Hiranandani: சென்னையில் 215 ஏக்கரில் ரூ.2,000 கோடியில் ப்ரீமியம் திட்டம் - 50 லட்சம் சதுர அடி பரப்பளவு, வேலைவாய்ப்பு

Hiranandani: சென்னையில் 215 ஏக்கரில் ரூ.2,000 கோடியில் ப்ரீமியம் திட்டம் - 50 லட்சம் சதுர அடி பரப்பளவு, வேலைவாய்ப்பு
News Image

Hiranandani Office Space: சென்னையில் சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 5 மில்லியன் சதுர அடி பரப்பளவில் தொழில் நிறுவனங்களுக்கான வசதிகளை ஏற்படுத்த உள்ளதாக ஹிராநந்தினி குழுமம் அறிவித்துள்ளது.

சென்னையில் 215 ஏக்கரில் மெகா திட்டம்:

ஹிராநந்தினி குழுமத்தின் ஆதரவு பெற்ற க்ரீன்பேஸ் இண்டஸ்ட்ரியல் & லாஜிஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், சென்னையில் சுமார் 215 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த 2 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டின் மூலம் 90 லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த நிலத்திலிருந்து, 50 லட்சம் சதுர அடி பரப்பளவிற்கான நிலத்தொகுப்பை ஏற்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக மேலும் ஆயிரத்து 500 கோடி ரூபாயை முதலீட்டில் 40 லட்சம் சதுர அடி நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாகவும், இதன் மூலம் க்ரீன் பேஸின் ஒட்டுமொத்த வளர்ச்சி 90 லட்சம் சதுர அடி பரப்பளவிற்கு விரிவாகும் என கூறப்பட்டுள்ளது.

க்ரீன்பேஸ் 2.0 திட்டம் - நில விவரங்கள்:

தனது அடுத்த கட்ட வளர்ச்சிக்காக க்ரீன்பேஸ் 2.0 எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தி, இதற்காகஓரகடம் அடுத்த பாலூரில் 160 ஏக்கரையும், வடசென்னையின் ஆரணியில் 55 ஏக்கரையும் அந்நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது. இந்தியாவின் முக்கிய உற்பத்தி வழித்தடங்கள் முழுவதும் தரமான தொழில்துறை, கிடங்கு மற்றும் தளவாட உள்கட்டமைப்புகளில் கவனம் செலுத்தும் வகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.  தரம் A தொழில்துறை மற்றும் கிடங்கு இடங்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்தத் திட்டங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

தொழில் நிறுவனங்களுக்கான மையம்:

கிரீன்பேஸ் நிறுவனம், சென்னையின் ஓரகடம் மற்றும் புனேவின் தலேகாவ்ன் ஆகிய இடங்களில் உள்ள தனது தற்போதைய தொழிற்பூங்காக்களில் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றுள்ளது. முதல் கட்டம் ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்டு பயனர்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. சுமார் 5 மில்லியன் சதுர அடி பரப்பளவைக் கொண்டுள்ள இந்த பூங்காக்களில் வெஸ்டாஸ், குரிட், ஹெலர்மான் டைட்டன், சன்மினா, பேக்கர் ஹியூஸ், மேக்னா மற்றும் ஹுண்டாய் ட்ரான்சிஸ் ஆகிய முக்கிய நிறுவனங்கள் குத்தகைதாரர்களாக செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சென்னை அருகே அமைய உள்ள புதிய மையங்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், வாகனத் துறை, மின்னணு உற்பத்திச் சேவைகள், உள்கட்டமைப்புத் தொழில்நுட்பம், கனரகப் பொறியியல் மற்றும் மூன்றாம் தரப்பு தளவாடங்கள் (3PL) ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களை இலக்காக கொண்டுள்ளனவாம். இந்த துறை சார்ந்த எதிர்கால முதலீடுகள் பெருமளவில் எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்: TMC: ரைட்ரா..! 15 ஆண்டுகள் ஆண்ட கட்சியின் பெயர், சின்னத்தை முடக்கிய தேர்தல் ஆணையம் - மம்தா பானர்ஜி ஷாக்

உட்கட்டமைப்புகளில் வசதிகள் என்ன?

முன்னணி நிறுவனங்களின் தொழிற்கூடங்களை அமைப்பதற்கான இடவசதியை ஏற்படுத்தி தரும் வகையில் , புதிய தொழிற்பூங்காக்களை க்ரீன்பேஸ் நிறுவனம் கட்டமைக்க உள்ளது. இதில் நிலைத்தன்மையும், தொழில்நுட்பமும் ஒருங்கிணைக்கப்பட உள்ளதாம். அதன்படி, கூரையில் சோலார் பேனல்களை அமைத்து மின்சார உற்பத்தி, மழைநீர் சேமிப்பு & சிஸ்டம் ரீசார்ஜ், மின்சார வாகனங்களை சார்ஜ் செய்வதற்கான வசதி, முன்மொழியப்பட்ட IGBC பிளாட்டினம் சான்றிதழ் மற்றும் கட்டுமானம் மற்றும் செயல்பாடுகள் முழுவதும் செயற்கை நுண்ணறிவு (AI) பங்களிப்பு,  இணைய பயன்பாடுகள் ஆகியவை அடங்கும் என கூறப்படுகிறது.

2 ஆண்டுகளில் முடிக்க திட்டம்:

ஓரகடம் அருகே உள்ள பாலூரில் மற்றும் கும்முடிபூண்டி அருகே ஆரணியில் திட்டமிடப்பட்டுள்ள இந்த மேம்பாட்டுப் பணிகள் இரண்டு ஆண்டுகளில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் சுமார் 9 முதல் 10 மில்லியன் சதுர அடி பரப்பளவில் 'கிரேடு ஏ' வகை தொழில்துறை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டுள்ளது. இதில் சுமார் 50% முதல் 60% வரை தமிழ்நாட்டில் அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் உள்ளூரில் தொழில்வளர்ச்சி பெருகுவதோடு, ஏராளமான வேலைவாய்ப்புகளும் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டிற்கான முதலீடுகள்:

க்ரீன்பேஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி என். ஸ்ரீதர் தமிழ்நாடு முதலீடு குறித்து பேசுகையில், ”பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் ஆலைகள் மற்றும் அலுவலகங்களை அமைப்பதில் செலுத்தி வரும் கூடுதல் ஆர்வத்தைக் கருத்தில் கொண்டு, கோயம்புத்தூர் மற்றும் ஓசூரில் உள்ள வாய்ப்புகளை நிறுவனம் கண்டறிந்து வருகிறது. தூத்துக்குடிக்கான திட்டங்களை மதிப்பீடு செய்து வருகிறது. தெற்கு சந்தையில் மேலும் மூன்று இடங்களை தொழிற்பூங்காக்களை அமைப்பதன் மூலம். ஒட்டுமொத்தமாக கூடுதலாக 100 ஏக்கர் பரப்பளவில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

ஒரகடம் பகுதியில் உயர் தொழில்நுட்ப உற்பத்தி மற்றும் பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்புகள், மின்சார வாகனம், பாதுகாப்பு மற்றும் மின்னணுவியல் போன்ற வளர்ந்து வரும் துறைகளில் உள்ள நிறுவனங்கள் எங்களை அணுகி வருகின்றன. மத்திய அரசின் மின்னணு உற்பத்தித் தொகுப்பு 2.0-இன் கீழ், பெரிய அளவிலான பேட்டரி மற்றும் ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் மற்றும் தொழில்துறை மின்னணு வசதிகள் நிறுவப்படும் என எதிர்பார்க்கப்படும் கும்முடிபூண்டிக்கு அருகில் ஆரணி தொழிற்பூங்கா அமைந்துள்ளது. இங்குள்ள சில நிறுவனங்கள் உட்பட, குறிப்பிடத்தக்க முக்கிய நிறுவனங்களுடன் தங்கள் நிறுவனம் பேச்சுவார்த்தைகளை இறுதி செய்துள்ளதாகவும்” ஸ்ரீதர் விளக்கியுள்ளர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks