கனமழையால் உயிர்பெற்ற ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி; மகிழ்ச்சியில் விவசாயிகள்!

கனமழையால் உயிர்பெற்ற ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி; மகிழ்ச்சியில் விவசாயிகள்!
News Image

திருப்பத்தூரில் கனமழை கொட்டியதால் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தது. மீண்டும் நீர்வரத்து அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள ஜலகாம்பாறை பகுதியில் புகழ்பெற்ற முருகன் திருக்கோயிலும், இயற்கை எழில் சூழ்ந்த ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியும் அமைந்துள்ளன.

ஏலகிரி மலைப்பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் கடந்த சில மாதங்களாக மழைப்பொழிவு குறைந்திருந்ததால், ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து இல்லாமல் வறண்ட நிலையில் காணப்பட்டது. இதனால் நீர்வீழ்ச்சியை காண வரும் சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் ஏமாற்றமடைந்தனர்.

இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது. குறிப்பாக ஏலகிரி மலைப்பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக மலைப்பகுதிகளில் இருந்து தண்ணீர் பெருக்கெடுத்து வரத் தொடங்கியுள்ளது.

இதன் காரணமாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. பாறைகளின் மீது வெள்ளை நுரை பொங்கியபடி தண்ணீர் கீழ்நோக்கி சீறிப்பாயும் காட்சி பார்ப்பதற்கு ரம்மியமாக காணப்படுகிறது.

நீர்வீழ்ச்சியில் மீண்டும் தண்ணீர் கொட்டத் தொடங்கியுள்ளதால், அப்பகுதி இயற்கை எழில் மிக்கதாக மாறியுள்ளது. இதனை அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.

மேலும், தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் மலைப்பகுதிகளில் இருந்து வரும் நீரின் அளவு அதிகரித்து, சுற்றுவட்டார ஏரிகள், குளங்கள் மற்றும் நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks