சத்துணவுப் பணியாளர் மகனுக்கு இவ்வளவு சொத்தா?.. உழைத்து சம்பாதிச்சீங்களா? - ஆதவை விளாசிய அதிமுக!

சத்துணவுப் பணியாளர் மகனுக்கு இவ்வளவு சொத்தா?..  உழைத்து சம்பாதிச்சீங்களா? - ஆதவை விளாசிய அதிமுக!
News Image

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மகன் மிதுன் பற்றி தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசிய கருத்துக்கு அக்கட்சி கடுமையான பதிலடி கொடுத்துள்ளது.

கோவை விமான நிலையத்தில் ஆதவ் அர்ஜூனா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அதிமுகவை எடப்பாடி பழனிசாமியும், அவரது மகன் மிதுனும் தான் வழிநடத்துகிறார்கள் என கடுமையாக சாடினார். இதற்கு அதிமுக கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது.

அக்கட்சி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இன்று காலை செய்தியாளர் சந்திப்பில் பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மிக மோசமான ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார். அதிமுக கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் மகன் கட்சியில் அடிப்படை உறுப்பினர் தவிர எந்த பொறுப்பும் வகிக்காத போது, அவரைப் பற்றி வாய்க்கு வந்ததை அவதூறாக அள்ளி வீசுவது கடும் கண்டனத்திற்குரியது.

“சொத்து அபகரிப்பு” என்ற சொல்லை உச்சரிக்க இவருக்கு என்ன தகுதி இருக்கிறது?. எங்களைப் பொறுத்தவரை, அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற பிறகு, கட்சியின் சொத்துகள், வங்கி இருப்புகள் உயர்ந்து இருக்கிறதே தவிர குறையவில்லை என்பதை வெளிப்படையாக தெரிவிக்கிறோம்.சாதாரண சத்துணவுப் பணியாளரின் மகனாகப் பிறந்த “எளிய மனிதரான”  ஆதவ் அர்ஜுனா, 2026 தேர்தல் சொத்து மதிப்பில் காட்டிய சொத்துகளின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? 534.90 கோடி ரூபாய்!

இவரின் குடும்ப சொத்துகளைச் சேர்த்தால் பல ஆயிரம் கோடிகள் கூட இருக்கலாம்.  இவ்வளவு சொத்தை  ஆதவ் அர்ஜுனா உழைத்து சம்பாதித்தாரா என்ன? எப்படி இவ்வளவு சொத்து வந்தது என்பதை இந்த வாய்ச்சொல் வீரர் பொதுவெளியில் சொல்வாரா?.. தன் மாமனார் சொத்தை அபகரித்து தான் ஆதவ் அர்ஜுனா அவர்களின் சொத்து வந்திருக்கிறது என்று நாங்கள் சொல்லலாமா? அதேபோல், அதிமுகவைப் பொறுத்தவரை, எங்கள் கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியின் சுதந்திர முடிவையும் மதிக்கும் பக்குவம் எங்களுக்கு உள்ளது.

தங்கள் கூட்டணியில் இருக்கும் கல்லாப்பெட்டி கட்சிகளை கிஞ்சற்றும் மதிக்காமல், நீங்கள் பொதுக்கூட்டம் நடத்திக் கொள்ளுங்கள், நானெல்லாம் வரமாட்டேன்  என்று நவீன தீண்டாமையை கூட்டணியிலேயே கடைபிடிக்கும் ஒரு கட்சித் தலைவரை ஏற்றுள்ள ஆதவ் அர்ஜுனா , எங்கள் கூட்டணியைப் பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூலதனம் எங்கள் தொண்டர்கள் தான். கூட்டணி இருந்தாலும், இல்லாவிட்டாலும், எங்கள் கழகத்தின் தொண்டர்கள் உழைப்பில் நின்று வெற்றிபெறக் கூடிய தெம்பு, திராணி எங்களுக்கு உள்ளது. திமுக-வுக்கு அளித்த வாக்குகளால் வெற்றி பெற்ற கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களிடம் இரவல் பெற்று ஆட்சியின் ஒவ்வொரு நாளையும் கடத்திக் கொண்டிருக்கும் தவெக-வுக்கு, கழகம் என்றால் உயிரைக் கொடுத்து உழைக்கும் எங்கள் இயக்கத்தைப் பற்றி பேச எந்த அருகதையும் இல்லை” என தெரிவித்துள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks