தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் பரப்புரையின்போது திமுக-விற்கு ஆதரவாகவும், விஜய்யையும், தவெக-வையும் மிக கடுமையாக விமர்சித்துப் பேசியவர் நடிகர் பிரகாஷ்ராஜ்.

இவர் சமீபத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

மக்கள் முடிவு:

அவர் வந்து இவ்ளோநாள்தானே ஆகுது. மக்கள் தேர்ந்து எடுத்துட்டாங்கதானே. யாரை யாருக்கு பிடிக்கும், பிடிக்காதுங்குறது வேற விஷயம். மக்கள் தேர்ந்தெடுத்து இருக்காங்க. மக்கள் வித்தியாசம் வேணும்னு முடிவு பண்ணிட்டாங்க.

ஒரு வருஷம் டைம் கொடுங்க. மக்கள் தேர்ந்தெடுத்தது அவருக்கு ஓட்டுப்போட்டவங்களுக்கும், ஓட்டுப் போடாதவங்களுக்கும் அவர்தான் முதலமைச்சர். அதுல மாற்றுக்கருத்து கிடையாது. 120 நாள்தான் ஆகியிருக்கிறது. ஆகட்டும் ஒரு வருடம். பார்ப்பதற்கு ஒரு வருஷம் வேண்டும்.

மக்கள் பிரச்சினை:

எல்லாத்தையும் பண்ணிட்டு இருக்காரு. மக்கள் அவர்கள் பிரச்சினையை சொல்லிட்டு இருக்காங்க. தமிழ்நாட்டு மக்கள்தானே அவர்களைத் தேர்ந்தெடுத்து இருக்காங்க. வேற எங்கயும் இல்ல.

இவ்வாறு அவர் பேசினார்.

திருந்திட்டாரு போல... pic.twitter.com/Z4q3GAzBXd

— Peter (@TrendvbAk) September 20, 2026

விஜய்யை மிக கடுமையாக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக விமர்சித்துப் பேசியிருந்தார். தேர்தல் முடிவுகளுக்கு பிறகு மிகவும் அமைதி காத்து வந்த பிரகாஷ்ராஜ் தற்போது விஜய்க்கு ஆதரவு அளிக்கும் வகையில் பேசியுள்ளார்.

பிரகாஷ்ராஜ் ஆதரவாக பரப்புரை செய்த திமுக இந்த தேர்தலில் தனது ஆட்சியை இழந்தது. அக்கட்சியின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலே தோல்வியைத் தழுவினார்.

திமுக தவெக அரசு மீது மின்வெட்டு, சட்டம் ஒழுங்கு சம்பவங்கள் தொடர்பாக தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. தேர்தலுக்கு முன்பு சட்டமன்ற தேர்தலில் விஜய்க்கு எதிராக கோலிவுட் பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்திருந்த நிலையில், தற்போது பெரியளவில் கோலிவுட்டில் யாரும் எதிர்ப்புக்குரல் எழுப்பவில்லை. நடிகர் பிரகாஷ்ராஜ் விஜய் கதாநாயகனாக நடித்த நேருக்கு நேர், கில்லி, போக்கிரி, சிவகாசி, வில்லு, வாரிசு, ஜனநாயகன் ஆகிய படங்களில் அவருடன் இணைந்து நடித்துள்ளார். பிரகாஷ்ராஜ் தமிழக அரசியல் மட்டுமின்றி தேசிய அளவிலும் பிரதமர் மோடி, பாஜக குறித்தும் கடுமையான விமர்சனங்களை தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர்.

Source: Read Full Article