Esakki Subaya: தவெகவுடன் மனக்கசப்பா?.. MLA பதவியை மீண்டும் கேட்கும் இசக்கி சுப்பையா.. காரணம் இதுதான்!

Esakki Subaya: தவெகவுடன் மனக்கசப்பா?.. MLA பதவியை மீண்டும் கேட்கும் இசக்கி சுப்பையா.. காரணம் இதுதான்!
News Image

ராஜினாமா செய்த நிலையில் தான் மீண்டும் எம்.எல்.ஏவாக தொடர அனுமதிக்கக்கோரிய வழக்கில் என்ன நடந்தது என்பதை தவெக நிர்வாகி இசக்கி சுப்பையா விவரித்துள்ளார். ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் அவரது கோரிக்கையை திட்டவட்டமாக நிராகரித்து விட்டது.

ராஜினாமாவை திரும்ப வாங்க தயார்

இதுதொடர்பாக ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், “ராஜினாமாவை என் விருப்பத்தோடு சுயநினைவோடு யாருடைய வற்புறுத்தலும் இல்லாமல் தமிழ்நாடு சட்டப்பேரவையில் என்ன விதிப்படி கொடுக்கணுமோ அதை கைப்பட எழுதி கொடுத்தேன். அதனை தீர விசாரித்து சபாநாயகர் என்னுடைய எம்.எல்.ஏ. பதவி ராஜிமானாவை ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி என்னுடைய அம்பாசமுத்திரம் தொகுதி காலியானதாக அறிவிக்கவும் செய்தார். இதில் எந்தவிதமான பிரச்னையும் இல்லை.

அதேசமயம் அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி இந்த ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என வழக்கு தொடர்ந்தார். அது எதற்காக தொடர்ந்தார் என தெரியாது. ராஜினாமாவை ஏற்கும் முழு அதிகாரம் சபாநாயகருக்கு உள்ளது. அந்த வழக்கு உடனடியாக முடிந்திருந்தால் பிரச்னை ஏற்பட்டிருக்காது. அப்படி ஒரு வழக்கு நிலுவையில் இருக்கும்போது என்னுடைய எம்.எல்.ஏ. பதவி ராஜினாமா செய்தது ஏற்றுக்கொள்ளப்பட்டதா இல்லையா என்ற கேள்வி எழுகிறது. அதுவரை என்னை சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ.வாக செயல்பட விடுங்கள் என கூறினேன்.

தகுதி நீக்கத்தை விட ராஜினாமா மேல்

எதற்காக எனக் கேட்டால் அம்பாசமுத்திரம் தொகுதி மக்களின் அடிப்படை தேவைகளைப் பார்க்க ஒரு பிரதிநிதித்துவம் வேண்டும். அந்த அடிப்படையில் என்னை மீண்டும் செயல்பட அனுமதிக்க வேண்டும் என கேட்டேன். என்னைப் பொறுத்தவரை என் ராஜினாமாவை உடனடியாக ஏற்க வேண்டும், அம்பை தொகுதிக்கு இடைத்தேர்தல் வர வேண்டும். இன்னும் ஒருபடி மேலே சென்று இதில் சட்ட சிக்கல் ஏற்பட்டால் என்னுடைய ராஜினாவை திரும்ப பெறவும் நான் தயாராக உள்ளேன்.

என்னுடைய முந்தைய தலைமையான அதிமுக எந்தவித காரணமும் கேட்காமல் எம்.எல்.ஏ. பதவியை தகுதிநீக்கம் செய்ய சொல்லி கூறியது. நாங்கள் என்ன தவறு செய்தோம் என எதுவும் கேட்கவில்லை. 13 நாட்கள் கழித்து நான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற காரணத்திற்காக நீங்கள் என்னை தகுதி நீக்கம் செய்வதை விட நானே முன்வந்து ராஜினாமா செய்தேன் என தெரிவித்தார்.

தவெகவுடன் மனக்கசப்பா

அதுமட்டுமல்லாமல் தவெகவுடன் மனக்கசப்பு ஏற்பட்டு விட்டதாக பரவும் தகவலுக்கும் இசக்கி சுப்பையா விளக்கமளித்துள்ளார். அதாவது, “நான் தவெகவை விரும்பி ஏற்றுக் கொண்டேன். வாய்ப்பு வழங்கப்படும், வழங்கப்படவில்லை என்பது பற்றி கவலையில்லை. நான் வேட்பாளராக இருந்தால் பார்ப்பதை விட வேட்பாளராக யாரை நிறுத்தினாலும் அதிகமாக வேலை பார்ப்பேன். நான் அன்றைக்கே சொன்னது போல முதலமைச்சர் விஜயின் ஒற்றை முகம் இந்த தொகுதிக்கு வந்தாலே மாபெரும் வெற்றி தான். தவெகவைச் சேர்ந்தவர்களும் சரி, இங்கு மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்களும் சிறப்பாக செயல்படுகிறார்கள். இடைத்தேர்தல் வந்தால் நிச்சயம் தவெக தான் ஜெயிக்கும்” என கூறியுள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks