ஈரானின் ஆளில்லா விமான மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள், ஆயுத மோதல்கள், பயங்கரவாதம், நாடு கடத்துவதற்கான கட்டுப்பாடுகள் மற்றும் சமூக ஊடகங்கள் தொடர்பான கடுமையான உள்ளூர் சட்டங்கள் ஆகியவற்றின் அச்சுறுத்தல்கள் காரணமாக, சவூதி அரேபியாவுக்கான பயணத்தை மறுபரிசீலனை செய்யுமாறு, தனது குடிமக்களுக்கு அறிவுறுத்தி, அமெரிக்க வெளியுறவுத்துறை ஒரு புதிய பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது.

குடிமக்களுக்கு கடுமையான அறிவுரை

அமெரிக்க வெளியுறவுத் துறை, சவூதி அரேபியாவிற்கு "நிலை 3: பயணத்தை மறுபரிசீலனை செய்யுங்கள்" என்ற ஆலோசனையையும், ஏமனுடனான சில எல்லைப் பகுதிகளுக்கு மிகவும் கடுமையான "நிலை 4: பயணம் செய்ய வேண்டாம்" என்ற எச்சரிக்கையையும் வெளியிட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி அன்று, அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே ராணுவ ரீதியிலான மோதல் தொடங்கியதிலிருந்து, ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களின் அச்சுறுத்தல் அப்பகுதியின் பாதுகாப்புச் சூழலை பாதித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான போர் முடிவுக்கு வருவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. சவுதி அரேபியாவிற்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் வணிக விமானங்கள் தொடர்ந்தாலும், விமான சேவைகள் சில நேரங்களில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

அச்சுறுத்தும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள்

ஈரானின் ஆதரவு பெற்ற ஏமன் ஹவுதி தீவிரவாதிகள், சவுதி அரேபியா மீது மீண்டும் தாக்குதல்களைத் தொடுக்கப் போவதாக அச்சுறுத்தியுள்ளனர். நடுவானில் அழிக்கப்பட்ட ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானத்தின் சிதைவுகளும், உயிர் மற்றும் உடைமை இழப்பு அபாயத்தை ஏற்படுத்துகின்றன. ஏமன் எல்லைக்கு அருகிலும், ராணுவத் தளங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகளுக்கு அருகிலும் வசிக்கும் அமெரிக்கக் குடிமக்களுக்கு பெரும் அபாயம் உள்ளது.

பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்த அச்சம்

பயங்கரவாதிகள் முன்னறிவிப்பின்றி தாக்குதல்களை தொடங்கலாம். பண்டிகைக் காலங்களில் இந்த அச்சுறுத்தல் தீவிரமாகும். இந்த தாக்குதல்களில், ஆயுதங்கள், கத்திகள் அல்லது வாகனங்கள் பயன்படுத்தப்படலாம். சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாட்டினர் கூடும் இடங்கள், மத மற்றும் கலாச்சாரத் தலங்கள், ஹோட்டல்கள், வணிக வளாகங்கள், போக்குவரத்து மையங்கள், பொழுதுபோக்கு இடங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் ஆகியவை, பயங்கரவாதிகளின் முக்கிய இலக்குகளாக இருக்கலாம். அப்பகுதியில் நடைபெற்று வரும் ராணுவ நடவடிக்கைகளுக்கு பதிலடியாக, பயங்கரவாதிகள் வன்முறையில் ஈடுபடக்கூடும் என்று அமெரிக்க நிர்வாகம் எச்சரித்துள்ளது.

Source: Read Full Article