டம் அதிகளவு காணப்படும் என்று கருதப்படுகிறது. தொடர் விடுமுறை என்பதால் பலரும் தங்கள் குடும்பத்துடன் பல பகுதிகளுக்கும் சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளனர். இதனால், வழக்கமாக விடுமுறை நாட்களில் அதிகளவு மக்கள் வரும் இடங்களில் கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

நீர்நிலைகள், அருவிகள், மலைப்பிரதேசங்கள், கடற்கரைகள், கோயில்கள் போன்ற பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகளவு காணப்படும் என்பதால் அதற்கான ஏற்பாடுகளை பயணிகள் அரசும், காவல்துறையும் மேற்கொண்டு வருகின்றனர். அரசு சார்பில் அதற்கேற்ப போக்குவரத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

பேருந்துகள், ரயில்களில் நிரம்பும் பயணிகள் கூட்டம்:

தொடர் விடுமுறையை முன்னிட்டு ஏற்கனவே பல முக்கிய சுற்றுலா தளங்களுக்கான பேருந்துகள், ரயில்கள் முன்பதிவு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஒரு வார காலத்தில் பள்ளிகளில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் எடுக்கக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

மழைக்காலம் என்பதால் அதேசமயம் மாணவர்களை நீர்நிலைகள் உள்ளிட்ட பகுதிகளுக்கு தனியாக அனுப்ப வேண்டாம் என்றும் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டும் வருகிறது. தொடர் விடுமுறை என்பதால் பல முக்கியமான சுற்றுலா தளங்களில் மக்கள் குவிவார்கள் என்பதால் அந்த பகுதியில் வியாபாரமும் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காலாண்டுத் தேர்வுகள் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் பள்ளிகளில் நிர்வாக பணிகள் தொடர்ந்து நடைபெறும். ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபட உள்ளனர். மேலும், நிர்வாக பணிகளிலும் அவர்களுக்கு பணி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  காலாண்டுத் தேர்வுகள் முடிவடைந்துள்ள நிலையில், அரையாண்டுத் தேர்வுகளுக்கு தயாராக இருக்கும் வகையில் புதிய பாடப்புத்தகங்கள் தருவதற்கான பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks