நெல்லையில் இரட்டைக் கொலை... சென்னையில் கொடூரம்! - மக்கள் உயிருக்கு பாதுகாப்பில்லையா? அன்புமணி ஆவேசம்!

நெல்லையில் இரட்டைக் கொலை... சென்னையில் கொடூரம்! - மக்கள் உயிருக்கு பாதுகாப்பில்லையா? அன்புமணி ஆவேசம்!
News Image

நெல்லையில் இரட்டைக் கொலை, சென்னையில் இளைஞர் படுகொலை உள்ளிட்ட தொடர் குற்றச் சம்பவங்களைச் சுட்டிக்காட்டி, தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை நிலைநிறுத்த முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்

நெல்லை டவுன் பகுதியில் மகிழுந்து நிறுத்துவது தொடர்பான மோதலில் இருவர் கொடூரமான முறையில் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளனர்; மேலும் 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் இளைஞர் ஒருவர் அவரது குடும்பத்தினர் முன்னிலையில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார். அண்மைக்காலமாக கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மக்களின் பாதுகாப்பு தொடர்பான அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை டவுன் பகுதியில் இரு குடும்பங்களுக்கு இடையிலான மோதலில் டால்டன், நிகோலஸ் என்ற இரு சகோதரர்கள் குத்திக் கொல்லப்பட்டுள்ளனர். ஐஸ்ஹவுஸ் பகுதியில் அஜித் என்ற இளைஞரைக் கொன்ற 4 பேர் கொண்ட கும்பல், அதைத் தடுக்க முயன்ற அஜித்தின் தாயாரையும் கத்தியால் குத்தியுள்ளது. அதேபோல், சேலத்தில் ஒரு மூதாட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவை அனைத்தும் தடுக்கப்பட்டிருக்க வேண்டிய படுகொலைகள் தான்.

ஒரு மாநிலத்தில் நல்லாட்சி நடப்பதன் அடையாளம் சட்டம் - ஒழுங்கு பாதுகாக்கப்படுவதும், மக்கள் அச்சமின்றி நிம்மதியாக நடமாட முடிவதும் தான். அதற்கு வழியில்லாவிட்டால், அந்த மாநிலத்தில் எத்தனை வசதிகள் இருந்தும் பயனில்லை. தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் ஆகியவற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைப் பார்க்கும் போது மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு எங்கே செல்கிறது? என்ற வினா தான் எழுகிறது.

தமிழகத்தில் காவல்துறை முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், சட்டம்- ஒழுங்கை நிலை நிறுத்துவதும், அப்பாவி மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதும் அவரது கடமை ஆகும். அதை உணர்ந்து தமிழ்நாட்டில் மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு தேவையான நடவடிக்கைகளை முதலமைச்சர் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks