"நீயும் நானும் பிரெண்ட்ஸ்" 7-ம் வகுப்பு பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடூரம் !! தலைமை ஆசிரியர் கைது

"நீயும் நானும் பிரெண்ட்ஸ்" 7-ம் வகுப்பு பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடூரம் !! தலைமை ஆசிரியர் கைது
News Image

"பள்ளி மாணவியிடம் பாலியல் அத்து மீறல்"

திருச்சி மாவட்டம் சமயபுரம் பள்ளிவிடை பகுதியில் புனித மரியன்னை அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளி இயங்குகிறது. இங்கு 7 - ம் வகுப்பு மாணவி ஒருவர் தோழியுடன் வேன் கட்டணம் குறித்து கேட்பதற்கு தலைமை ஆசிரியர் அறைக்குச் சென்றுள்ளார். தோழியை வெளியே அனுப்பி விட்ட தலைமை ஆசிரியர் ஜெயராஜ் ( வயது 55 ), அந்த மாணவியை மட்டும் தனி அறைக்கு அழைத்து சென்று மாணவியின் கன்னத்திலும், கழுத்திலும் முத்தமிட்டு பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது

" நீயும் நானும் பிரெண்ட்ஸ் "

பின்னர் இனி நீயும் நானும் ப்ரெண்ட்ஸ், இதை வெளியே யாரிடமும் சொல்லக் கூடாது என்று கூறி மிரட்டியுள்ளார். பின்னர் வீட்டிற்கு சென்ற மாணவி மிகுந்த மன உளைச்சலுடன் இருந்துள்ளார்.

சந்தேகமடைந்த தாய் விசாரித்த போது, தலைமை ஆசிரியர் செய்த கொடூர செயலை அழுது கொண்டே கூறியுள்ளார். குடும்பத்தினர் இது குறித்து விசாரித்த போது , அந்த தலைமை ஆசிரியர் 8 மற்றும் 9 - ம் வகுப்பு படிக்கும் மேலும் சில மாணவிகளிடமும் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.

இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் திரண்டு வந்து பள்ளியை முற்றுகையிட்டனர். பயந்து போன தலைமை ஆசிரியர் ஜெயராஜ் , பின்பக்க வழியாக தப்பியோடி தலைமறைவானார். அவரை போலீசார் கைது செய்தனர்.

இதே போல் , கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பைபாஸ் சாலையில் வசிப்பவர் பிரான்சிஸ் ( வயது 48 ) உனிசெட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர். பள்ளியில் படிக்கும் 4 வது மற்றும் 5 ம் வகுப்பு மாணவிகளிடம் தகாத முறையில் தொட்டு பேசி , பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

கடந்த 31 - ம் தேதி , வகுப்பில் இருந்த 4 - ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக , மாணவி அவருடைய தாயிடம் கூறியுள்ளார். இதுகுறித்து பெற்றோர் 1098 எண்ணுக்கு புகார் செய்துள்ளனர். அதன் பேரில் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சாவித்திரி, நேரில் விசாரணை நடத்தியதில் தலைமை ஆசிரியர் பிரான்சிஸ், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போக்சோ வழக்கில் கைது செய்தனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks