IND vs WI: ஃபயர் காட்டுவாரா கோலி.. வெளுத்து வாங்குவாரா ரோகித்? ஆசையோடு காத்திருக்கும் ரசிகர்கள்!

IND vs WI: ஃபயர் காட்டுவாரா கோலி.. வெளுத்து வாங்குவாரா ரோகித்? ஆசையோடு காத்திருக்கும் ரசிகர்கள்!
News Image

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் ஆட உள்ளது. 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகளில் இந்தியா ஆட உள்ளது.

விராட் கோலி - ரோகித் சர்மா:

டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே இந்திய அணிக்காக ஆடி வருகின்றனர். 2027 உலகக்கோப்பையில் இவர்கள் இருவரும் ஆடுவார்கள் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

27ம் தேதி தொடக்கம்:

இரு அணிகளும் மோதும் முதல் ஒருநாள் போட்டி வரும் 27ம் தேதி கேரளத்தின் தலைநகர் திருவனந்தபுரத்தில் நடக்கிறது.  ஷாய் ஹோப் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவிற்கு வந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. விராட் கோலியும் லண்டனில் இருந்து கேரளாவிற்கு வந்து அணியுடன் இணைந்துள்ளனர்.

இந்திய அணி கேப்டன் சுப்மன்கில் தலைமையில் களமிறங்குகிறது. ரோகித் சர்மா, விராட் கோலி, ருதுராஜ் கெய்க்வாட், கே.எல்.ராகுல், துருவ் ஜுரல், நிதிஷ்குமார் ரெட்டி, ஜடேஜா, குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் ப்ரார், சிராஜ், நபி, ஜெய்ஸ்வால், நமன் தீர் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளனர்.

சிறப்பாக ஆடுவார்களா?

ஒருநாள் உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில் இந்திய அணி கட்டமைக்கப்பட்டு வருகிறது. பும்ராவிற்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி கடைசியாக ஆடிய ஒருநாள் தொடரில் சுப்மன்கில், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய 3 பேர் மட்டுமே அணியை தாங்கிப் பிடித்தனர். மற்றவர்கள் சிறப்பாக ஆடவில்லை. இதனால், அவர்கள் சிறப்பாக ஆடுவதற்கு இந்த தொடர் ஒரு சிறந்த வாய்ப்பாக கருதப்படுகிறது.

ரசிகர்களுக்கு விருந்தா?

ஷாய் ஹோப் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஆண்ட்ரூ, கேம்பால், கார்ட்டி, ரோஸ்டன் சேஸ், ஃபோர்ட், கிரீவ்ஸ், ஜாங்கோ, அல்சாரி ஜோசப், ஷமர் ஜோசப், மோதி, கீமோ பால், ரூதர்ஃபோர்ட், சீல்ஸ் இடம்பிடித்துள்ளனர். இந்த தொடர் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்தாண்டு நடைபெற உள்ள உலகக்கோப்பைத் தொடரில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் ஆடுவதில் அணியின் பயிற்சியாளர் கம்பீர் மற்றும் தேர்வுக்குழு தலைவர் அகர்கர் சந்தேகம் தெரிவித்து வருகின்றனர். ஆனால், அவர்களது கருத்துக்கு பதிலடி தரும் வகையில் இவர்கள் இருவரும் தொடர்ந்து சிறப்பாக ஆடி வருகின்றனர். இந்த சூழலில், இந்த தொடரிலும் தங்களது திறமையை மீண்டும் நிரூபித்து இவர்கள் இருவரும் பிசிசிஐ நிர்வாகத்திற்கு பதிலடி தருவார்கள் என்று கருதப்படுகிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks