Kolathur Colour Fish Market: திமுக ஆட்சியில் கொளத்தூரில் 53 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட, வண்ண மீன் வர்த்தக மையத்தில் அடிப்படை வசதிகள் இல்லை என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையம்:

கடந்த திமுக ஆட்சியில் அப்போதைய முதலமைச்சர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில், 53 கோடி ரூபாய் செலவில் வண்ண மீன் வர்த்தக மையம் அமைக்கப்பட்டது. பாடி/கொளத்தூர் மேம்பாலம் அருகில் இந்த வர்த்தக மையம் நிறுவப்பட்டுள்ளது. கொளத்துார், சுற்றுப்புறத்தில் உள்ள 200க்கும் மேற்பட்ட வண்ண மீன் கடைகளில் உள்நாடு, வெளிநாடு மீன்கள் இறக்குமதி மற்றும் விற்பனை நடக்கிறது. இதை சார்ந்த உப தொழிலும் அதிகளவில் நடைபெறுகிறது. இதனால் அந்த வண்ண மீன்கள் தொழிலை ஊக்குவிக்கும் வகையில், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., சார்பில், வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், 53.30 கோடி செலவில் வர்த்தக மையம் அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது அது மூடுவிழாவை நோக்கி சென்றுகொண்டிருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.

10 கடைகள் மட்டுமே திறப்பு:

முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலினால் கடந்த ஆட்சியில் தனது தொகுதிக்காக பாத்து பார்த்து கட்டப்பட்ட இந்த மையம் 2025ம் ஆண்டின் இறுதியிலேயே திறந்துவைக்கப்பட்டது. 4 ஏக்கர் அதாவது 1.25 லட்சம் சதுர அடி பரப்பளவில் 180-க்கும் மேற்பட்ட கடைகள், அதிநவீன மீன் தொட்டிகள், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு இடங்கள், உணவகம் மற்றும் 400-க்கும் மேற்பட்ட வாகனங்களை நிறுத்தும் வசதி ஆகியவை இந்த வர்த்தக மைய வளாகத்தில் அமைந்துள்ளன. ஆரம்பத்தில் வியாபாரிகள் பலரும் ஆர்வமுடன் முன்பணம் அளித்த நிலையில், 40 கடைகள் முழுமையாக திறக்கப்பட்டன. ஆனால், தற்போது அங்கு 10 கடைகள் மட்டுமே தினசரி திறக்கப்படுகின்றனவாம். வார இறுதி நாட்களிலும் இதே நிலை நீடிப்பதால், அங்கு வண்ண மீன்களை வாங்க வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனராம்.

அதீத வாடகை - ”தண்ணீர் வசதி கூட இல்லையாம்”

ஆரம்பத்தில் குறைவாக இருந்த இந்த மையத்தில் உள்ள கடைகளின் வாடகை தற்போது 17 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாம். ஆனால், கொளத்தூர் பகுதியில் வெறும் 7 ஆயிரம் ரூபாய்க்கே கடைகள் கிடைக்கிறதாம். வாடகை ஒருபுறம் என்றால், சரியான உட்கட்டமைப்பு வசதிகள் ஏதுமே முறையாக அமைக்கப்படவில்லை என்பது வியாபாரிகளின் குற்றச்சட்டாக உள்ளது. கார்கோ - லிஃப்ட் வசதி இல்லாததால், பெரிய மீன் தொட்டிகளை மேல்தளங்களுக்கு எடுத்து செல்ல சிரமமாக உள்ளது. மீன்களுக்கு தேவையான சுத்தமான தண்ணீர் வசதி கூட இல்லையாம். தனியாரிடம் லிட்டருக்கு, 80 பைசா கொடுத்து தண்ணீர் வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு வியாபாரிகள் தள்ளப்படுகின்றனராம். தண்ணீர் வசதி மற்றும் சோலார் மின்சாரம் போன்றவற்றில் முந்தைய அரசு தரப்பு கவனம் செலுத்தாமலேயே, அவசர கதியில் திறப்பு விழா நடத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதையும் படியுங்கள்: TN Govt: அரசகுமார் மீதான குண்டாஸ் ரத்து ஏன்? தவெக அரசு கோட்டை விட்டது எங்கே? தொடரும் உள்ளடி வேலைகள்

வியாபாரமே இல்லை என கவலை..

கொளத்தூர் பகுதியில் காலை 9 மணிக்கெல்லாம் வண்ண மீன் வியாபாரம் தொடங்கிவிடுகிறதாம். ஆனால், வர்த்தக மையத்தை நோக்கி வாடிக்கையாளர்களை கவர்வத்கற்கான எந்த நடவடிக்கையையும் சிஎம்டிஏ நிர்வாகம் முன்னெடுக்கப்படவில்லையாம். இதனால் வியாபாரமே இல்லாத நிலையிலும், மின்சாரத்திற்கு வணிக ரீதியான கட்டணத்தை செலுத்த வேண்டியுள்ளது. மறுபுறம், முன்பணம் செலுத்தி கடையை திறக்காமல் இருக்கும் நபர்களிடமிருந்து வாடகை வசூலிக்கவும் அதிகாரிகள் கெடுபிடி காட்டுகின்றனராம்.

அரசு நடவடிக்கை எடுக்குமா?

இதனிடையே, ”கொளத்துாரில் கடைகளை காலி செய்து புதிய வண்ண மீன் மையத்தில் அவர்களை அமர்த்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக” அதிகாரிகள் தரப்பு குறிப்பிடுகிறது. இதுமட்டும் போதாது என்றும் கொளத்துாரில் சட்டவிரோதமாக இயங்கி வரும் கடைகளை அகற்றி, வண்ண மீன் வியாபாரத்தை ஒரே இடத்தில் முறைப்படுத்த வேண்டும். மேலும் புதிய வர்த்தக மையத்தில் தேவையான தண்ணீர் மற்றும் சோலார் மின்சாரம் போன்ற வசதிகளை ஏற்படுத்த வேண்டும். இதனால் வியாபாரம் வலுப்பெற்று அரசுக்கும் வருமானம் அதிகரிக்கும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

Source: Read Full Article