ஆன்லைன் ஒட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச்சான்று

அரசின் திட்டங்கள் சேவைகள் எளிமையான முறையில் மக்களைச் சென்றடையும் வகையில் வெளிப்படையான நிர்வாகத்தை உறுதிசெய்யும் வகையில் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், ஒட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச்சான்று பெறுவதற்குக் கட்டணமாக 250 ரூபாய் விண்ணப்பதாரர்களால் செலுத்தப்பட்டு, சிப் (Chip) தபால் மூலம் விண்ணப்பதாரர்களின் முகவரிக்கு அனுப்பப்பட்டு வந்தது. சுமார் ஒரு மாத காலம் வரை ஏற்படுவதால் பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர்.

டிரைவிங் லைசென்ஸ் -நாளை முதல் நேரில் வழங்கும் முறை நிறுத்தம்

தமிழகத்தில் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவு சான்றிதழ் வழங்கும் நடைமுறையில் முக்கிய மாற்றத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி, வரும் 12.09.2026க்குப் பிறகு ஓட்டுநர் உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ்களை நேரில் பெற்றுக்கொள்ளும் நடைமுறை நிறுத்தப்பட்டு, அவை முழுமையாக டிஜிட்டல் முறையில் வழங்கப்பட உள்ளன. அந்த வகையில் ஓட்டுநர் உரிமம் ஆகியவை Digital முறையில் பொதுமக்கள் தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளும் நடைமுறை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதற்கான அறிவிப்பை முதலமைச்சர் விஜய் சட்டசபையில் அறிவித்திருந்தார். அந்த வகையில் வருகிற 15 ஆம் தேதி முதல் அமருக்கு வரவுள்ளது.

ஒரு வருடத்திற்கு இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்

புதிய வாகனம் வாங்குவோர், வாகனப் பதிவை அதாவது, Digital RC-யை இணையம் வழியாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அதேபோன்று ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சிபெற்ற விண்ணப்பதாரர்களுக்கு, அன்றைய தினமே ஓட்டுநர் உரிமம் டிஜிட்டல் முறையில் வழங்கப்படும். இந்த நிலையில் இதற்கான அரசாணையானது வெளியிடப்பட்டுள்ளது. 13.09.2026 முதல், ஓட்டுநர் உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ்களை பொதுமக்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும், இந்த இலவச பதிவிறக்க வசதி, தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளில் தேவையான திருத்தம் செய்யப்படும் காலம் அல்லது ஓராண்டு ஆகியவற்றில் எது முந்தையதோ அதுவரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவிறக்கம் செய்யப்படும் ஓட்டுநர் உரிமம் மற்றும் பதிவு சான்றிகளில் இடம்பெறும் QR குறியீடு மூலம், அவை மின்னணு தரவுத்தளத்தில் உள்ள அசல் ஆவணங்களுடன் சரிபார்க்கும் வசதி ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை m-Parivahan மற்றும் DigiLocker போன்ற அரசு சார்ந்த டிஜிட்டல் தளங்களுடன் இணைக்கப்படும் எனவும் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆவணங்களை பொதுமக்கள் தாங்களே அச்சிட்டு பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. QR குறியீடு தெளிவாக இருந்து, மின்னணு முறையில் அசல் ஆவணத்தை சரிபார்க்க முடியும் என்ற நிபந்தனையுடன், சாதாரண காகிதம் அல்லது லேமினேட் செய்யப்பட்ட பிரதியும் செல்லுபடியாகும் என அரசு தெரிவித்துள்ளது.

எங்கே பதிவிறக்கம் செய்யலாம்.?

அரசுத் துறைகள், அட்டை வடிவிலான ஓட்டுநர் உரிமங்கள் அல்லது வாகனப் பதிவுச் சான்றிதழ்களை வற்புறுத்திக் கேட்க வேண்டாம் என்றும், டிஜிட்டல் முறையில் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆவணங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. அச்சு பிரதியை விரும்புவோருக்காக 15.09.2026 முதல் அனைத்து இ-சேவை மையங்களிலும், கட்டண அடிப்படையில் அச்சிடும் வசதி ஏற்படுத்தப்படும். மேலும், புதிய நடைமுறையை செயல்படுத்த தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் முன்னோட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் ஆவணம் சேதமடைந்தாலோ, தொலைந்தாலோ மீண்டும் பதிவிறக்கம் செய்துகொள்ளவும், அச்சிட்டுக்கொள்ளவும் முடியும் வகையில் ஏற்பாடு செயப்பட்டுள்ளது. ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கும், வாகனத்தைப் பதிவு செய்வதற்கும், வாகனப்பதிவு புதுப்பித்தல் மற்றும் படிப்படியாக போக்குவரத்து சம்பந்தமான அனைத்து அலுவலக சேவைகளுக்கும் தமிழ்நாட்டில் எந்தவொரு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திலும் விண்ணப்பித்து "Anywhere Registration / Licensing" நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Source: Read Full Article