Madurai kumbabishekam: 17 ஆண்டுகள்.. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு - நேரம், வீதி உலா, பாதுகாப்பு ஏற்பாடு விவரம்

Madurai kumbabishekam: 17 ஆண்டுகள்..  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு - நேரம், வீதி உலா, பாதுகாப்பு ஏற்பாடு விவரம்
News Image

Madurai Meenkshi Amman Temple kumbabishekam: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கை ஒட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு:

ஆகம விதிகளின்படி, இந்து ஆலயங்களில் பொதுவாக 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும். கோயிலின் சிலைகள், கோபுரங்கள் மற்று கட்டிடங்களின் தெய்வீக ஆற்றலை புதுப்பிக்கவும், பழுதுகளை சரிசெய்யவும் இந்த கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கடைசியாக கடந்த 2009ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக 2021ம் ஆண்டும் அரங்கேறி இருக்க வேண்டும். ஆனால், கடந்த 2018ம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட புனரமைப்பு பணிகளால் தாமதமாகி இன்று மகா குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதனால் மதுரை விழாக்கோலம் பூண்டுள்ளது.

மகா குடமுழுக்கு நேர விவரம்:

அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இன்று காலை, 7:40 மணி முதல் 8:10 மணிக்குள் குடமுழுக்கு நடைபெறுகிறது. காலை, 7:40 மணிக்கு அம்மன், சுவாமி தங்க விமானங்கள், ராஜகோபுரங்களுக்கும், காலை, 7:55 மணிக்கு அம்மன் சன்னிதிக்கும், காலை, 8:10 மணிக்கு சுவாமி சன்னிதிக்கும் குடமுழுக்கு நடைபெறும். தமிழ் ஓதுவார்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இதனை தரிசிக்க 9000 பேர் கோயில் மேல் தளத்தில் அனுமதிக்கப்படுகின்றனர். காலை, 10:00 மணிக்கு மேல் பொது தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். கும்பாபிஷேகத்தை காண முடி யாத பக்தர்களுக்காக இன்றிரவு 7 மணிக்கு நான்கு மாசி வீதிகளிலும் மீனாட்சி, சுந்தரேசுவரர் வீதி உலாவில் எழுந்தருளுகிறார். அடுத்த நான்கு நாட்களுக்கு சுவாமி தரிசனத்திற்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவிந்த பக்தர்கள்.. குலுங்கிய மதுரை

குடமுழுக்கை ஒட்டி மதுரையே விழாக்கோலம் பூண்டுள்ளது. கோயிலானது வண்ண விளக்குகளாலும், வண்ண வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கங்கை, யமுனை மற்றும் காவிரி நதியில் இருந்து கொண்டுவரப்பட்ட நீர் கொண்டு சிறப்பு யாகங்கள் நிகழ்த்தப்பட்டன.  இதனால் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெறும் இந்த குடமுழுக்கை காண ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். அடுத்த சில நாட்களுக்கும் அங்கு இதே நிலை தொடர்ந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பக்தர்களுக்கான வசதிகள், ஏற்பாடுகள்:

இந்து சமய அறநிலைய அமைச்சர் ரமேஷ் மற்றும் மதுரை மாவட்ட பொறுப்பு அமைச்சர் நிர்மல்குமார் ஆகியோர் முன்னின்று இந்த பணிகளை செய்து வருகின்றனர். காவல் ஆணையர் ராஜேந்திரன் தலைமையில் 6 ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குடமுழுக்கை ஒட்டி மதுரை மாவட்டத்தில் இன்று இரவு, 10:00 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இரவு வரை கோவயிலை சுற்றியுள்ள சித்திரை, ஆவணி, மாசி வீதிகளில் வாகனங்கள் செல்வதற்கும், நிறுத்துவதற்கும் அனுமதி இல்லை. மதுரை நகருக்குள் சரக்கு, கனரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை.

இதையும் படியுங்கள்: TN Weather News: மதுரையிலும் இன்று கனமழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? சென்னை, தமிழக வானிலை அறிக்கை

மின்சார துண்டிப்பு ஏதேனும் ஏற்பட்டாலும் அடுத்த இரண்டு நிமிடங்களுக்குள் மின்வசதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே கூட்ட நெரிசலை குறைக்கும் நோக்கில், குடமுழுக்கு நிகழ்ச்சிகளானது நகரின் பல்வேறு பகுதிகளில் 42 இடங்களில் எல்இடி ஸ்க்ரீன் மூலம் நேரடி ஒளிபரப்பும் செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே, மீனாட்சி கோவிலை சுற்றி ஆபத்தான நிலையில் உள்ள, 37 பழமையான கட்டடங்களை கண்டறிந்து, அவற்றை ஒரு வாரத்திற்குள் இடித்து அகற்ற மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks