Dharapuram: முதல்வர் விஜய் வருகை.. கோவை முதல் தாராபுரம் வரை போக்குவரத்து மாற்றம்.. நோட் பண்ணுங்க!

Dharapuram: முதல்வர் விஜய் வருகை.. கோவை முதல் தாராபுரம் வரை போக்குவரத்து மாற்றம்.. நோட் பண்ணுங்க!
News Image

தாராபுரம் இடைத்தேர்தலில் முதலமைச்சர் விஜய் நாளை (செப்டம்பர் 30) பரப்புரை மேற்கொள்ளவுள்ள நிலையில் அங்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனைப் பற்றிக் காணலாம்.

தாராபுரம் இடைத்தேர்தல்

தாராபுரம் இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அங்கு அரசியல் கட்சிகளில் தேர்தல் பரப்புரை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தவெக சார்பில் சத்யபாமா போட்டியிடும் நிலையில் திமுகவில் சுகன்யா, அதிமுகவில் பானுமதி, நாம் தமிழர் கட்சியில் கார்த்திகா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லெட்சுமணன் என 5 முனை போட்டியானது நிலவுகிறது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்து அக்டோபர் 9ம் தேதி எண்ணப்படும் நிலையில் அனைத்து கட்சி தலைவர்களும் இரு தொகுதிகளிலும் போட்டி போட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர்.

முதலமைச்சர் விஜய் வருகை

இதனிடையே தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் சத்யபாமாவை ஆதரித்து முதலமைச்சரும், தவெக தலைவருமான ஜோசப் விஜய் நாளை பரப்புரை மேற்கொள்ளவுள்ளார். இதற்காக விமானம் மூலம் கோவை வரும் அவர், பின் சாலை மார்க்கமாக தாராபுரம் செல்கிறார். விஜய் வருகையை முன்னிட்டு கோவை விமான நிலையம் முதல் தாராபுரம் வரை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விஜய் ரோடு ஷோ செல்வதோடு மட்டுமல்லாமல் 5 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள இடத்தில் உரையாற்றவும் உள்ளார். விஜய் முதல்முறையாக வருகை தருவதால் தாராபுரம் களைகட்டியுள்ளது.

போக்குவரத்து மாற்றம் பற்றிய அறிவிப்பு

இந்த நிலையில் முதலமைச்சர் விஜய் தாராபுரத்தில் பிரசாரம் செய்யவுள்ளதால் அங்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி விஜய்யின் வருகையை ஒட்டி கோவையில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு மட்டும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பேருந்து, கார், இருசக்கர வாகனங்களுக்கு போக்குவரத்து மாற்றம் இல்லை. வழக்கமான பாதையில் பயணிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

ஒட்டன்சத்திரம் வழியாக வரும் வாகனங்கள் உடுமலை-பொள்ளாச்சி வழியாகவும், கரூர் வழியாக வரும் வாகனங்கள் பழனி-பொள்ளாச்சி வழியாகவும் செல்லலாம். திருப்பூரில் இருந்து தென்மாவட்டத்துக்கு செல்லும் கனரக வாகனங்களுக்கு மாற்றுப்பாதை அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் விஜயின் பிரசார வாகனம் செல்லும்போது சில பகுதிகளில் தற்காலிக போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்பதால்  வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ஒத்துழைக்க காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு கனரக வாகனங்கள் ஒட்டன்சத்திரம், கரூர், திருப்பூர், பல்லடம் வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் சேலம், ஈரோடு, திருப்பூர் பகுதிகளில் இருந்து வரும் கனரக வாகனங்கள் கோவையில் நீலாம்பூர் வழியாக நேரடியாக நகருக்கு வர தடை விதிக்கப்பட்டு L&T பைபாஸ் வழியாக செல்ல வேண்டும். அவினாசி சாலை வழியாக செல்லும் வாகனங்களுக்கும் மாற்று வழிகள் கூறப்பட்டுள்ளன. விமான நிலையத்திற்கு செல்லும் பயணிகள் 30 நிமிடங்கள் முன்னதாக வருமாறும், கால் டாக்ஸிகள் விமான நிலையத்தில் நிறுத்த அனுமதியில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை கனரக வாகனங்கள் நகருக்குள் நுழைய முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks