திமுக முப்பெரும் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற மு.க.ஸ்டாலின் பேசியதாவது,

அவசியம் இல்லை:

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் மிசா, சர்க்காரிய கமிஷன் என சம்பந்தமே இல்லாமல் பேசி அவதூறு பரப்புகிறார்கள். டைவர்ஷன் செய்கிறார்கள்.

மிசாவைப் பற்றி பேசுகிறவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான். என் மிசா கைதை உங்க எவனுக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. என் தியாகத்திற்கு மார்க் போட உங்க எவனுக்கும் தகுதி கிடையாது.

சிட்டிபாபு டைரி:

என் மிசா வரலாற்றை சிட்டிபாபு தன்னுடைய சிறை டைரியில் பதிவு செய்துள்ளார். அது காலத்தால் அழியாத கல்வெட்டாக அமைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் சிறைச்சாலை சித்திரவதைகள் பற்றி விசாரிக்க எம்ஜிஆர் ஒரு கமிஷன் அமைத்தார். இஸ்மாயில் கமிஷன் அறிக்கை கொடுத்தது. சாட்சி எல்லாம் சொல்லியிருக்கிறேன். எல்லாரும் வந்து சொன்னார்கள்.

மிசா பற்றி பேசுபவர்களுக்கு நான் சொல்வது ஒன்றே ஒன்றுதான். என் மிசா கைதை எவனுக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. எனது தியாகத்திற்கு மார்க் போட எவனுக்கும் தகுதி இல்லை.

கழகத் தலைவர் திரு @mkstalin அவர்கள் #MupperumVizha pic.twitter.com/nofgblMxLw

— DMK IT WING (@DMKITwing) September 19, 2026

படிக்கத் தெரிந்தவனாக இருந்தால் அதை எல்லாம் எடுத்துப் படிக்கட்டும். ஓட்டுப் போட்ட மக்கள் வாக்குறுதிகளைப் பற்றி கேட்டால் அவதூறு பரப்பி ரீல்ஸ் போடுகிறார்கள். உங்க கட்சிக்கு நியாயமாக தமிழக வெற்றிக் கழகம் என்று பெயர் வைத்திருக்கக்கூடாது. தமிழக ரீல்ஸ் கழகம் என்று பெயர் வைத்திருக்க வேண்டும்.

ரீல்ஸ் ஆட்சி:

திமுக தந்தது ரியல் ஆட்சி. இவங்க நடத்துறது ரீல்ஸ் ஆட்சி. ஒரு முறை மக்கள் ஏமாந்து இருக்கலாம். தொடர்ந்து ஏமாறுவார்கள் என்று நினைத்தால் ஏமாறப்போவது முதலமைச்சர்தான். அவதூறு பேசி, கொச்சையாக பேசி, திமுக-வை அவமானப்படுத்தலாம், பலவீனப்படுத்தலாம் என்று செயல்படுகிறார்கள்.

இதை எல்லாம் 78 வருடமாக நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம். கேட்டு கேட்டு புளித்துப்போன இந்த அவதூறுகளை சொல்லும் எதிரிகள்தான் மாறிக்கொண்டு இருக்கிறார்களே தவிர நாங்கள் நிலைத்துதான் நிற்கிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

விவாதம்:

சட்டசபையில் காவல்துறை மானியக்கோரிக்கை மீது பேசிய முதலமைச்சர் விஜய் முன்னாள் முதலமைச்சர் மிசா கைது விவகாரத்தில் மு.க.ஸ்டாலினையும், சர்க்காரியா கமிஷன் விவகாரத்தில் கருணாநிதியையும் மிகவும் கடுமையாக விமர்சித்து பேசினார்.

இந்த சம்பவத்திற்கு பிறகு திமுக-வினர் விஜய்யையும், தவெக-வையும் மிக கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மு.க.ஸ்டாலின் உண்மையில் மிசாவில் கைது செய்யப்பட்டாரா? இல்லையா? என்று பெரும் விவாதம் இணையத்தில் எழுந்தது.

Source: Read Full Article