Ind Vs WI: சூறாவளியாய் வெளுக்கும் மேற்கிந்திய தீவுகள் - இந்திய அணி கன்ட்ரோல் செய்யுமா? கோலி விட்ட கேட்ச்

Ind Vs WI: சூறாவளியாய் வெளுக்கும் மேற்கிந்திய தீவுகள் - இந்திய அணி கன்ட்ரோல் செய்யுமா? கோலி விட்ட கேட்ச்
News Image

Ind Vs WI 2nd ODI: இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி, 40 ஓவர்கள் முடிவில் 329 ரன்களை குவித்துள்ளது.

இந்தியாவை வெளுத்து மே.தீவுகள்., அணி புது சாதனை

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியின் தொடக்க வீரர் கார்டி, வெறும் 9 ரன்களுக்கே ஆட்டமிழந்தார். இதனால் கில் தலைமையிலான அணி உற்சாகமடைந்தது. ஆனால், இரண்டாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த ஜாம் கேம்பெல் மற்றும் சாய் ஹோப் ஆகியோர் இந்திய அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். தொடர்ந்து வந்த அமிர் ஜாங்கோவும் சதம் விளாச, இந்திய அணிக்கு எதிரான வரலாற்று சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளனர். அதாவது ஒருநாள் போட்டியில் ஒரே ஆட்டத்தில் இந்திய அணிக்கு எதிராக மூன்று சதங்களை விளாசிய இரண்டாவது அணி என்ற பெருமையை பெற்றுள்ளது.

அதிரடியாக சதம் விளாசிய 3 பேர்:

தொடக்க ஆட்டக்காரரான கேம்பெல் 68 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு, 9 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்கள் உட்பட 101 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். சாய் ஹோப் 94 பந்துகளை எதிர்கொண்டு 8 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் உட்பட 104 ரன்களை குவித்துள்ளார். மற்றொரு வீரரானஅமிர் ஜாங்கோ 77 பந்துகளில் 13 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் உட்பட 114 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். முன்னதாக கடந்த 2015ம் ஆண்டு இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தென்னாப்ரிக்கா அணி 3 சதங்களை விளாசி இருந்தது குறிப்பிடத்தக்கது.

கோலி விட்ட கேட்ச்..!

சாய் ஹோப் 27 ரன்கள் எடுத்து இருந்தபோது நமன் தீர் வீசிய 20வது ஓவரின் இரண்டாவது பந்தை வலுவாக அடிக்க முயல, கோலி வசம் வந்த எளிய கேட்ச் வாய்ப்பை அவர் நழுவவிட்டார். அதன் பிறகு நிலைத்து நின்று ஆடிய சாய் ஹோப், ஒருநாள் போட்டிகளில் தனது 20வது சதத்தை பூர்த்தி செய்து, இந்திய அணி மிகப்பெரிய இலக்கை சேஸ் செய்ய வேண்டிய சூழலை உருவாக்கிக் கொடுத்துள்ளார்.

இதையும் படியுங்கள்: TN Weather News: கனமழை பொளக்க போகுது..! இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - சென்னை? தமிழக வானிலை

இந்திய அணி கன்ட்ரோல் செய்யுமா?

மூன்று வீரர்களின் அதிரடியான சதத்தால் இந்திய அணி மிகப்பெரிய இலக்கை சேஸ் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் ரூதர்ஃபோர்ட் போன்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, 44 ஓவர்கள் முடிவில் 360 ரன்களை எடுத்துள்ளது. மீதமுள்ள 6 ஓவர்களை துல்லியமாக வீசி மேற்கிந்திய தீவுகள் அணி 400 ரன்களை இலக்காக நிர்ணயிப்பதை இந்திய அணி தடுக்குமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். 3 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks