தமிழ்நாடு முழுவதும் ஜெம் வீரமணி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு மிகப்பெரிய பரபரப்பை உண்டாக்கியுள்ளது. இந்த வழக்கு விவகாரத்தில் நாளுக்கு நாள் பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகி வருகிறது.

திக் திக் தரும் ஜெம் வீரமணி:

இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 2025ம் ஆண்டு திமுக ஆட்சியில் இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்ட பிறகும் தவெக ஆட்சி அமையும் வரை வெளியில் வராமலே இருந்து வந்தது.

இந்த விவகாரத்தில் ஒரு வருடமாக காவல்துறை எப்படி அமைதியாகவே இருந்தது? என்று பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில், இன்று பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகி ரஞ்சன்குமார் இந்த விவகாரம் தொடர்பாகவே சாந்தி பற்றியும், ஜான் பாண்டியன் பற்றியும் பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். அதேசமயம், ஜான் பாண்டியனும் இதுதொடர்பாக பரபரப்பான பேட்டி அளித்துள்ளார்.

வேடிக்கை பார்த்த காவல்துறை அதிகாரிகள்:

தற்போது இந்த விவகாரத்தில் பலரது கேள்வியாகவும், அதிர்ச்சியாகவும் அமைந்திருப்பது இந்த விவகாரம் தொடர்பாக ரஞ்சன்குமார் கடந்த 2024ம் ஆண்டே வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால், காவல்துறையினர் இதுதொடர்பாக 2025ம் ஆண்டுதான் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்:

இந்த சூழலில், இந்த விவகாரத்தில் புதிய திருப்பமாக அருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். ஏனென்றால், ரஞ்சன்குமார் புகார் அளித்த 2024ம் ஆண்டு அளித்த காலகட்டத்தில் சென்னையின் காவல் ஆணையராக பொறுப்பு வகித்தவர் அருண். இவர் மட்டுமின்றி இந்த வழக்கு விசாரணையில் அப்போது ஈடுபட்ட கண்ணன், யாஷ்மின் ஆகிய காவல்துறை அதிகாரிகளும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த விவகாரம் மொத்த தமிழ்நாட்டையும் கொந்தளிக்க வைத்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் ஜெம் வீரமணி, சாந்தி ஆகியோர் மட்டுமின்றி இந்த குற்றச்சாட்டை மறைக்க காவல்துறை அதிகாரிகள் உடந்தையாக இருந்துள்ளனரா? என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது. இதன் எதிரொலியாகவோ அப்போது அதிகாரத்தில் இருந்த அனைத்து காவல்துறை அதிகாரிகளும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சிறை செல்வார்களா?

காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட அதிகாரிகள் விரைவில் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்படுவார்கள் என்று கருதப்படுகிறது. மேலும், இந்த விசாரணையில் காவல்துறை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவர்கள் சிறை செல்வது உறுதியாகும் என்று கருதப்படுகிறது.

அடுத்தடுத்து காவல்துறை அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு வரும் நிலையில், இந்த விவகாரத்தில் விரைவில் முக்கியமான அரசியல் தலைவர்கள் சிக்குவார்கள் என்று கருதப்படுகிறது. இந்த விவகாரம் 2 ஆண்டுகளாக பல்வேறு நபர்கள் இதை அறிந்தும் பொதுவெளியில் கொண்டு வராமல் இருந்தது யார்? யார்? அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Source: Read Full Article