Edappadi Palaniswami : தமிழ்நாட்டையே உலுக்கும் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை’ வாயை திறக்காத எடப்பாடி பழனிசாமி..?

Edappadi Palaniswami : தமிழ்நாட்டையே உலுக்கும் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை’ வாயை திறக்காத எடப்பாடி பழனிசாமி..?
News Image

தமிழ்நாட்டையே உலுக்கியிருக்கிறது ஜெம் கிரானைட்ஸ் வீரமணி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு. அதுவும் பாதிக்கப்பட்டிருப்பது சின்னஞ்சிறு சிறுமிகள். இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கி நிற்க வேண்டிய பல எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை பெரிய அளவில் பேசாமலும், கண்டிக்காமலும் இருப்பது தமிழக மக்களுக்கு பெரிய ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

வாய் மூடி நிற்கும் அதிமுக – பேசத் தயங்கும் எடப்பாடி

அதே நேரத்தில் திமுக ஆட்சியில் இந்த சம்பவம் நடைபெற்று, வீரமணி மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது என்று தவெக அமைச்சர்கள் வெளிப்படையாக தெரிவித்து வரும் நிலையில், இந்த சம்பவம் குறித்து வாயை திறக்காமல் இருக்கிறது அதிமுக. அதுவும், எந்த சாதாரண பிரச்னை தமிழ்நாட்டில் எழுந்தாலும் உடனே கண்டன அறிக்கையும், ஆர்ப்பாட்ட அறிவிப்பும் செய்யும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இப்படியான கொடூர செயல் குறித்து மறந்தும் பேசவிடக்கூடாது என வாயைக் கட்டிக்கொண்டு இருக்கிறார். இது அதிமுகவினருக்கும் அந்த கட்சியை சேர்ந்த மகளிருக்குமே பெரும் ஆதங்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இத்தனைக்கும், பெண்களுக்கு ஒரு பிரச்னையென்றால் உடனே வெகுண்டெழும் கட்சி அதிமுக. அப்படிதான் ஜெயலலிதா அந்த கட்சியை கம்பீரமாக நடத்தினார். ஆனால், இப்போதோ வீரமணி வழக்கில் வாய் மூடி, மவுனியாக இருக்கிறது அப்பேற்பட்ட அதிமுக.

திமுகவினரை விமர்சிக்க கூட தயங்கும் எடப்பாடி

ஜெம் வீரமணியை திமுகவினர் காப்பாற்ற முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கும் நிலையில், அதை பிடித்துக்கொண்டு தங்களின் ஜென்ம எதிரியான திமுகவை விளாசி தள்ளவேண்டிய நேரத்தில், எடப்பாடி பழனிசாமியோ அதை பற்றியெல்லாம் கவலைகொள்ளாமல் அமைதியாக இருக்கிறார். அவரின் இந்த மவுனம் கடந்த தேர்தலில் திமுக ஆதரவோடு ஆட்சி அமைக்க எடப்பாடி பழனிசாமி முயற்சித்தார் என்ற பேச்சுக்கு வலு சேர்த்திருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி மவுனமானது ஏன் – பரபரப்பு பின்னணி.

இந்நிலையில், இந்த சிறுமிகள் வன்கொடுமை வழக்கில் சிக்கியிருக்கும் வீரமணி, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த நேரத்தில் அதிமுகவினருக்கு பல வகைகளில் உதவியதாகவும், வீரமணி தனது செல்வாக்கை பயன்படுத்தி, அதிமுக ஆட்சியில் பல விஷயங்களை சாதித்துக்கொண்டதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகத் தொடங்கியிருக்கின்றன. சசிகலா சிறைக்கு சென்ற பின்னர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆவதற்கு பல கோடிகள் எம்.எல்.ஏக்களுக்கு கொடுக்கப்பட்ட பின்னணியிலும் வீரமணியின் பங்கு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதன்காரணமாகவே, இப்படியான கொடுமையான சம்பவத்தில் எடப்பாடி பழனிசாமியை வாயை மூடிக்கொண்டு இருப்பதாகவும் அந்த கட்சி வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில், ஜெம் வீரமணி சமூகத்தை சேர்ந்த பலர், அதிமுகவில் முக்கிய பொறுப்புகளில் இருப்பதனாலும், அவர்களுக்கு வீரமணி பல வகைகளில் முன்னர் உதவியிருந்த காரணத்தாலும் இந்த மவுனம் அந்த கட்சியில் நிலவுவதாக கூறப்படுகிறது.

எது எப்படி இருந்தாலும் இந்த சின்னஞ்சிறு சிறுமிகளை ஜெம் வீரமணி பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவத்தில் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி பேசாமல் இருப்பது மிகத் தவறானது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks