வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி நாளை சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளும் மோதிய முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி விராட் கோலி, சுப்மன் கில்லின் அபார சதத்தால் அபார வெற்றி பெற்றது.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ்:

இந்த நிலையில், இரு அணிகளும் மோதும் 2வது ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா அணிகள் முழு பலத்துடன் களமிறங்குகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றலாம் என்ற எண்ணத்தில் இந்திய அணி களமிறங்குகிறது.

முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்டிங் அபாரமாக இருந்த நிலையில், அவர்களின் பந்துவீச்சு சொதப்பலாக இருந்தது. இதனால், இந்த போட்டியில் அவர்கள் பந்துவீச்சை சரி செய்ய ஆர்வம் காட்டுவார்கள்.

பேட்டிங் பலம்:

இந்திய அணியைப் பொறுத்தமட்டில் பேட்டிங்கில் தொடக்க வீரரும், கேப்டனுமாகிய சுப்மன்கில் பலமாக உள்ளார். முன்னாள் கேப்டன்கள் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியும் மிகுந்த வலுவாக பேட்டிங்கில் உள்ளனர். கடந்த போட்டியில் விராட் கோலி மற்றும் சுப்மன்கில் இருவரும் சதம் விளாசி அசத்தினர். இதனால், நாளைய போட்டியில் மிகுந்த ஆர்வமாக ஆடுவார்கள்.

வெஸ்ட் இண்டீஸ் அணியிலும் பேட்டிங்கில் கேம்பால், கிரீவ்ஸ், ஜாங்கோ, சேஸ் ஆகியோரும் அசத்தலாக பேட் செய்து வருகின்றனர். குறிப்பாக, கடந்த போட்டியில் கிரீவ்ஸ் அசத்தலாக பேட் செய்தார். அவர் சதம் விளாசி அசத்தினார். ஜாங்கோவும் பின்வரிசையில் அசத்தலாக பேட் செய்தார்.

பந்துவீச்சு கவலை:

இரு அணியைப் பொறுத்தமட்டிலும் பந்துவீச்சு கவலைக்குரிய வகையிலே உள்ளது. இந்திய அணியில் கடந்த போட்டியில் பிரசித் கிருஷ்ணா, நிதிஷ் ரெட்டி, குர்னூர் ப்ரார் ஆகியோர் வேகத்தில் ரன்களை வாரி வழங்கினர். இதனால், நாளைய போட்டியில் கட்டுப்பாடுடன் பந்துவீச வேண்டியது அவசியம் ஆகும். சீல்ஸ், ஃபோர்ட், ஜோசப், மோதி, சேஸ், கார்ட்டி ஆகியோர் சிறப்பாக பந்துவீசினால் இந்திய அணிக்கு சவாலாக அமையும்.

40 ஆயிரம் பேர் அமரும் வகையில் இருக்கையுடன் உள்ள இந்த கவுகாத்தி மைதானம் பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் வகையில் இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த மைதானத்தில் இதுவரை 8 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளது. இதில் 4 போட்டியில் முதலில் பேட் செய்த அணியும், 4 போட்டியில் 2வது பேட் செய்த அணியும் வெற்றி பெற்றுள்ளது.

மைதானம் எப்படி?

சராசரியாக முதல் இன்னிங்சில் 225 ரன்களும், 2வது இன்னிங்சில் 183 ரன்களும் எடுக்கலாம். இந்த மைதானத்தில் அதிகபட்சமாக இந்தியா இலங்கைக்கு எதிராக 373 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 326 ரன்களை சேஸ் செய்துள்ளது. அந்த போட்டியிலும் விராட் கோலி 140 ரன்கள் விளாசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ரோகித் சர்மாவும் ஆட்டமிழக்காமல் 152 ரன்கள் எடுத்திருந்தார் என்பதும் கவனிக்கத்தக்கது.

Source: Read Full Article