7 சவரன் தங்க செயினுடன் கரைக்கப்பட்ட விநாயகர்.. சென்னையில் சம்பவம்.. போராடிய இளைஞர்கள்!

7 சவரன் தங்க செயினுடன் கரைக்கப்பட்ட விநாயகர்.. சென்னையில் சம்பவம்.. போராடிய இளைஞர்கள்!
News Image

விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் 7 சவரன் தங்க செயினுடன் சிலை ஒன்று கரைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்

இந்து மதத்தின் முதன்மை கடவுளாக உள்ள விநாயகப் பெருமான் அவதரித்த தினமாக ஆவணி மாதம் வரும் வளர்பிறை சதுர்த்தி உள்ளது. இந்த நாள் விநாயகர் சதுர்த்தி, பிள்ளையார் சதுர்த்தி என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2026ம் ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி கடந்த செப்டம்பர் 14ம் தேதி திங்கட்கிழமை களைகட்டியது. வீதிகளில் திரும்பும் திசையெங்கும் வண்ண மயமான, விதவிதமான தோற்றங்களில் விநாயகர் சிலையானது வைக்கப்பட்டுள்ளது. சிறிய அளவிலான களிமண் சிலைகளை வீட்டிற்கு வாங்கி சென்று விநாயகர் சதுர்த்தி அன்று மக்கள் பிரதிஷ்டை செய்து வழிபடுவது வழக்கம்.

பின் அதனை அருகிலுள்ள நீர் நிலைகளில் விநாயகர் சதுர்த்தி தினத்தில் இருந்து 3,5,7 ஆகிய நாட்களை கணக்கிட்டு கரைப்பது வழக்கம். அந்த வகையில் கடந்த புதன்கிழமை மற்றும் நேற்று வெள்ளிக்கிழமை பல இடங்களில் இந்த சிலை கரைப்பு நிகழ்ச்சியானது நடைபெற்றது.

சென்னையில் சம்பவம் செய்த மூதாட்டி

இதனிடையே சென்னை பள்ளிக்கரணைப் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் விநாயகர் சிலை வாங்கி வீட்டில் வழிபாடு செய்துள்ளார். அப்போது பக்தி மிகுதியில் அந்த சிலைக்கு தன்னுடைய 7 சவரன் நகையை அணிவித்து அழகு பார்த்துள்ளார். பின்னர் நகை இருப்பதை மறந்து பள்ளிக்கரணை ஏரியில் சென்று விநாயகர் சிலையையும் கரைத்துள்ளார். பின்னர் வீடு திரும்பிய அவருக்கு நகையின் நியாபகம் வந்துள்ளது. உடனடியாக அதிர்ச்சியடைந்த அவர் நேரடியாக பள்ளிக்கரணை காவல் நிலையம் சென்று போலீசாரிடம் புகாரளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து உள்ளூர் இளைஞர்கள் உதவியுடன் பள்ளிக்கரணை ஏரிக்கு சென்ற போலீசார், கடும் சிரமங்களுக்கிடையே சேற்றில் சிக்கியிருந்த செயினை மீட்டனர். இதன் பின்னரே அந்த மூதாட்டிக்கு நிம்மதி ஏற்பட்டது. இதுதொடர்பான தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், பலரும் பக்தி முக்கியம்  தான். ஆனால் இந்த அளவுக்கு அல்ல என கமெண்ட் செய்து வருகின்றனர்.

கடலூரில் கிடைக்காத நகை

கடலூர் வண்ணாரப்பாளையத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு அதிகாரி தன் வீட்டில் வைத்த விநாயகர் சிலைக்கு ஒன்றை பவுன் தங்க சங்கிலி அணிவித்து வழிபாடு செய்தார். 3ம் நாளில் சிலையை கடலூர் தேவனாம்பட்டினம் அருகே உள்ள உப்பனாற்றில் கரைத்து விட்டார். பின்னர் நகையை பற்றிய நினைவு வந்ததும் போலீசில் புகாரளித்தார். மீட்புப்படை வீரர்கள், உள்ளூர் மக்கள் என கிட்டதட்ட 9 மணி நேரம் தேடியும் அதனை மீட்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks