மொத்த தமிழ்நாட்டின் கவனமும் தற்போது ஜெம் வீரமணி வழக்கின் பக்கம் திரும்பியுள்ளது. இந்த விவகாரத்தில் தினசரி பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

திமுக-விற்கு கரும்புள்ளி:

இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 2024ம் ஆண்டே காவல்துறையில் புகார் அளித்ததாக தமிழக காங்கிரஸின் முக்கிய நிர்வாகி ரஞ்சன்குமார் புகார் அளித்திருந்த நிலையில், இந்த விவகாரத்தில் திமுக ஆட்சியில் எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளாதது திமுக-விற்கு பெரிய கரும்புள்ளியாக அமைந்துள்ளது.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக திமுக-விற்கு தவெக கேள்வி எழுப்பியுள்ளது. இதுதொடர்பாக அவர்கள் தங்கள் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

தெரியாதா?

வீரமணி வழக்கு குறித்து சமீபத்தில் வெளியாகும் தகவல்களின்படி, 2024-லேயே இந்த விவகாரம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

அப்போது காவல்துறை அமைச்சராக இருந்தவருக்கு இதைப் பற்றி தெரியாதா? இல்லை, தெரிந்தும் டம்மியாக இருந்தாரா?

2025-ல் வழக்குப் பதிவு செய்யப்பட்டதும், முறையான…

— TVK IT Wing Official (@TVKHQITWingOffl) September 24, 2026

வீரமணி வழக்கு குறித்து சமீபத்தில் வெளியாகும் தகவல்களின்படி, 2024-லேயே இந்த விவகாரம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. அப்போது காவல்துறை அமைச்சராக இருந்தவருக்கு இதைப் பற்றி தெரியாதா? இல்லை, தெரிந்தும் டம்மியாக இருந்தாரா? 2025-ல் வழக்குப் பதிவு செய்யப்பட்டதும், முறையான விசாரணை செய்யாமல் பின்னர் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதும் கூட டம்மிக்கு தெரியாதா?

டம்மிகளின் டாடியா?

உள்துறையை கையில் வைத்திருந்த இரும்புக்கரத்திற்கு, தனது துறையில் என்ன நடக்கிறது என்றே தெரியாத அளவுக்கு டம்மிகளின் டாடியாக இருந்தாரா? வீரமணி வழக்கில் வாய்த் திறக்க மறுப்பது ஏன்? வழக்கை முடிக்க எத்தனித்ததற்கு பொறுப்பேற்க மறுப்பது ஏன்?

இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சியில் காவல்துறையின் அமைச்சராக பொறுப்பு வகித்தவர் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்த விவகாரம் தொடர்பாக கடந்த திமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்து முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கேள்வி அளித்த விளக்கம் தொடர்பாகவும் அமைச்சர் நிர்மல்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த விவகாரத்தில் தவெக அரசு மிகுந்த தீவிரமாக விசாரணையை மேற்கொண்டு வரும் சூழலில், அப்போது காவல் ஆணையராக இருந்த அருண், அந்த வழக்கு விசாரணையில் தொடர்புடைய கண்ணன், யாஷ்மின் ஆகிய இருவரையும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

விரைவில் இவர்களிடமும் விசாரணை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கில் காவல்துறையின் முக்கிய அதிகாரிகள் மட்டுமின்றி இந்த குற்றச்சாட்டின் பின்னணியில் உண்மையை மறைக்க முக்கிய அரசியல் தலைவர்கள் சிலரும் உடந்தையாக இருந்ததாகவும் கருதப்படுகிறது.

இதனால், இந்த வழக்கின் விசாரணையில் அடுத்து வரும் நாட்களில் இன்னும் முக்கிய குற்றவாளிகள் பலரும் சிக்கலாகும் என்று கருதப்படுகிறது. இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் அனைவருக்கும் உரிய தண்டனை வாங்கித் தர வேண்டும் என்று மக்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் ஜான்பாண்டியனும், ரஞ்சன்குமாரும் பல்வேறு தகவல்களை பேட்டியில் தெரிவித்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் அவர்களிடமும் விரைவில் விசாரணை நடத்தப்படும் என்று கருதப்படுகிறது.

Source: Read Full Article