Maternity Leave : ஒரு வருடம் தொடர் விடுமுறை.! மகளிர் எதிர்பார்த்த சூப்பரான அறிவிப்பு - வெளியானது அரசாணை

Maternity Leave  : ஒரு வருடம் தொடர் விடுமுறை.! மகளிர் எதிர்பார்த்த சூப்பரான அறிவிப்பு - வெளியானது அரசாணை
News Image

மகப்பேறு விடுப்பு காலம்

மகப்பேறு என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிக முக்கியமான காலகட்டமாகும். குழந்தையைப் பெற்றெடுக்கும் காலத்தில் தாயின் உடல் மற்றும் மனநலத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. எனவே, தாயும் குழந்தையும் நலமாக இருப்பதற்காக பணிபுரியும் பெண்களுக்கு வழங்கப்படும் ஓய்வு காலமே மகப்பேறு விடுப்பு எனப்படுகிறது. அந்த வகையில் தமிழக அரசு சார்பாக முதலில் 3 மாத காலம் விடுப்பு வழங்கப்பட்டு வந்தது. அடுத்தாக 6 மாத காலமாக உயர்த்தப்பட்டது. 2017 ஆம் ஆண்டு முதல் 9 மாதங்களாக இருந்த மகப்பேறு விடுப்பு கடந்த 2021ஆம் ஆண்டு முதல் ஒரு வருடமாக உயர்த்தப்பட்டது.

விடுப்பு காலத்தில் தாய்க்கு போதுமான ஓய்வு

இந்த நிலையில்  3வது குழந்தைக்கான மகப்பேறு விடுப்பானது 12 வாரங்களாக இருந்த நிலையில், 365 நாட்களாக உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து மகப்பேறு விடுப்பு காலத்தில் தாய்க்கு போதுமான ஓய்வு கிடைப்பதால் பிரசவத்திற்குப் பிந்தைய உடல் நலத்தை மீட்டெடுக்க முடியும். அதேபோல், குழந்தையின் தேவைகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப பராமரிப்பை வழங்குவதற்கும் இந்தக் காலம் உதவுகிறது. குடும்ப உறுப்பினர்களின் ஆதரவும் பணியிடத்தின் புரிதலும் இக்காலத்தில் மிகவும் முக்கியமானவையாக உள்ளது.

இந்த நிலையில், தமிழக அரசில் பணியாற்றும் திருமணமான பெண் ஊழியர்களுக்கு, 2 குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும். நிலையில், முழு ஊதியத்துடன் 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு ஏற்கனவே வழங்கப்பட்டு வருகிறது. அதே நேரம் 2 குழந்தைகளுக்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ள பெண்களுக்கு 12 வாரங்கள் அதாவது 3 மாதம் மட்டுமே விடுமுறையானது அளிக்கப்படுகிறது.

3வது குழந்தைக்கும் ஒரு வருட விடுமுறை

இந்த நிலையில் தமிழக சட்டமன்றத்தில் மனிதவள மேலாண்மை துறை மானியக் கோரிக்கையின்போது மகளிர்களுக்கு உதவிடும் வகையில், தமிழக அரசில் பணிபுரியும் பெண் ஊழியர்களின் 3வது குழந்தைக்கான மகப்பேறு விடுப்பு காலத்தை 12 வாரங்களில் இருந்து 365 நாட்களாக உயர்த் தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நிரந்தர மற்றும் தற்காலிக பணியில் உள்ள திருமணமான பெண் அரசு ஊழியர்கள் இந்தச் சலுகையை கையை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 365 நாட்கள் விடுப்பு காலத்தில் முழு ஊதியம் வழங்கப்படும். அந்த வகையில் ஒரு வருடத்திற்கான மகப்பேறு விடுப்பை பிரசவத்திற்கு முன்னதாகவோ அல்லது பிந்தைய காலத்திலோ எடுத்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்படுள்ளது. எனவே இந்த அறிவிப்பானது அரசாணை வெளியிடுவதற்கு முன்பாக மகப்பேறு விடுப்பில் சென்றவர்களுக்கு இந்த புதிய சலுகை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks