"தாய்ப் பத்திரம்" இல்லைனா இவ்வளவு பிரச்சனையா ? சொத்து வாங்கும் போது செய்ய வேண்டிய முக்கிய செக்

"தாய்ப் பத்திரம்" இல்லைனா இவ்வளவு பிரச்சனையா ? சொத்து வாங்கும் போது செய்ய வேண்டிய முக்கிய செக்
News Image

சொத்து அபகரிப்பு சம்பவங்கள் அதிகரிப்பு

பொதுவாக ஒரு நபர் சொத்தை விற்கும் போது தன் பெயரில் கடைசியாக பதிவான பத்திரத்தை அடிப்படை ஆதாரமாக காட்டுவார். பெரும்பாலான மக்களும் , அந்த பத்திரத்தை அப்படியே நம்பி சொத்து வாங்குவது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இறங்குகின்றனர். ஆனால் , ஒரு சொத்து தற்போது யார் பெயரில் இருக்கிறது. அவர் தான் உண்மையான நபரா என்பதை ஆய்வு செய்வதுடன் கூடுதல் விஷயங்களை பார்க்க வேண்டும்.

சில ஆண்டுகள் முன்பு வரை, ஒரு சொத்து தொடர்பான கடைசி பத்திரத்தை அடிப்படையாக வைத்து அடுத்த பத்திரம் பதிவு செய்யப்பட்டது. சமீபகாலமாக சொத்து அபகரிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் , இதில் சில கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. இதன்படி , ஒரு சொத்தை பதிவு செய்யும் போது, அதன் தாய்ப் பத்திரத்தை சரி பார்த்து அதன் குறிப்பிட்ட சில பக்கங்களை ஸ்கேன் செய்து இணைக்க வேண்டும். இந்த விஷயத்தில் சொத்து வாங்குவோரின் நலனையும் , நம்பகத் தன்மையை உறுதி செய்ய தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

"தாய்ப் பத்திரத்தை கேட்கவும்"

ஒரு குறிப்பிட்ட நபர் சொத்தை விற்கும் போது, அது அவர் பெயருக்கு எப்படி வந்தது என்பதற்கான ஆதாரத்தை உறுதி செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் சொத்து உரிமையாளரிடம் இருக்கும் கிரைய பத்திரத்துடன் அதற்கு முந்தைய தாய்ப்பத்திரத்தையும் ஆய்வு செய்ய வேண்டியது கட்டாயம்.

குறிப்பாக , தாய்ப் பத்திரம் ஆய்வு செய்யப்பட்டது என்பதை சார் பதிவாளர் உறுதி செய்ய வேண்டும். சொத்து தற்போதைய உரிமையாளருக்கு யாரிடம் இருந்து எப்படி வந்தது என்பதற்கான ஆதாரமாக தாய்ப் பத்திரம் அமைகிறது. எனவே, சொத்து வாங்கும் போது , விற்பவர் பெயரில் உள்ள பத்திரத்துடன் அமைதியாகி விடாமல் , அதன் தாய்ப் பத்திரத்தை கேட்டு வாங்க வேண்டும்.

"தாய்ப் பத்திரம் யாரிடம் இருக்கும்"

ஒரு சொத்து ஒரு நபருக்கு மட்டும் விற்கப்படுகிறது என்றால் , விற்பவர் வாயிலாக அசல் தாய்ப் பத்திரம் பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆனால் , ஒரு நபர் , தன்னிடம் உள்ள நிலத்தை பல்வேறு பாகங்களாக பலருக்கு விற்கும் போது, அசல் தாய்ப் பத்திரம் யாரிடம் இருக்கும் என்ற கேள்வி எழுகிறது.

அந்த திட்டத்தில் வீடு அல்லது மனை வாங்குவோருக்கு தாய்ப் பத்திரத்தின் நகல் பிரதியை கொடுக்க வேண்டும். கடைசியாக சொத்து வாங்கும் நபரிடம் அசல் தாய்ப்பத்திர பிரதியை ஒப்படைக்க வேண்டும் என்பதே நடைமுறையாக உள்ளது.

எனவே, சொத்து வாங்குவோர் , தாய்ப் பத்திரம் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம். இதில் எந்த நிலையிலும் அலட்சியம் காட்ட கூடாது என்கின்றனர் பதிவுத் துறை அதிகாரிகள்.

வீடு, மனை போன்ற சொத்துகளை வாங்கும் போது அதை விற்பவர் தொடர்பான விஷயங்களை தெளிவாக விசாரிக்க வேண்டியது அவசியம். பொதுவாக ஒரு சொத்து விற்பனைக்கு வருகிறது என்றால் அது தொடர்பாக உங்களிடம் பேசுபவர் தான் உண்மையான உரிமையாளரா என்று பார்க்க வேண்டும். சொத்து , தற்போதைய உரிமையாளருக்கு யாரிடம் இருந்து எப்படி வந்தது என்பதற்கான ஆதாரமாக தாய்ப் பத்திரம் அமைகிறது, எனவே, தாய்ப்பத்திரம் கேட்டு வாங்க வேண்டியது அவசியம்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks