விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடத்தப்படும் 2026-2027-ஆம் ஆண்டிற்கான 'முதலமைச்சர் கோப்பை' விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் இடங்கள் மற்றும் தேதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் வெளியிட்டுள்ளார். பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் பங்கேற்கும் இப்போட்டிகள் வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி தொடங்கி பல்வேறு இடங்களில் நடைபெறவுள்ளன.

கூடைபந்து: 09.09.2026 மற்றும் 10.09.2026 பள்ளி மாணவர்களுக்கும் 11.09.2026 அன்று பள்ளி மாணவிகளுக்கும், 15.09.2026 மற்றும் 16.09.2026 கல்லூரி மாணவர்களுக்கும் 17.09.2026 அன்று கல்லூரி மாணவிகளுக்கும் மாவட்ட விளையாட்டு அரங்கம், கீழ்பெரும்பாக்கத்தில் நடைபெறவுள்ளது.

கபாடி: 09.09.2026 மற்றும் 10.09.2026 பள்ளி மாணவர்களுக்கும், 11.09.2026 மற்றும் 12.09.2026 பள்ளி மாணவிகளுக்கும், 15.09.2026 மற்றும் 16.09.2026 கல்லூரி மாணவர்களுக்கும், 17.09.2026 மற்றும் 18.09.2026 கல்லூரி மாணவிகளுக்கும், 21.09.2026 மற்றும் 22.09.2026 பொது பிரிவினர் ஆண்களுக்கும், 23.09.2026 மற்றும் 24.09.2026 பொது பிரிவு பெண்களுக்கும், 26.09.2026 அன்று அரசு ஊழியர் ஆண்கள் மற்றும் பெண்கள்(இருபாலர்) 25.09.2026 அன்று மாற்றுத்திறனாளி பிரிவினருக்கும் மாவட்ட விளையாட்டு அரங்கம், கீழ்பெரும்பாக்கத்தில் நடைபெறவுள்ளது.

கையுந்துபந்து(வாலிபால்): 09.09.2026 மற்றும் 10.09.2026 பள்ளி மாணவர்களுக்கும், 11.09.2026 மற்றும் 12.09.2026 பள்ளி மாணவிகளுக்கும், 15.09.2026 மற்றும் 16.09.2026 கல்லூரி மாணவர்களுக்கும், 17.09.2026 மற்றும் 18.09.2026 கல்லூரி மாணவிகளுக்கும், 21.09.2026 மற்றும் 22.09.2026 பொது பிரிவினர் ஆண்களுக்கும், 23.09.2026 மற்றும் 24.09.2026 பொது பிரிவு பெண்களுக்கும், 26.09.2026 அன்று அரசு ஊழியர் ஆண்கள் மற்றும் பெண்கள்(இருபாலர்) 25.09.2026 அன்று மாற்றுத்திறனாளி பிரிவினருக்கும் மாவட்ட விளையாட்டு அரங்கம் மற்றும் அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி கீழ்பெரும்பாக்கத்தில் நடைபெறவுள்ளது.

கைப்பந்து: 09.09.2026 மற்றும் 10.09.2026 பள்ளி மாணவர்களுக்கும், 11.09.2026 மற்றும் 12.09.2026 பள்ளி மாணவிகளுக்கும், 15.09.2026 மற்றும் 16.09.2026 கல்லூரி மாணவர்களுக்கும், 17.09.2026 மற்றும் 18.09.2026 கல்லூரி மாணவிகளுக்கும் மாவட்ட விளையாட்டு அரங்கம், கீழ்பெரும்பாக்கத்தில் நடைபெறவுள்ளது.

கோ-கோ: 11.09.2026 பள்ளி மாணவர்களுக்கும் 12.09.2026 அன்று பள்ளி மாணவிகளுக்கும், அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது.

கால்பந்து: 12.09.2026 அன்று பள்ளி மாணவர்களுக்கும் 15.09.2026 அன்று பள்ளி மாணவிகளுக்கும் 18.09.2026 மற்றும் 19.09.2026 அன்று கல்லூரி மாணவர்களுக்கும் 23.09.2026 அன்று கல்லூரி மாணவிகள் மற்றும் பொது பிரிவு பெண்களுக்கும், 24.09.2026 அன்று பொது பிரிவினர் ஆண்களுக்கும் மாவட்ட விளையாட்டு அரங்கம், கீழ்பெரும்பாக்கத்தில் நடைபெறவுள்ளது.

தடகளம்: 09.09.2026 அன்று பள்ளி மாணவர்களுக்கும் 10.09.2026 அன்று பள்ளி மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவிகளுக்கும், 16.09.2026 அன்று கல்லூரி மாணவர்களுக்கும், 21.09.2026 அன்று பொது பிரிவு ஆண்களுக்கும், 26.09.2026 அன்று பொதுபிரிவு பெண்கள் மற்றும் அரசு ஊழியர் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகியோருக்கும் 25.09.2026 அன்று மாற்றுத்திறனாளி பிரிவினருக்கும் மாவட்ட விளையாட்டு அரங்கம், கீழ்பெரும்பாக்கத்தில் நடைபெறவுள்ளது.

வளையப்பந்து / பாஸ்கெட்பால் வகை போட்டிகள்: 10.09.2026, 11.09.2026 மற்றும் 12.09.2026 அன்று பள்ளி மாணவர்களுக்கும், 15.09.2026 மற்றும் 16.09.2026 பள்ளி மாணவி (ம) கல்லூரி மாணவர்களுக்கும், 15.09.2026, 16.09.2026 மற்றும் 17.09.2026 அன்று கல்லூரி மாணவிகளுக்கும், 21.09.2026 மற்றும் 22.09.2026 பொது பிரிவினர் ஆண்களுக்கும், 23.09.2026 மற்றும் 24.09.2026 பொது பிரிவு பெண்களுக்கும் போட்டிகள் நடைபெற உள்ளது. பள்ளி, கல்லூரி மற்றும் பொதுபிரிவு ஆண்களுக்கு VRS கல்லூரி அரசூர் மற்றும் பள்ளி, கல்லூரி மற்றும் பொதுபிரிவு பெண்களுக்கு சிகா மேல்நிலைப்பள்ளி கப்பியாம்புலியூர்-ல் நடைபெற உள்ளது.

சிலம்பம்: 09.09.2026 அன்று பள்ளி மாணவர்களுக்கும் 10.09.2026 அன்று பள்ளி மாணவிகளுக்கும் 15.09.2026 அன்று கல்லூரி மாணவர்களுக்கும், 16.09.2026 அன்று கல்லூரி மாணவிகளுக்கும், 21.09.2026 அன்று பொது பிரிவு ஆண்கள் மற்றும் பெண்கள் (இருபாலர்)-க்கும் மாவட்ட விளையாட்டு அரங்கம், கீழ்பெரும்பாக்கத்தில் நடைபெறவுள்ளது.

நீச்சல்: 10.09.2026 அன்று பள்ளி மாணவர்களுக்கும் 11.09.2026 அன்று பள்ளி மாணவிகளுக்கும் 15.09.2026 அன்று கல்லூரி மாணவர்களுக்கும், 16.09.2026 அன்று கல்லூரி மாணவிகளுக்கும், SDAT நீச்சல் குளத்தில் (மாவட்ட பெருந்திட்ட வளாகம்) நடைபெற உள்ளது.

இறகு பந்து: 10.09.2026 மற்றும் 11.09.2026 பள்ளி மாணவர்களுக்கும், 12.09.2026 பள்ளி மாணவிகளுக்கும், 15.09.2026 மற்றும் 16.09.2026 கல்லூரி மாணவர்களுக்கும், 17.09.2026 கல்லூரி மாணவிகளுக்கும், 21.09.2026 மற்றும் 22.09.2026 பொது பிரிவினர் ஆண்களுக்கும், 23.09.2026 மற்றும் 24.09.2026 பொது பிரிவு பெண்களுக்கும், 26.09.2026 அன்று அரசு ஊழியர் ஆண்கள் மற்றும் பெண்கள்(இருபாலர்) 25.09.2026 அன்று மாற்றுத்திறனாளி பிரிவினருக்கும் MGR உள் விளையாட்டு அரங்கத்தில் (மாவட்ட பெருந்திட்ட வளாகம்) நடைபெறவுள்ளது.

மேசைப்பந்து: 10.09.2026 அன்று பள்ளி மாணவர்களுக்கும் 11.09.2026 அன்று பள்ளி மாணவிகளுக்கும், 15.09.2026 அன்று கல்லூரி மாணவர்களுக்கும், 16.09.2026 கல்லூரி மாணவிகளுக்கும் Ganapathi TT Academy, Hamithra mahal A/c, Kamban nagar, Arumugam Nagar-ல் நடைபெற உள்ளது.

கேரம்: 10.09.2026 அன்று பள்ளி மாணவர்களுக்கும் 11.09.2026 அன்று பள்ளி மாணவிகளுக்கும், 15.09.2026 அன்று கல்லூரி மாணவர்களுக்கும், 16.09.2026 கல்லூரி மாணவிகளுக்கும், 21.09.2026 மற்றும் 22.09.2026 பொது பிரிவினர் ஆண்களுக்கும், 23.09.2026 மற்றும் 24.09.2026 பொது பிரிவு பெண்களுக்கும், 26.09.2026 அன்று அரசு ஊழியர் ஆண்கள் மற்றும் பெண்கள்(இருபாலர்) ஜான் டு வி மெட்ரிக் மேல்நிலை பள்ளி வி.மருதூர்-ல் நடைபெற உள்ளது.

செஸ்: 10.09.2026 அன்று பள்ளி மாணவர்களுக்கும் 11.09.2026 அன்று பள்ளி மாணவிகளுக்கும், 15.09.2026 அன்று கல்லூரி மாணவர்களுக்கும், 16.09.2026 கல்லூரி மாணவிகளுக்கும் 26.09.2026 அன்று அரசு ஊழியர் ஆண்கள் மற்றும் பெண்களுக்கும்(இருபாலர்) அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி கீழ்பெரும்பாக்கத்தில் நடைபெறவுள்ளது.

ஹாக்கி: 11.09.2026 அன்று பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் 17.09.2026 அன்று கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும் மாவட்ட விளையாட்டு அரங்கம், கீழ்பெரும்பாக்கத்தில் நடைபெறவுள்ளது.

பூப்பந்து: 15.09.2026 அன்று கல்லூரி மாணவர்களுக்கும் 16.09.2026 அன்று கல்லூரி மாணவிகளுக்கும் ரெயில்வே மைதானத்தில் (Railway Ground) கீழ்பெரும்பாக்கத்தில் நடைபெற உள்ளது.

யோகா: 10.09.2026 அன்று பள்ளி மாணவர்களுக்கும் 11.09.2026 அன்று பள்ளி மாணவிகளுக்கும், 15.09.2026 அன்று கல்லூரி மாணவர்களுக்கும், 16.09.2026 அன்று கல்லூரி மாணவிகளுக்கும், 21.09.2026 அன்று பொது பிரிவு ஆண்களுக்கும், 22.09.2026 அன்று பொதுபிரிவு பெண்களுக்கும் 26.09.2026 அரசு ஊழியர் ஆண்கள் மற்றும் பெண்களுக்கும் (இருபாலர்) அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி கீழ்பெரும்பாக்கத்தில் நடைபெறவுள்ளது.

எறிபந்து (ம) Wheel chair Table Tennis: 25.09.2026 அன்று மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு மாவட்ட விளையாட்டு அரங்கம், கீழ்பெரும்பாக்கத்தில் நடைபெறவுள்ளது.

ஸ்பீட் ஸ்கேட்டிங்: 10.09.2026 அன்று பள்ளி மாணவ மாணவிகள்மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு Hi Tech City கம்பன் நகர், விழுப்புரம் To பாண்டி ரோடு-ல் நடைபெறுகிறது. மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அவர்களின் 7401703485 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article