Tirunelveli: திருநெல்வேலி மக்களே ரெடியா.. நாளை மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்.. எங்கு? எப்போது?

Tirunelveli: திருநெல்வேலி மக்களே ரெடியா.. நாளை மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்.. எங்கு? எப்போது?
News Image

வேலை தேடும் திருநெல்வேலி மாவட்ட இளைஞர்களுக்காக நாளை மிகப்பெரிய அளவில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதனை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் திருநெல்வேலி மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக/ நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது. இந்த நிகழ்வானது செப்டம்பர் 19ம் தேதி (சனிக்கிழமை) அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வண்ணாரப்பேட்டையில் அமைந்துள்ள பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் வைத்து நடைபெறவுள்ளது.

கடந்த வாரம் இந்த வேலை வாய்ப்பு முகாம் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனந்த் மோகன் தலைமையில் நடைபெற்றது.பிரபல முன்னணி தனியார் நிறுவனங்கள் பலவும் இந்த வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்கின்றது. அதுமட்டுமல்லாமல் வெளிநாட்டு வேலைகளுக்கான பதிவு, நேர்முகத்தேர்வுக்கான நடவடிக்கைகள், பணி நியமன ஆணைகள் பெற்றுத்தருவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்ட கடைக்கோடி கிராமம் வரை இந்த தனியார் வேலை வாய்ப்பு முகாம் தொடர்பான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாவட்ட தொழில் மையம் (DIC), தாட்கோ, முன்னோடி வங்கி (Lead Bank), RSETI உள்ளிட்ட துறைகள் சார்பில் தனித்தனி அரங்குகள் அமைத்து, சுயவேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவோர் திட்டங்கள், வங்கிக் கடன் உதவிகள் மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் குறித்த தகவல்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ளது.

முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

இதனிடையே வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் கல்லூரி வளாகம் மற்றும் கழிப்பறைகளைத் தூய்மையாகப் பராமரித்தல், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்துதல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாநகராட்சி மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்துத் துறை சார்பில் தொலைதூர கிராமங்கள் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் இருந்து வேலை தேடுபவர்கள் எளிதில் முகாமிற்கு வந்து செல்லும் வகையில், தேவையான அளவு பேருந்து வசதிகளை ஏற்படுத்திட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

வேலை தேடும் மாற்றுத்திறனாளி  எவ்வித சிரமமும் இன்றி முகாமில் பங்கேற்கும் வகையில் சிறப்பு வாகனங்கள், சக்கர நாற்காலிகள் மற்றும் தரைத்தளத்தில் நேர்முகத் தேர்வு அரங்குகள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்திட மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக பணிநியமன ஆணைகள் கிடைப்பதை உறுதி செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த வேலைவாய்ப்பை எதிர்நோக்கும் இளைஞர்கள் மற்றும் வேலை தேடுபவர்கள் இம்மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில் மற்றும் பெருமளவில் பங்கேற்று தங்களது கல்வித் தகுதி திறமைக்கேற்ற வேலைவாய்ப்புகளை பெற்றுப் பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks