Holiday Special Bus : 3 நாட்கள் தொடர் விடுமுறை! சொந்த ஊர் செல்வோருக்கு அடித்தது ஜாக்பாட் - சிறப்பு பேருந்துகள் முழு விவரம் இதோ

Holiday Special Bus : 3 நாட்கள் தொடர் விடுமுறை! சொந்த ஊர் செல்வோருக்கு அடித்தது ஜாக்பாட் - சிறப்பு பேருந்துகள் முழு விவரம் இதோ
News Image

3 நாள் தொடர் விடுமுறை

விடுமுறை என்றாலே அனைவருக்கும் ஜாலி தான், அந்த வகையில் எப்போது விடுமுறை கிடைக்கும் எப்போது சுற்றுலா செல்லலாம் என திட்டமிடுபவர்களுக்கு குஷியான அறிவிப்பாக தொடர்ந்து 3 நாள் விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வருகிற சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறையாகும், இதனை தொடர்ந்து திங்கட்கிழமை விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து 3 நாள் தொடர் விடுமுறையையொட்டி வெளியூர் செல்லும் பயணிகளுக்கு சிறப்பு பேருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்து

இது தொடர்பாக அரசு விரைவுப்போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 10/09/2026 (வியாழக்கிழமை) 11/09/2026 (வெள்ளிக்கிழமை) 12/09/2026 (சனிக்கிழமை), 13/09/2026 (ஞாயிற்றுக்கிழமை முகூர்த்தம்) 14/09/2026 (விநாயகர் சதுர்த்தி) மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழநாடு முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களால் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 10/09/2026 (வியாழக்கிழமை) அன்று 585 பேருந்துகளும் 11/09/2026 (வெள்ளிக்கிழமை) அன்று 1255 பேருந்துகளும், 12/09/2026 (சனிக்கிழமை) அன்று 1030 பேருந்துகளும் 13/09/2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று 650 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

எந்த எந்த ஊர்களுக்கு சிறப்பு பேருந்து.?

இதே போல  சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 11/09/2026 வெள்ளிக்கிழமை அன்று 240 பேருந்துகளும், 12/09/2026 சனிக்கிழமை அன்று 240 பேருந்துகளும், 13/09/2026 ஞாயிற்றுக்கிழமை அன்று 105 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதவரத்திலிருந்து 11/09/2026 முதல் 13/09/2026 வரையிலான நாட்களில் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், வேலூர், ஓசூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு ஒவ்வொரு நாளும் 110 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

முன்பதிவு செய்து பயணியுங்கள்

மேலும், திங்கள் அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் 14/09/2026 (திங்கட்கிழமை) அன்று 765 சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வார இறுதியில் வியாழக்கிழமை அன்று 8666 பயணிகளும் வெள்ளிக்கிழமை அன்று 32171 பயணிகளும் சனிக்கிழமை 18772 பயணிகளும், ஞாயிறு அன்று 11177 மற்றும் திங்கள் அன்று 23740 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் TNSTC Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks