KN Nehru DVAC Raid: திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின், திருச்சி தில்லை நகர் வீட்டில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கே.என். நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு..!

தமிழக முன்னாள் அமைச்சர் கே.என் நேருவின் தில்லைநகர் 5வது குறுக்குத் தெருவில் இருக்கும் அவரது வீட்டில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். லஞ்ச ஒழிப்புத்துறை கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நகராட்சி நிர்வாகத் துறையில் அவர் அமைச்சராக இருந்த பொழுது வேலை வாங்கி தருவதாக கூறி ஆயிரம் கோடி ரூபாய் பணம் பெற்றதாக கூறிய புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனை தொடர்பான தகவல் அறிந்த திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் திமுக பிரமுகர்கள் பலரும் கே.என். நேருவின் வீட்டிற்கு முன் குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் குவிப்பு - 19 இடங்களில் சோதனை

திமுக பிரமுகர்கள் குவிய தொடங்கியதை அடுத்து சம்பவ இடத்திற்கு மாநகர காவல்துறை துணை ஆணையர், உதவி ஆணையர் மற்றும் 30க்கும் மேற்பட்ட காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து கே என் நேரு அவர்கள் வீட்டிலிருந்து வெளியே வந்து அங்கிருந்த கட்சியினரை பார்த்து அலுவலகத்துக்கு செல்லுமாறு கூறினார். திருச்சியில் கே என் நேரு உட்பட தமிழகம் முழுவதும் 19இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். செந்தில் பாலாஜியை தொடர்ந்து கே.என். நேரு வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் களமிறங்கி இருப்பது திமுக தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையிலும் சோதனை..!

சென்னையில் அடையாறு, திருவான்மியூர், அண்ணா நகர், ஆர். ஏ. புரம் உள்ளிட்ட இடங்களில், கே.என். நேரு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறதாம். சட்டவிரோதமாக பார்ட்டி ஃபண்ட் என்ற முறையில் பணம் வசூலித்து சொத்துகளை வாங்கி குவித்ததாக எழுந்த புகாரின் பேரிலும், நேருவின் சகோதரர் கே. என். ரவிச்சந்திரன் தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடத்தப்படுகிறதாம்.

இதையும் படியுங்கள்: Chennai Kumbakonam: சென்னை டூ கும்பகோணம் இனி பறக்கலாம்..! விக்கிரவாண்டி - சேத்தியதோப்பு NHAI அப்டேட் - ரூ.2,000 கோடி, 66KM

Source: Read Full Article