தமிழகத்தில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக காய்சலால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் பருவ நிலை மாற்றம் காரணமாக சென்னை முழுவதும் உண்ணிகாய்சல்கள் பரவி வருகிறது. உண்ணிகள் மனிதர்களை கடிக்கும் போது மனிதர்களுக்கு உண்ணி காய்ச்சல் நோய் உண்டாகிறது. இந்த காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார்கள். அதே நேரத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 301 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை 17649 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்

கர்ப்பிணிகள், முதியவர்கள்- முக கவசம் கட்டாயம்

இதனையடுத்து டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக பொது சுகாதாரத்துறை மற்றும் நகராட்சி துறை மூலம் இணைந்து களப் பணியாளர்களால் வீடுவீடாகச் சென்று டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு விழிப்புணர்வுகளும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நோய் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ள இடங்களில் கூடுதல் கவனம் செலுத்தி கண்காணித்து வருகின்றனர். இதன் காரணமாக நாளுக்கு நாள் நோய் தொற்று பாதிப்பு அதிகரித்து வரக்கூடிய நிலையில் காய்ச்சல் பாதித்தவர்கள், கர்ப்பிணிகள், முதியவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், காய்ச்சலில் பாதிக்கும் குழந்தைகள் உட்பட்டோர் மாஸ்க் அணிவது அவசியம் என தமிழக பொது சுகாதாரத் துறை அறிவுறுத்து இருக்கிறது

காய்ச்சல் இருந்தால் பள்ளிக்கு அனுப்பாதீர்கள்

முக கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்றாலும் டெங்கு காய்ச்சல் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிப்பதன் மூலம் மற்றவர்களுக்கு இந்த தொற்று பரவுவதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் இருப்பதால் குறிப்பிட்ட இந்த நபர்கள் மாஸ்க் அணிவது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் மற்றும் இதர பாதிப்புகள் இருந்தால் குழந்தைகளுக்கு பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் காய்ச்சல் இரும்பல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் எனவும் தமிழக பொது சுகாதாரத் துறை அறிவுறுத்து இருக்கிறது.

Source: Read Full Article