Chennai Airport: புதிய நேரடி மேம்பால இணைப்பு சாலையால் சென்னை விமான நிலையத்தின் செயல்பாட்டு திறன் மேம்படும் என கூறப்படுகிறது.

சென்னை விமான நிலையத்தை மேம்படுத்த திட்டம்:

சென்னைக்கான இரண்டாவது விமான நிலையமாக முன்னெடுக்கப்பட்ட பரந்தூர் விமான நிலைய திட்டம் தமிழ்நாடு அரசால் கைவிடப்பட்டது. இதையடுத்து புதிய நிலத்தை அடையாளம் கண்டு அதற்கான ஒப்புதல்களை பெற்று, விமான நிலையத்திற்கான பணிகளை தொடங்க நெடுங்காலமாகக் கூடும் என கூறப்படுகிறது. இதனால் ஏற்படும் இழப்பீட்டை ஈடு செய்ய, ஏற்கனவே உள்ள மீனம்பாக்கம் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யவும், மேம்படுத்தவும் பல்வேறு திட்டங்கள் வேகமெடுத்துள்ளன. அந்த வகையில் தான் இதன் சரக்கு போக்குவரத்து திறனை அதிகரிக்கும் வகையில், ஒரு புதிய நேரடி தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

புதிய நேரடி இணைப்புச் சாலை:

வெளியாகியுள்ள தகவல்களின்படி தாம்பரம் - போரூர் சாலையில் இருந்து நேரடியாக விமான நிலையத்திற்கு வாகனங்கள் வரும் வகையில், புதிய மேம்பால சாலை அமைக்க விமான நிலைய ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்கு விரிவான திட்ட அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பித்து, அனுமதி கோரப்பட்டுள்ளதாம். மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வரும் வாகனங்கள். ஜி.எஸ். டி., சாலை வழியாகத் தான் வர முடியும் என்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மற்ற மாவட்டங்களில் இருந்து வரும் சரக்கு வாகனங்களுக்கு, இது பெரிய தலைவலியாகி அமைகிறது. இவற்றை எளிமைப் படுத்தும் வகையில், ஐந்தாவது பயணியர் முனையம் அமைக்க, விமான நிலைய ஆணையம் முடிவு செய்தது. அதன்படி, தாம்பரம் போரூர் சாலை வழியாக, விமான நிலையத்தின் மறுபுறம் இருந்து, புதிய மேம்பால சாலை அமைக்க திட்டமிடப் பட்டு உள்ளது. இது அடையாறு ஆறின் மீது கட்டமைக்கப்பட உள்ளது.

விரிவான திட்ட அறிக்கை:

இதற்கான விரிவான திட்ட அறிக்கையை, விமான நிலைய ஆணையம் தற்போது தமிழக அரசிடம் சமர்பித்துள்ளது. இந்த சாலை அமைக்க அனுமதி கிடைத்தால், ஜி.எஸ். டி., சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறையும். அதனால், பயணியர் மற்றும் சரக்கு வாகனங்களுக்கான நேரமும் மிச்சமாகும். மற்ற ஊர்களில் இருந்து வரும் சரக்கு வாகனங்களும், மிக எளிமையாக விமான நிலையத்தை அணுக முடியும் என கூறப்படுகிறது. திட்ட அறிக்கைக்கு மாநில அரசு அனுமதி அளித்தால் மேம்பால சாலையை ஆணையமே அமைத்துக் கொள்ள தயாராக உள்ளது.

இதையும் படியுங்கள்: RTI Act: இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு

மேம்பாட்டு பணிகள் தீவிரம்:

சென்னை விமான நிலையத்தில், விமானங்கள் இயக்கப்படும் பகுதிகளில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. அதன்படி, முதல் மற்றும் இரண்டாம் ஓடு பாதைகளில் சீரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்ப்பட்டுள்ளன. இதனால், விமானங்கள் இயக்க நேரம் குறையும். விமான நிலையத்தை சுற்றி, மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள குறிப்பிட்ட சில இடங்களை மேம்பாட்டு பணிகளுக்காக அடையாளம் காணப்பட்டுள்ளன. அதன்படி, மாநில அரசிடம் இருந்து கூடுதலாக 33 ஏக்கர் நிலம் கேட்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையம், மூன்று முனையங்களுடன் செயல்பட்டு வருகிறது. இரண்டாம் கட்ட ஒருங்கிணைந்த சர்வதேச முனையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. சரக்குகளை கையாளும் கார்கோ விமான சேவைகளுக்கு தனி முனையங்கள் உள்ளன. மேலும், விமான நிலையத்தின் பயணிகளை கையாளும் திறனை மேம்படுத்தும் விதமாக, ஐந்தாவது முனையத்திற்கான பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

Source: Read Full Article