GST சாலையில் இனி சிக்கல் குறையுமா? தாம்பரம்–பெருங்களத்தூர் மேம்பாலத்தின் கடைசி பிரிவு திறப்பு!

GST சாலையில் இனி சிக்கல் குறையுமா? தாம்பரம்–பெருங்களத்தூர் மேம்பாலத்தின் கடைசி பிரிவு திறப்பு!
News Image

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்கும் முக்கிய போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றான தாம்பரம் - பெருங்களத்தூர் ஜி.எஸ்.டி சாலையில் நீண்டகாலமாக நிலவி வந்த போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், பெருங்களத்தூர் மேம்பாலத்தின் இறுதிப் பிரிவு இன்று (செப்டம்பர் 25) முதல் வாகனப் போக்குவரத்துக்காக திறக்கப்படுகிறது. இதன் மூலம் தாம்பரம், மாடம்பாக்கம், திருவஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வண்டலூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு கூடுதல் இணைப்பு கிடைக்க உள்ளது.

இரண்டு ஆண்டுகள் தாமதத்துக்குப் பிறகு நிறைவடைந்த இறுதிப் பிரிவு

காந்தி சாலையில் அமைந்துள்ள தாம்பரம் கிழக்கு வெளிவட்டச் சாலையை இணைக்கும் வகையில் இந்த மேம்பாலத்தின் இறுதிப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 250 மீட்டர் நீளமும், 15 மீட்டர் அகலமும் கொண்ட இந்தப் பிரிவு இருவழிப் போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேம்பாலப் பணிகளின் ஒரு பகுதியாக இருந்த 33/11 கே.வி. துணை மின்நிலையம் காரணமாக இறுதிப் பிரிவை அமைக்கும் பணியில் சுமார் இரண்டு ஆண்டுகள் தாமதம் ஏற்பட்டது.

இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறை சார்பில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு (TANGEDCO) ரூ.32 கோடி இழப்பீடு வழங்கப்பட்டு, தேவையான நிலம் கையகப்படுத்தப்பட்டது. தொடர்ந்து துணை மின்நிலையம் மாற்றியமைக்கப்பட்டு, மேம்பாலத்தின் இறுதிப் பிரிவுக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பணிகள் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், இன்று முதல் எந்தவிதமான அதிகாரப்பூர்வ திறப்பு விழாவும் இல்லாமல் இந்தப் பகுதி நேரடியாக வாகனப் பயன்பாட்டுக்கு திறக்கப்படுவதாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜி.எஸ்.டி சாலையில் வாகன நெரிசல் குறைய வாய்ப்பு

இந்த இறுதிப் பிரிவு பயன்பாட்டுக்கு வருவதன் மூலம் தாம்பரம், மாடம்பாக்கம், திருவஞ்சேரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள், பரபரப்பாக இருக்கும் ஜி.எஸ்.டி சாலையின் குறிப்பிட்ட பகுதிகளுக்குள் செல்லாமல் பெருங்களத்தூர் மேம்பாலம் வழியாக வண்டலூர் மற்றும் செங்கல்பட்டு நோக்கிச் செல்ல முடியும். இதனால் குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் ஓரளவு குறைய வாய்ப்பு உள்ளது.

மேலும், செங்கல்பட்டு உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் இருந்து சென்னை நோக்கி வரும் வாகனங்கள் கிழக்குத் தாம்பரம், சிட்லபாக்கம், ராஜகீழ்ப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும்போது எதிர்கொள்ளும் சிரமங்களும் குறைய உள்ளன. இதுவரை இந்து மிஷன் கல்லூரி அருகே யூ-டர்ன் எடுத்து செல்ல வேண்டிய நிலை இருந்த நிலையில், புதிய இணைப்புப் பாதை பயன்பாட்டுக்கு வந்த பிறகு மேம்பாலத்தைப் பயன்படுத்தி தங்களது இலக்கை எளிதாக அடைய முடியும்.

ரூ.235 கோடி மதிப்பில் உருவான பெருங்களத்தூர் மேம்பாலம்

பெருங்களத்தூர் ரயில்வே கேட் (LC 32) பகுதியில் நிலவி வந்த போக்குவரத்து சிக்கலுக்கு மாற்றாக, சுமார் ரூ.235 கோடி மதிப்பில் 6 பிரிவுகளைக் கொண்ட நீள்வட்ட வடிவ மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பல்வேறு கட்டங்களாக பணிகள் நிறைவடைந்து, ஒவ்வொரு பிரிவும் படிப்படியாக வாகனப் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டு வந்தது.

இதன் முதல் இரண்டு பிரிவுகள் வண்டலூர் - தாம்பரம் இடையேயான போக்குவரத்துக்காக செப்டம்பர் 2022ஆம் ஆண்டு திறக்கப்பட்டன. தொடர்ந்து புதிய பெருங்களத்தூர் எஸ்.ஆர். சாலை வழிப்பிரிவு ஜூன் 2023ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்தது. அதன்பின்னர் தாம்பரம் - வண்டலூர் இடையேயான மேலும் இரண்டு பிரிவுகள் ஆகஸ்ட் 2024ஆம் ஆண்டு திறக்கப்பட்டன. தற்போது 6-வது மற்றும் இறுதிப் பிரிவு திறக்கப்படுவதன் மூலம் மேம்பாலத்தின் அனைத்து முக்கிய இணைப்புகளும் பயன்பாட்டுக்கு வர உள்ளன.

மேலும் 750 மீட்டர் சாலை 6 வழிப்பாதையாக விரிவாக்கம்

பெருங்களத்தூர் மேம்பாலம் முழுமையாக பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், அடுத்தகட்டமாக காந்தி சாலையின் குறிப்பிட்ட பகுதியை விரிவுபடுத்தும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட உள்ளது. மேம்பாலம் அமைந்துள்ள பகுதியிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள காந்தி சாலையின் 6 வழிப்பாதை, காப்புக்காடு பகுதியை கடக்கும் இடத்தில் சுமார் 750 மீட்டர் தூரத்திற்கு இருவழிப் பாதையாக குறுகுகிறது.

இந்த குறுகிய பகுதி காரணமாக வாகனங்களின் வேகம் குறைந்து, குறிப்பிட்ட நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நிலை உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில் வனத்துறைக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் வழங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சேலையூர் - மாடம்பாக்கம் பயண நேரம் குறையும்

750 மீட்டர் நீளமுள்ள குறுகிய சாலைப் பகுதியும் எதிர்காலத்தில் 6 வழிப்பாதையாக விரிவாக்கம் செய்யப்பட்டால், பெருங்களத்தூர் - காந்தி சாலை வழித்தடத்தில் போக்குவரத்து மேலும் சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் சேலையூர், மாடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் வாகன ஓட்டிகளின் பயண நேரம் குறைவதுடன், தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளின் போக்குவரத்து இணைப்பும் மேம்படும் என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks