விடுமுறையை அள்ளிக்கொடுக்கும் செப்டம்பர்

விடுமுறை என்றாலே அனைவருக்கும் ஜாலி தான், எப்போது விடுமுறை கிடைக்கும் நண்பர்களோடு விளையாட செல்லலாம், சுற்றுலா செல்லலாம் அல்லது உறவினர்கள் வீட்டிற்கு செல்லலாம் என பெரியவர்கள் முதல் மாணவர்கள் வரை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருப்பார்கள். அந்த வகையில் செப்டம்பர் மாதம் மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் ஜாலியான மாதமாக அமைந்துள்ளது. இதற்கு ஏற்றார் போல செப்டம்பர் மாதம் மட்டும் இரண்டு முறை தொடர்ந்து 3 நாட்கள் 3 நாட்கள் என விடுமுறை கிடைத்துள்ளது. கடந்த 4ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தியையொட்டி அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.

கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி விடுமுறை

இதனையடுத்து செப்டம்பர் 5 மற்றும் 6 ஆம் தேதி வார விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதால் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. அடுத்தாக வரும் வாரம் 12,13 மற்றும் 14 ஆம் தேதியும் தொடர் விடுமுறையானது வரவுள்ளது. அந்த வகையில் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆம் தேதி சனி, ஞாயிறு வார விடுமுறையாக உள்ளது. அடுத்தாக செப்டம்பர் 14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியையொட்டி அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை குஷியில் உள்ளனர்.

பள்ளிகளில் காலாண்டு தேர்வு

இந்த நிலையில் மாணவர்களுக்கு அடுத்த ஜாலியான அறிவிப்பாக தொடர்ந்து 9 நாட்கள் விடுமுறையானது வரவுள்ளது. 2026–27 கல்வியாண்டில் தமிழக பள்ளிகளுக்கு மொத்தம் 210 வேலை நாட்களும், 155 விடுமுறை நாட்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.அந்த வகையில்தமிழகத்தில் 2026–27ஆம் கல்வியாண்டுக்கான பள்ளி நாட்காட்டியை பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே வெளியிட்டிருந்தது. இதன் படி, அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வுகள் வருகிற செப்டம்பர் 17 ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.

மாணவர்களுக்கு 9 நாட்கள் தொடர் விடுமுறை

இதனையடுத்து பள்ளி மாணவர்களுக்கு செப்டம்பர் 26ஆம் தேதி முதல் அக்டோபர் 4ஆம் தேதி வரை 9 நாட்கள் காலாண்டு விடுமுறை விடப்படவுள்ளது. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை முடிந்து அக்டோபர் 5ஆம் தேதி திங்கட்கிழமையானது பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ளது. எனவே மாணவர்களுக்கு தொடர்ந்து 9 நாட்கள் விடுமுறை வரவுள்ளதால் குஷியில் உள்ளனர். அதே நேரம் காலாண்டு விடுமுறையில் மாணவர்கள் ஓய்வெடுப்பதுடன், காலாண்டுத் தேர்வில் கற்ற பாடங்களை மீண்டும் படித்துப் பார்க்கவும், அடுத்த பருவப் பாடங்களுக்குத் தயாராகவும் கல்வியாளர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Source: Read Full Article