Ration Card Special Camp : ஒரே மணி நேரத்தில் ரேஷன் கார்டில் திருத்தம் செய்யலாம்.! இன்று சூப்பர் சான்ஸ் – வெளியான முக்கிய அறிவிப்பு

Ration Card Special Camp : ஒரே மணி நேரத்தில் ரேஷன் கார்டில் திருத்தம் செய்யலாம்.! இன்று சூப்பர் சான்ஸ் – வெளியான முக்கிய அறிவிப்பு
News Image

ரேஷன் அட்டையும் அடையாள ஆவணமும்

ரேஷன் கடைகள் மூலம் ஏழை எளிய மக்களுக்கு மானிய விலையிலும், இலவசமாகவும் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இது மட்டுமில்லாமல் பொங்கல் பரிசு தொகுப்பு, பேரிடர் நிவாரணத்திற்கும் ரேஷன் அட்டை கட்டாயமாக உள்ளது. மேலும் தமிழக அரசு சார்பாக வழங்கப்படும் மகளிர் உரிமை தொகையை பெறவும் ரேஷன் அட்டை முக்கிய ஆவணமாக இருப்பதால் பல லட்சம் மக்கள் புதிய ரேஷன் கார்டுகள் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இந்த நிலையில் ஏற்கனவே உள்ள ரேஷன் அட்டையில் பல போலியான பெயர்கள் சேர்க்கப்பட்டு உணவுப்பொருட்கள் வாங்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து ரேஷன் அட்டையில் உள்ளவர்களின் கை விரல் ரேகை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டில் பெயர்நீக்கம்

இதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்தில் அனைத்து  நியாய விலைக் கடைகளிலும் இன்று   கை விரல் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகளின் ஆதார் விவரங்களை சரிபார்ப்பதற்காக மின்னணு குடும்ப அட்டையில் இணைக்கப்பட்ட அனைத்து பயனாளிகளின் விரல் ரேகை அடிப்படையிலான சரிபார்ப்பினை (eKYC) மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, முன்னுரிமை குடும்ப அட்டைகளில் 96.48% eKYC பணியானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கை விரல் ரேகை கட்டாயம்- சிறப்பு முகாம்

இந்த eKYC பதிவினை 100% நிறைவு செய்யும் பொருட்டு (19.09.2026) இன்று தமிழகத்திலுள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதே போல தமிழகம் முழுவதும் மற்றொரு சிறப்பு முகாமும் நடைபெறவுள்ளது.  இன்று குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம். கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படுவதற்கான சிறப்பு முகாமும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் உணவுப்பொருட்கள் துறையின் முக்கிய அதிகாரிகள் ஒரே இடத்தில் பங்கேற்பதால் உடனடியாக ரேஷன் கார்டுகளில் திருத்தம் செய்ய சூப்பரான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய வாய்ப்பு

அந்த வகையில், பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம்பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் பிரதி மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.

அதன்படி செப்டம்பர் 2026 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம்  உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் அலுவலகங்களில் வரும் இன்று (19.09.2026) காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவைகள் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்களில் பெறப்படும் கடவுச்சொல் வழியாக (OTP) மட்டுமே மேற்கொள்ளப்படும் என்பதால் குடும்ப அட்டைதாரர்கள் பதிவு செய்யப்பட்ட கைபேசியுடன் மண்டல அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks