RTI Act: RTI புதிய அரசாணை...விஜய்க்கு பறந்த கோரிக்கைகள்.. வாபஸ் பெற்ற தவெக அரசு!

RTI Act:  RTI  புதிய அரசாணை...விஜய்க்கு பறந்த கோரிக்கைகள்.. வாபஸ் பெற்ற தவெக அரசு!
News Image

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் சட்டம் ஒழுங்கு தொடர்பான கேள்விகளுக்கு இனி பதில் அளிக்கப்படாது என்ற தமிழ்நாடு அரசின் உத்தரவை திரும்ப பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் நிறுவனங்களிடமிருந்து வெளிப்படையான நிர்வாகம் நடைபெறுவதை பொதுமக்கள் உறுதி செய்யும் வகையில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதனால் தேசிய அளவில் பல ஊழல்கள், குற்றங்கள்  வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு துறையில் நடக்கும் பணிகள் ஏ டூ இசட் தகவல்கள் மக்கள் தெரிந்துக் கொள்வதால் இதற்கு பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. எந்தவொரு இந்தியக் குடிமகனும் எழுத்துப்பூர்வமாகவோ அல்லது இணையம் வழியாகவோ விண்ணப்பித்து தகவல் பெறலாம். இதில் சில நேரங்களில் கேள்விகளுக்கு அரசு தரப்பு பதில் தர மறுப்பு தெரிவிப்பதும் சர்ச்சையாகி வருகிறது.

இந்த நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பாக தமிழ்நாடு அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டது. அதில் தமிழ்நாடு அரசின் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவுக்கு தகவல் அறியும் உரிமை சட்டம் கீழ் விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

எதிர்ப்பு தெரிவித்த அரசியல் தலைவர்கள்

கனிமொழி எம்பி வெளியிட்ட பதிவில், வெளிப்படையான அரசு என்று சொல்லி ஆட்சிக்கு வந்த தவெக அரசு, நான்கே மாதங்களில் மக்களை கேள்வி கேட்கக்கூடாது என்கிறது. 500க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்தும், சட்டம் ஒழுங்கைச் சீர்செய்ய திறனற்ற அரசு, இப்போது தனது தவறை மறைக்க, சட்டம் ஒழுங்கு குறித்த தகவல்களையே மக்கள் கேட்க முடியாதபடி RTI உரிமையைக் கட்டுப்படுத்த முயற்சிப்பது  வெட்கக்கேடானது.இதுதான் மாற்றமா? என விமர்சித்துள்ளார்.

சு.வெங்கடேசன் எம்பி வலியுறுத்தல்

மதுரை நாடாளுமன்ற எம்பி சு.வெங்கடேசன் வெளியிட்ட பதிவில், “தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து பொதுத்துறையின் சட்டம் ஒழுங்கு விவகாரங்களுக்கு மட்டும் விலக்களிக்கப்பட்டுள்ளது. இடதுசாரி அமைப்புகளைக் கண்காணிக்க அரசு அதிகாரிகள் உத்தரவிடுகிறார்கள். காவல் மரணங்கள் நடக்கின்றன. மாணவர் போராட்டங்களை ஒடுக்க கல்வித்துறைக்கு உத்தரவிடப்பட்டுகிறது. கல்லூரி வளாகங்களுக்குள் புகுந்து மாணவர்களைக் கைது செய்கிறது காவல் துறை.

நியாயமான உரிமைக்கான போராட்டங்கள் வன்முறை கொண்டு ஒடுக்கப்படுகிறது. இந்நிலையில் சட்டம் & ஒழுங்கு விவகாரங்களுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து விலக்களிப்பது கடும் கண்டனத்துக்குரியது. இது தமிழ்நாட்டை  போலீஸ் ஸ்டேட்டாக மாற்றத்துணியும் வெளிப்படையான முயற்சி. இந்த உத்தரவை உடனடியாக அரசு திரும்பப்பெற வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

வாபஸ் வாங்கிய தமிழ்நாடு அரசு

இந்த நிலையில் பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததாலும், இதனை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியதாலும், அரசாணை திரும்ப பெறுவதாக தமிழ்நாடு அறிவித்துள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks