மாலை, இரவில் வெளுத்து வாங்கும் மழை

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதே நேரம் மாலை மற்றும் இரவில் மழையானது வெளுத்து வாங்குகிறது. அந்த வகையில் இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பகலில் அதிகரிக்கும் வெயில்

இதனிடையே வரும் நாட்களிலும் தமிழகம் மற்றும் புதுச்சேயில் வெயிலின் தாக்கம் 4 டிகிரி வரை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக டெல்டா வெதர்மேன் தெரிவித்துள்ளார். அதே நேரம் மாலையில் இடி மின்னலோடு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பகலில் சுட்டெரிக்கும் வெயில், உள்மாவட்டங்களில் இரவில் இடிமழை வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பகல் நேர வெப்பநிலை இயல்பிலிருந்து 3-4°© வரை அதிகரித்து காணப்படும். நண்பகலில் அனல்காற்று வீசும்

அக்டோபர் 15 வரை வெப்பச்சலன மழை

சூப்பர் எல் நினோ காரணமாக முதற்கட்ட தாக்கம் அக்டோபர் 15 வரை நீடிக்க கூடும். வளிமண்டலத்தில் நிலவும் காற்றின் வேகமாறுபாடு காரணமாக உள் மாவட்டங்களில் வெப்பச்சலன இடிமழை வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இன்றும், நாளையும் மதுரை , திண்டுக்கல் , கரூர் , திருச்சி , நாமக்கல் , ஈரோடு , சேலம் , தர்மபுரி , கிருஷ்ணகிரி , திருப்பத்தூர் , திருவண்ணாமலை மாவட்டங்களில் பகலில் வெயில் சுட்டெரித்தாலும் மாலை, இரவு, நள்ளிரவு இடி, மின்னலுடன் மழை வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

கடலோர மாவட்டங்கள், காவிரி டெல்டா கடலோரத்தில் குறிப்பிடதக்க மழை வாய்ப்பு தெரியவில்லை. உள் மாவட்டங்களில் மழையின் போது வலுவான இடி,மின்னல் இருக்கும். மழை வாய்ப்பு இரவில் மட்டுமே, மாவட்டம் முழுதும் மழை பரவலாக பெய்யாது, ஆனால் பெய்யும் இடத்தில் 30-40 நிமிடங்கள் நன்றாக பெய்யும் என டெல்டா வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article